January 06, 2022

ஜபம்-பதிவு-677 (சாவேயில்லாத சிகண்டி-11)

 ஜபம்-பதிவு-677

(சாவேயில்லாத

சிகண்டி-11)

 

(காசி நாடு-

காசி நாட்டு

அரண்மனை-

காசி நாட்டு

மன்னன்

அறையில்

அமைச்சர்

நேரில் சந்திக்க

செல்கிறார்)

 

அமைச்சர்:

வணங்குகிறேன்

அரசே

 

காசி நாட்டு

மன்னன் :

வாருங்கள்

அமைச்சரே

 

அமைச்சர்:

விஷயம்

கேள்விப் பட்டேன்

 

காசி நாட்டு

மன்னன் :

என்ன விஷயம்

 

அமைச்சர்:

அழைப்பிதழ்

செல்லவில்லை

என்று

 

காசி நாட்டு

மன்னன் :

யாருக்கு

 

அமைச்சர்:

அஸ்தினாபுரத்திற்கு

 

காசி நாட்டு

மன்னன் :

உண்மை தான்

 

அமைச்சர்:

அப்படி

என்றால்

அழைப்பிதழ்

செல்லவில்லையா

 

காசி நாட்டு

மன்னன் :

ஆமாம்

 

அமைச்சர்:

அழைப்பிதழ்

செல்லவில்லையா

அல்லது

அனுப்பவில்லையா

 

காசி நாட்டு

மன்னன் :

அனுப்பவில்லை

 

அமைச்சர்:

ஏன்

 

காசி நாட்டு

மன்னன் :

நான் தான்

அனுப்ப

வேண்டாம்

என்று சொன்னேன்

 

அமைச்சர்:

அஸ்தினாபுரம்

நட்பு நாடு

கிடையாது

 

இரத்த சம்பந்தம்

கொண்ட  

உறவு நாடு

அல்லவா

 

காசி நாட்டு

மன்னன் :

உறவை

புதுப்பித்துக்

கொள்ள நான்

விரும்பவில்லை

 

அமைச்சர்:

ஆனால்

பகை உருவாக

காரணம்

ஆகி விடுமே

 

காசி நாட்டு

மன்னன் :

திருமணத்திற்கு

யாரை அழைக்க

வேண்டும்

 

யாரை

அழைக்கக் கூடாது

என்று

பெண்களைப்

பெற்றெடுத்த ஒரு

தந்தை முடிவு

எடுக்கக் கூடாதா

 

தந்தைக்கு

உரிமையில்லையா

 

அமைச்சர்:

நீங்கள் ஒரு

குடும்பத்தின்

தந்தையாக

இருந்தால்

பரவாயில்லை

 

நீங்கள் ஒரு

நாட்டின் மன்னர்

 

மன்னர்

பிள்ளைகளின்

திருமணம்

அரியணையுடன்

பிணைக்கப்பட்டது

 

அன்பு என்ற

கயிற்றால்

பல்வேறு நாடுகளுடன்

இணைக்கப் பட்டது

அரசியல் களத்தில்

தான் திருமணம்

என்பதே

நிச்சயிக்கப் படுகிறது

 

இரத்தம்

சம்பந்தப்பட்ட

உறவு நாடாக

இருந்தாலும்

இரத்தம் சம்பந்தம்

இல்லாத

நட்பு நாடாக

இருந்தாலும்

திருமணத்தின்

மூலமே

அரசுகள்

பலப்படுத்தப்

படுகிறது

 

காசி நாட்டு

மன்னன் :

அதனால்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

ஜபம்-பதிவு-676 (சாவேயில்லாத சிகண்டி-10)

 ஜபம்-பதிவு-676

(சாவேயில்லாத

சிகண்டி-10)

 

பீஷ்மர் :

இரண்டு

தினங்களுக்குள்

 

சத்தியவதி :

அதுவரை

 

பீஷ்மர் :

பொறுத்திருப்போம்

 

சத்தியவதி :

எதற்காக

 

பீஷ்மர் :

இரண்டு

தினங்களுக்குள்

மாற்றம் நிகழலாம்

அல்லவா

 

சத்தியவதி :

மாற்றம்

நிகழுமா

 

பீஷ்மர் :

சில

விஷயங்களை

நாம்

காலத்திடம்

ஒப்படைத்து

விட வேண்டும்

 

காலம் தான்

அனைத்திற்கும்

மருந்து

 

காலம் தான்

அனைத்து

பிரச்சினைகளுக்கும்

தீர்வு

 

காலம் தான்

அனைத்து

கேள்விகளுக்கும்

விடை

தர முடியும்

 

குற்றம்

சுமத்தப்பட்ட

குற்றவாளிக்கு

அவன்

குற்றமற்றவன்

என்பதை

நிரூபிக்க

வாய்ப்பு

தரப்படும் போது

ஏன்

காசி நாட்டு

மன்னனுக்கு

நாம் ஒரு

வாய்ப்பு

தரக்கூடாது

அவன் தன்னை

குற்றமற்றவன்

என்பதை

நிரூபிக்க

 

காசி நாட்டு

மன்னனுக்கு

இரண்டு

தினங்கள்

தருவோம்

 

அழைப்பிதழ்

வரவில்லை

எனில்

அவன் குற்றவாளி

என்று முடிவு

எடுப்போம்

 

அழைப்பிதழ்

வந்தால்

அவன்

குற்றமற்றவன்

என்று

முடிவு

எடுப்போம்

 

காத்திருப்போம்

 

இரண்டு தினங்கள்

பொறுத்திருப்போம்

 

பின்னர் முடிவு

எடுப்போம்

 

சத்தியவதி :

அழைப்பிதழ்

வரவில்லை

எனில்

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்தை

அவமதிக்கும்

நாட்டுக்கு

எத்தகைய

விளைவுகள்

ஏற்படும்

என்பதை

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

தெரிந்து

கொள்வார்கள்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

ஜபம்-பதிவு-675 (சாவேயில்லாத சிகண்டி-9)

 ஜபம்-பதிவு-675

(சாவேயில்லாத

சிகண்டி-9)

 

சத்தியவதி :

மற்ற நாடுகளைப்

போல்

அல்லவே

அஸ்தினாபுரம்

 

காசி நாட்டுடன்

அஸ்தினாபுரம்

இரத்த

சம்பந்தம்

கொண்ட

உறவு முறை

கொண்ட

நாடு ஆயிற்றே

 

சம்பிரதாயப்படி

பார்த்தாலும்

சாஸ்திரப்படி

பார்த்தாலும்

உலக

வழக்கப்படி

பார்த்தாலும்

அஸ்தினாபுரத்திற்கே

முதலில்

அழைப்பிதழ்

அனுப்பப்பட்டு

இருக்க வேண்டும்

 

அஸ்தினாபுரத்திற்குத்

தான்

முதலில்

முதல் மரியாதை

செய்யப்பட்டு

இருக்க

வேண்டும்

 

ஆனால்

செய்யவில்லை

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்தை

அவமதிக்கும்

விதத்தில்

காசி நாட்டு

மன்னன்

நடந்து கொண்டு

இருக்கிறான்

என்று

நினைக்கிறீர்களா

 

சத்தியவதி :

காசி நாட்டு

மன்னனின்

செய்கையை

பார்க்கும் போது

அப்படித் தான்

நினைக்கத்

தோன்றுகிறது

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரத்தை

அவமதிப்பதால்

உண்டாகும்

பகையின்

உக்கிரத்தை

காசி நாடு

தங்காது என்று

காசி நாட்டு

மன்னனுக்கு

தெரியுமே

 

சத்தியவதி :

தெரிந்திருந்தால்

அவன்

அவ்வாறு

செய்து இருக்க

மாட்டான்

அல்லவா

 

பீஷ்மர் :

தவறு எங்கே

நிகழ்ந்து

இருக்கிறது

என்று

தெரியவில்லை

 

தவறுக்கான

காரணம்

புரியவில்லை

 

தவறை

காசி நாட்டு

மன்னன்

செய்து

இருக்கிறானா

தெரியவில்லை

 

சத்தியவதி :

என்ன

சொல்ல

வருகிறாய்

பீஷ்மா

 

பீஷ்மர் :

பொறுத்திருந்து

பார்ப்போம்

அழைப்பிதழ்

வருகிறதா

என்று

 

சத்தியவதி :

வரவில்லை

எனில்

 

பீஷ்மர் :

அழைப்பிதழ்

அனுப்ப

மறந்து விட்டானா

 

அல்லது

 

அஸ்தினாபுரத்தை

அவமானப்படுத்தும்

வகையில்

நடந்து கொண்டு

இருக்கிறானா

காசி நாட்டு

மன்னன்

என்பதை

அறிய

முற்படலாம்

 

சத்தியவதி :

அறிந்து

 

பீஷ்மர் :

உண்மையை

உணரலாம்

 

சத்தியவதி :

எவ்வளவு

காலத்திற்குள்

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////

ஜபம்-பதிவு-674 (சாவேயில்லாத சிகண்டி-8)

 ஜபம்-பதிவு-674

(சாவேயில்லாத

சிகண்டி-8)

 

(சத்தியவதி

அறை-

சத்தியவதியைப்

பார்ப்பதற்காக

பீஷ்மர்

வருகிறார்)

 

பீஷ்மர் :

வணங்குகிறேன்

தாயே !

 

சத்தியவதி :

என் ஆசிர்வாதம்

உனக்கு

எப்போதும்

உண்டு மகனே

நீடூழி வாழ்க!

 

(ஆசிர்வாதம்

செய்கிறாள்)

 

விஷயம்

கேள்விப்பட்டாயா

மகனே?

 

பீஷ்மர் :

அனுதினமும்

இந்த

உலகத்தில்

ஆயிரக்கணக்கான

விஷயங்கள்

நடந்து கொண்டு

தானே

இருக்கிறது

 

அதில்

எதைப் பற்றிச்

சொல்கிறீர்கள்

தாயே

 

சத்தியவதி :

நான் சொல்ல

வந்தது

 

காசி நாட்டைப்

பற்றி

 

காசி நாட்டு

மகாராஜனைப்

பற்றி

 

காசி நாட்டு

மகாராஜனின்

மூன்று

மகள்களைப்

பற்றி

 

காசி நாட்டு

மகாராஜன்

தன் மூன்று

மகள்களான

 

அம்பை,

அம்பிகை,

அம்பாலிகை

 

ஆகியோருக்கு

திருமணம்

செய்வதற்காக

சுயம்வரம்

நடத்துவதற்கான

ஏற்பாடுகளைச்

செய்து

கொண்டிருப்பதைப்

பற்றி

 

அனைத்து

நாடுகளுக்கும்

அழைப்பிதழ்

அனுப்பி விட்டு

அஸ்தினாபுரத்திற்கு

அழைப்பிதழ்

அனுப்பாததைப்

பற்றி

 

பீஷ்மர் :

ஒரு வேளை

அஸ்தினாபுரத்தில்

திருமண

வயது வந்த

அரசர்கள்

இளவரசர்கள்

யாரும் இல்லை

என்று நினைத்து

இருக்கலாம்

 

சத்தியவதி :

விசித்ர வீர்யன்

இருப்பதை

மறந்து

விட்டார்களா

 

பீஷ்மர் :

மறந்து விட்ட

காரணத்தினால்

தான் காசி

நாட்டு மன்னன்

அஸ்தினாபுரத்திற்கு

அழைப்பிதழ்

அனுப்பவில்லை

என்று

நினைக்கிறீர்களா?

 

சத்தியவதி :

வேறு என்ன

நினைக்கத்

தோன்றும்?

 

பீஷ்மர் :

அழைப்பிதழ்

அனுப்பி

இருப்பார்கள்.

வருவதற்கு

காலதாமதம்

ஏற்பட்டு

இருக்கிறது

இரண்டு மூன்று

நாள்களில்

வந்துவிடும்

என்று

கூட

நினைக்கலாமே

 

சத்தியவதி :

நான் அவ்வாறு

நினைக்கவில்லை

 

பீஷ்மர் :

ஏன்

 

சத்தியவதி :

நம் நாட்டை

விட்டு

வெகுதூரத்தில்

உள்ள

நாடுகளுக்கு

எல்லாம்

அழைப்பிதழ்

சென்று

இருக்கிறதே

 

பீஷ்மர் :

அஸ்தினாபுரம்

அருகில்

உள்ள நாடு

தானே

அழைப்பிதழை

பொறுமையாக

அனுப்பலாம்

 

தொலை தூர

நாடுகளுக்கு

முதலில்

அழைப்பிதழ்

அனுப்பலாம்

என்று

முடிவெடுத்து

இருக்கலாம்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------06-01-2022

/////////////////////////////////