August 18, 2024

ஜபம்-பதிவு-1015 மரணமற்ற அஸ்வத்தாமன்-147 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1015

மரணமற்ற அஸ்வத்தாமன்-147

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

 

உன்னை எப்படி கர்ணனுடன் ஒப்பிட முடியும்.

உன்னை கர்ணனுடன் ஒப்பிடவே கூடாது.

கர்ணனுடன் ஒப்பிடும் அளவிற்கு உனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

கர்ணனுடன் உன்னை ஒப்பிடும் அளவுக்கு

நீ ஒன்றும் வீரத்தில் சிறந்தவன் இல்லை.

நீ ஒரு அடிமை.

கிருஷ்ணனின் அடிமை.

கிருஷ்ணன் சொன்னதைச் செய்யும் அடிமை

சுயபுத்தி இல்லாத அடிமை.

 

குருஷேத்திரப் போர்க்களத்தில் வில்லை எடுத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தாய். நான் வீரன் வீரன் என்று சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தாய். நீ எல்லாம் வீரத்தைப் பற்றிப் பேசுகிறாய். வேடிக்கையாக இருக்கிறது

 

கிருஷ்ணன் உனக்கு சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே அஸ்வத்தாமன் மரணமற்றவன்

அவனைக் கொல்ல முடியாது

அவனை அடிமைப்படுத்த முடியாது.

அவனை வீழ்த்த முடியாது.

அவனை சூழ்ச்சி செய்து நாட்டை விட்டுத் தான் துரத்த முடியும் என்று சொல்லி இருப்பானே.

 

என்னை எப்படி சூழ்ச்சி செய்து விரட்டுவது என்று சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே.

 

சூழ்ச்சி செய்து தானே அனைவரையும் வீழ்த்தினீர்கள், சூழ்ச்சி செய்து தானே அனைவரையும் கொன்றீர்கள். அதனால் என்னையும் எப்படி சூழ்ச்சி செய்து விரட்டுவது என்பதை சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே அந்த சூழ்ச்சி மேதை கிருஷ்ணன்.

 

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் கிருஷ்ணன் அதை செயல்படுத்துவதில் வல்லவர்கள் நீங்கள்.

 

இப்போது என்னை விரட்ட எந்த சூழ்ச்சியுடன் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்குத் தான் வீரம் என்பதே கிடையாதே.

 

அர்ஜுனா!

நான் வீரன், நான் வீரன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாயே! உனக்கு வெட்கமாக இல்லை.

 

நீயெல்லாம் ஒரு வீரன்

உன்னையும் வீரன் என்று நம்பிக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது.

உன்னைப் போற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

உன்னை வாழ்த்துவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

ஒன்றும் அறியாத அடிமைக் கூட்டம்

உன்னை வீரன் என்று நம்பிக் கொண்டு இருக்கிறது.

 

வீரம் இல்லாத உனக்கு வில் எதற்கு? எதற்காக வில்லை கையில் எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறாய். சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதற்கு கைகளில் வில். அதை கீழே எறிந்து விட்டு சூழ்ச்சியை செயல்படுத்து..

 

அர்ஜுனன் : போதும் பேசுவதை நிறுத்து அஸ்வத்தாமா! உனக்கு பேச மட்டும் தான் தெரியும்.

 

அஸ்வத்தாமன் : ஆமாம் எனக்கு உண்மையை பேசத் தெரியும்,

வீரம் என்றால் என்ன என்று தெரியும்

வீரம் இல்லாதவர்கள் யார் என்று தெரியும்

வீரத்துடன் போரிடாதவர்கள் யார் என்று தெரியும்

வீரம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் யார் என்று தெரியும்

வீரர்களைப் பார்த்து பயப்படுபவர்கள் யார் என்று தெரியும்

 

சூழ்ச்சி செய்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சியை உணர்ந்து கொள்ளத் தெரியும்

சூழ்ச்சி செய்பவர்களுடன் கூட்டு வைத்திருப்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து வெற்றி பெற நினைப்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து கொல்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து கொன்றவர்கள் யார் என்று தெரியும்

 

(அர்ஜுனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது.

 

சண்டையின் உச்சகட்டத்தில் பிரம்மாஸ்திரத்தை அஸ்வத்தாமன் விட அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை விடுகிறான்)

 

வேத வியாசர் : அர்ஜுனா, அஸ்வத்தாமா இருவரும் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்.

 

அஸ்வத்தாமன் : எதற்காக நான் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

 

அர்ஜுனனையும், பாண்டவர்களையும் அழிப்பதற்காகத் தானே செலுத்தினேன்.

அவர்களைக் கொல்வதற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இறக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கொல்வதற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால் மேலும் மேலும் அக்கிரங்களைச் செய்து கொண்டிருப்பார்கள் என்ற காரணத்தினால் தானே செலுத்தினேன்.

 

சூழ்ச்சிகள் செய்து இன்னும் பல குடும்பங்களை அழிப்பார்கள் என்ற காரணத்திற்காகத் தானே செலுத்தினேன்.

 

பாண்டவர்களைக் கொல்வேன் என்று துரியோதனனுக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தானே செலுத்தினேன்.

 

இதில் என்ன தவறு இருக்கிறது

 

இதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

ஜபம்-பதிவு-1014 மரணமற்ற அஸ்வத்தாமன்-146 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1014

மரணமற்ற அஸ்வத்தாமன்-146

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

பாண்டவர்களைக் கொல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாண்டவர்களின் வாரிசுகளையாவது கொன்றேனே அதுவே எனக்குப் போதும்.

அன்று இரவில் நீங்கள் ஐவரும் இருந்திருந்தால் அனைவரும் கொல்லப்பட்டு இருப்பீரகள் என்று கிருஷ்ணனுக்குத் தெரியும்

என்னை எதிர்த்து உங்களால் போரிட்டு ஜெயிக்க முடியாது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்.

என்னுடன் சண்டையிட்டு நீங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்.

என்னை எதிர்த்து சண்டையிட்டால நீங்கள் இறந்து விடுவீர்கள் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்,

உங்கள் உயிரைக் காப்பாற்ற கிருஷ்ணன் உங்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். மறைவான இடத்தில் கொண்டு சென்று உங்களை மறைத்து வைத்து விட்டான்.

நீங்களும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி போய் ஒளிந்து கொண்டீர்கள்.

உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்ட நீங்கள் கோழைகளா? அல்லது உங்களை அழிக்க வந்த நான் கோழையா?

நீங்கள் தான் கோழைகள். வீரர்கள் போல நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை வீரர்கள் போல் இந்த உலகத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

உங்களுடைய போலி நாடகத்தை நம்பி ஏமாந்து, இந்த உலகமும் உங்களை வீர்ர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது.

உங்களை வாழ்த்திக் கொண்டு இருக்கிறது. போற்றிக் கொண்டு இருக்கிறது.

அர்ஜுனா!

ஜெயத்ரதனை சூரிய உதயத்திற்குள் கொல்வேன் அப்படி என்னால் கொல்ல முடியவில்லை என்றால் தீயில் விழுந்து இறந்து போவேன் என்று வீரவேசமாக சபதம் எடுத்து விட்டு

 

ஜெயத்ரதனை நெருங்க முடியாமல், ஜெயத்ரதனைக் கொல்ல முடியாமல், எங்கே தோற்று விடுவோமோ? நெருப்பில் இறங்கி இறந்து இறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து 

 

என் தந்தையின் காலில் விழுந்து, அழுது புரண்டு, நீதி என்றும். நியாயம் என்றும், தர்மம் என்றும், பேசி, உயிர் வாழ்வதற்குப் பிச்சை கேட்டு,

 

உங்கள் சீடனுக்கு இந்த நிலை ஏற்படலாமா என்று கதறி கண்ணீர் விட்டு என் தந்தையின் காலைப் பிடித்துக் கதறியதால், நீ செல்வதற்கு என் தந்தை வழி விட்டார்.

 

பின்னர் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் சூரியனை மறைத்து ஜெயத்ரதனை வெளியே வரச்செய்து ஜெயத்ரதன் வெளியே வந்ததும், சூரியன் இன்னும் அஸ்தனமம் ஆகவில்லை ஜெயத்ரதனைக் கொல் என்று கிருஷ்ணன் சொன்னதும், சுயபுத்தி இல்லாமல் ஜெயத்ரதனைக் கொன்றாயே நீ தானடா கோழை.

 

கர்ணன் ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த போது கர்ணனைக் கொன்றாயே நீ தான் கோழை.

 

அர்ஜுனா

இந்த 18 நாள் நடந்த குருஷேத்திரப் போரில் உருப்படியாக என்ன செய்தாய்.  உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை.

எந்த ஒரு சாதனையையும் செய்யவில்லை. வீரத்துடன் போரிடவில்லை. நேர்மையாக யாரையும் கொல்லவில்லை.

கிருஷ்ணன் போரிடு என்று சொல்லும் போது போரிட்டாய்.

கிருஷ்ணன் போரிடாதே என்று சொல்லும் போது போரிடவில்லை.

 

கிருஷ்ணன் அம்பை விடு என்று சொல்லும் போது அம்பை விட்டாய்.

கிருஷ்ணன் அம்பை விடாதே என்று சொல்லும் போது அம்பை விடவில்லை.

 

கிருஷ்ணன் எதிரியைக் கொல் என்று சொல்லும் போது எதிரியைக் கொன்றாய்.

கிருஷ்ணன் எதிரியைக் கொல்லாதே என்று சொல்லும் போது எதிரியைக் கொல்லவில்லை.

 

சொல்லப்போனால் இந்தப் போரில் நீ சுயமாக எதுவும் செய்யவில்லை. சொந்தமாக செயல்படவில்லை. சுயபுத்தியுடன் போரிடவில்லை.

 

கிருஷ்ணனுக்கு அடிமையாக இருந்தாய். கிருஷ்ணன் சொல்லியதை செயல்படுத்தினாய். கிருஷ்ணன் சொன்னபடி நடந்து கொண்டாய்.

 

கிருஷ்ணன் உன்னை இயக்கினான். நீ இயங்கினாய். கிருஷ்ணனின் கைப்பாவையாக இருந்தாய்.

 

கிருஷ்ணன் செய்த சூழ்ச்சியை நீ செயல்படுத்தினாய். அவ்வளவு தான் இந்தப் போரில் எங்கே உன் வீரம் வெளிப்பட்டது. எங்கேயும், எந்த இடத்திலும் உன்னுடைய வீரம் வெளிப்படவேயில்லை.

 

பீஷ்மரை சிகண்டி கொன்றான்

என் தந்தை துரோணரை திருஷ்டத்யும்னன் கொன்றான்

சல்லியனை தர்மர் கொன்றான்

துரியோதனனையும் மற்ற கௌரவர்கள் 99 பேரையும் பீமன் கொன்றான்

 

இந்தப் போரில் என்ன பெரியதாக சாதித்து விட்டாய். இந்தப் போரில் நீ ஒன்றுமே சாதிக்கவில்லை.

 

 

உன்னை கர்ணனுடன் ஒப்பிடுகிறார்கள். அது தவறானது. கேவலமானது. வெட்கக் கேடானது. உன்னை கர்ணனுடன் ஒப்பிடவே கூடாது.

 

கர்ணன் போரில் தனியாக சுயபுத்தியுடன் போரிட்டான். வீரத்துடன் போரிட்டான். நேர்மையாக போரிட்டான். ஆனால் நீ கிருஷ்ணன் சொன்னதைச் செய்தாய். கிருஷ்ணனுக்கு அடிமையாக செயல்பட்டாய். கிருஷ்ணனின் சூழ்ச்சிகளைச் செயல்படுத்தினாய்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

ஜபம்-பதிவு-1013 மரணமற்ற அஸ்வத்தாமன்-145 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1013

மரணமற்ற அஸ்வத்தாமன்-145

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

(வேத வியாசர் ஆசிரமத்திற்கு தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், கிருஷ்ணன் ஆகியோர் வந்து விட்டனர்.)

அர்ஜுனன் : அஸ்வத்தாமா! நீயெல்லாம் ஒரு வீரனா? இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை கொன்று இருக்கிறாயே நீ வீரனே கிடையாது.  வீரன் என்று சொல்வதற்கே தகுதி இல்லாதவன். நீ ஒரு கோழை?

அஸ்வத்தாமன் : யாரடா கோழை. நீ தான் கோழை. பாண்டவர்கள் தான் கோழைகள். பாண்டவர்களுடன் சேர்ந்த அனைவரும் தான் கோழைகள்.

உங்களுக்கு வீரம் என்ற ஒன்று இருந்திருந்தால் வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்று இருப்பீர்கள். உங்களுக்கு வீரம் என்ற ஒன்று இல்லாத காரணத்தினால் தான் சூழ்ச்சிகள் செய்து வெற்றி பெற்று இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் கோழைகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

நீங்கள் அனைவரும் கோழைகள். வீரம் என்ற வார்த்தையைச் சொல்வதற்கு உங்களில் யாருக்கும் தகுதியே இல்லை.

நான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்களைக் கொல்லவில்லை.

தூங்குபவர்களைக் கொல்லும் அளவுக்கு நான் கோழையும் இல்லை, கொடியவனும் இல்லை, இரக்கமற்றவனும் இல்லை. உங்களைப் போல சூழ்ச்சி செய்து கொல்லும் அளவுக்கு நான் கெட்டவனும் இல்லை.

நான் தூங்கிக் கொண்டிருந்தவர்களைக் கொல்லவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பித் தான் கொன்றேன்.

தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பித் தான் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று எண்ணித் தான் கொன்றேன்.

கொல்வது யார் என்று தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களைக் கொன்றேன்.

அஸ்வத்தாமன் தான் அவர்களைக் கொன்றான் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று எண்ணத்தில் தான் அவர்களைக் கொன்றேன்

 

தாங்கள் அஸ்வத்தாமனின் கைகளால் தான் சாகிறோம் என்பதைத் தெரிந்து தான் சாக வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கொன்றேன்.

ஆனால், பாண்டவர்களை தூக்கத்தில் இருந்து எழுப்பித் தான் கொல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

அந்த எண்ணம் எனக்கு ஏற்படவும் இல்லை.  

அவர்களை தூக்கத்திலேயே கொல்ல வேண்டும் என்று நினைத்துத் தான் கொன்றேன்.

தங்களைக் கொன்றவர் யார் என்று தெரியாமல் தான் பாண்டவர்கள் சாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களைக் கொன்றேன்.

தங்களுக்கு இறப்பு யாரால் வந்தது, எதனால் வந்தது, எந்த காரணத்திற்காக வந்தது, யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள், என்ற காரணம் கூட அவர்களுக்குத் தெரியக் கூடாது என்ற காரணத்திற்காகத் தான் பாண்டவர்களை தூங்கும் போது கொன்றேன்.

பாண்டவர்களைக் கொல்கிறேன் என்று நினைத்துத் தான் கொன்றேன். ஆனால் நான் கொன்றது பாண்டவர்களை அல்ல. பாண்டவர்களின் பிள்ளைகளை என்பது எனக்கு பிறகு தான் தெரிந்தது.

நான் நினைத்தது தவாறாகி விட்டது என்பது தெரிந்தது. பாண்டவர்களைக் கொல்லத் தவறி விட்டேன் என்பது தெரிந்தது. பாண்டவர்களைக் கொல்லாமல் மிகப்பெரிய தவறைச் செய்து விட்டேன் என்று தெரிந்தது.

நான் பாண்டவர்களைக் கொல்ல வருகிறேன் என்று தெரிந்ததும், பாண்டவர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக பாண்டவர்களை ஒளிய வைத்து விட்டான் கிருஷ்ணன்.

என் கையால் பாண்டவர்கள் சாகக் கூடாது என்ற காரணத்திற்காக பாண்டவர்களை ஒளிய வைத்து விட்டான் கிருஷ்ணன்.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாண்டவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். பாண்டவர்கள் உயிரைக் காப்பாற்ற அவர்களை ஒளிய வைத்தது கிருஷ்ணன் தான்

பாண்டவர்கள் உண்மையாகவே வீரர்களாக இருந்திருந்தால் அன்று கூடாரத்தில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் கோழைகள். உயிருக்கு பயந்த கோழைகள்.

அஸ்வத்தாமன் தங்களைக் கொல்ல வருகிறான் என்று தெரிந்ததும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிந்து கொண்டார்கள். அதற்கு உதவி செய்தது கிருஷ்ணன்.

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

ஜபம்-பதிவு-1012 மரணமற்ற அஸ்வத்தாமன்-144 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1012

மரணமற்ற அஸ்வத்தாமன்-144

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

வேத வியாசர் : யார் வீரன் என்பது இங்கே முக்கியம் இல்லை. அதிகமான அழிவை ஏற்படுத்தக் கூடிய அஸ்திரங்களை உணர்ச்சிவயப்பட்டு பயன்படுத்தி விடப்போகிறீர்கள் என்ற காரணத்திற்காக உன்னை இங்கே இருக்கச் சொல்கிறேன்.

அஸ்வத்தாமன் : பாண்டவர்கள் என்னை கோழை என்று நினைக்க மாட்டார்களா

வேத வியாசர் : மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால் நம்மால் இந்த உலகத்தில் வாழவே முடியாது

இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானவரகள்

நம்மை தவறாக பேசிக் கொண்டு தான் இருப்பார்கள்

நம்மைக் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள்

நம்மை ஏளனப் படுத்திக் கொண்டு தான் இருப்பார்கள்.

நம்மை அவமானப் படுத்திக் கொண்டு தான் இருப்பார்கள்.

நம்மை அசிங்கப் படுத்திக் கொண்டு தான் இருப்பார்கள்.

இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நாம் நம்முடைய கடமையைச் செய்தால் மட்டுமே நம்மால் இந்த உலகத்தில் வாழ முடியும்

சாதனைகள் செய்ய முடியும்

ஆகவே பாண்டவர்கள் உன்னை என்ன சொல்வார்கள் என்று நினைக்காதே

நான் சொல்வதைக் கேள்

பாண்டவர்கள் இங்கு வரட்டும் அது வரை நீ இங்கேயே இரு

 அஸ்வத்தாமன் : சரி முனிவரே உங்கள் வார்த்தைக்கு நான் கட்டுப்படுகிறேன்.

பாண்டவர்கள் இங்கு வரும் வரை நான் இங்கேயே இருக்கிறேன்

(என்று அஸ்வத்தாமன் வேத வியாசர் ஆசிரமத்தில் இருக்கிறான்)

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

ஜபம்-பதிவு-1011 மரணமற்ற அஸ்வத்தாமன்-143 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

ஜபம்-பதிவு-1011

மரணமற்ற அஸ்வத்தாமன்-143

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

(வேத வியாசர் ஆசிரமம்)

அஸ்வத்தாமன் : பிரயாச்சித்தம் செய்ய வந்திருக்கிறேன்

வேத வியாசர் ; பாவம் செய்தால் தான் பிராயச் சித்தம் செய்ய வேண்டும். பாவம் உண்டாகும் அளவுக்கு அப்படி என்ன பெரிய பாவத்தைச் செய்து விட்டாய்.

அஸ்வத்தாமன் : ஆமாம் மிகப்பெரிய பாவத்தைச் செய்து விட்டு வந்து இருக்கிறேன்

நீக்க முடியாத பாவத்தைச் செய்து விட்டு வந்திருக்கிறேன்.

அந்த பாவத்தின் விளைவு என்னை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிராயச்சித்தம் செய்ய வந்திருக்கிறேன்.

வேத வியாசர் : அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயப்படுதல் ஆகியவற்றின் மூலம் தான் ஒருவன் பாவம் செய்கிறான்.

இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் தாங்கள் எந்த நிலையில் இருந்து பாவம் செய்தோம் என்று தெரியாமல் பாவம் செய்கிறார்கள்.

இந்த மூன்றில் எதன் மூலம் நீ பாவம் செய்தாய் என்று உனக்குத் தெரிகிறதா.

நீ செய்த பாவம் இதில் எதில் அடங்குகிறது என்று தெரிகிறதா.

உணர்ச்சி வயப்பட்டு செய்தேன் உணர்ச்சி இருந்ததால் என் நண்பனுக்காக செய்தேன்.

இந்த மூன்றில் எந்த ஒன்றில் பாவம் செய்தாலும், பிராயச்சித்தம் செய்தால் மட்டும் போதாது.

மேல் பதிவு போட வேண்டும். அடியோடு அழிக்க வேண்டும்.

அப்போது தான் நாம் செய்த பாவத்தின் விளைவு மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு நமக்குத் துன்பத்தைக் கொடுக்காது.

அஸ்வத்தாமன் : என்னால் இப்போது பிராயச்சித்தம் தான் செய்ய முடியும். அதனால், நான் இப்போது பிராயச் சித்தம் செய்து விடுகிறேன்.

தேவைப்படும் போது மேல் பதிவு போடுகிறேன்.

இறுதியாக அடியோடு அழிப்பதற்கு தவம் செய்ய காட்டிற்கு சென்று விடுகிறேன்.

இப்போது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள் முனிவரே

வேத வியாசர் : என்ன பாவம் செய்து இருக்கிறாய்

அஸ்வத்தாமன் : பாண்டவர்களைக் கொன்று விட்டேன்

வேத வியாசர் : அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நினைக்கிறாயா

அஸ்வத்தாமன் : ஆமாம்

வேத வியாசர் :  அவர்கள் இறக்கவில்லை

அஸ்வத்தாமன் : நான் செல்கிறேன்

வேத வியாசர் : எங்கே செல்கிறாய்

அஸ்வத்தாமன் : என்னுடைய கடமை இன்னும் முடியவில்லை. துரியோதனனுக்கு நான் கொடுத்த வாக்கு இன்னும் பாக்கி இருக்கிறது

அதை நிறைவேற்ற போகிறேன்

வேத வியாசர் : நீ போக வேண்டிய அவசியம் இல்லை

அஸ்வத்தாமன் : ஏன்

வேத வியாசர் : நீ இங்கு தான் இருக்கிறாய் என்பது பாண்டவர்களுக்குத் தெரிந்து விட்டது

உன்னைத் தேடி இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அஸ்வத்தாமன் : நான் அவர்களைத் தேடிச் செல்கிறேன்

வேத வியாசர் : எதற்காக

அஸ்வத்தாமன் : நான் இங்கே வந்து மறைந்து இருக்கிறேன். இந்த ஆசிரமத்தில் உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டு இருக்கிறேன். நான் ஒரு கோழை என்று நினைத்து விடுவார்கள்

வேத வியாசர் : நீ இங்கு இருப்பது தான் பாதுகாப்பு

அஸ்வத்தாமன் : யாருக்கு

வேத வியாசர் : அனைவருக்கும்

அஸ்வத்தாமன் : அனைவருக்கும் என்றால்

வேத வியாசர் : இந்த உலகத்தில் உள்ள மனிதர்களுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும்

 அஸ்வத்தாமன் : எதற்காக அவ்வாறு சொல்கிறீர்கள்

வேத வியாசர் : தெய்வீக அஸ்திரங்கள் உங்கள் இருவரிடமும் உள்ளது அதை பயன்படுத்தி விட்டால் உலகம் அழியக் காரணமாகி விடும்

அஸ்வத்தாமன் : விஷ்ணுவுக்குரிய அஸ்திரம் நாராயண அஸ்திரம்,

பிரம்மாவிற்குரிய அஸ்திரம் பிரம்மாஸ்திரம்,

சிவனுக்குரிய அஸ்திரம் பாசுபதாஸ்திரம்,

மும்மூர்த்திகளுக்குரிய அஸ்திரங்களை வைத்திருப்பவன்

நான் மட்டுமே

இந்த அஸ்வத்தாமன் மட்டுமே

 

பிரம்மாஸ்திரம் கற்றவன் மனிதரில் சிறந்தவன்,

நாராயண அஸ்திரம் தெரிந்தவன் தேவர்களுக்கு சமமானவன்,

பாசுபதம் கற்றவன் தேவர்களையே அழிக்கும் வல்லமை பெற்றவன்.

 

இந்த யுகத்தில்

நாராயணாஸ்திரம்,

பிரம்மாஸ்திரம்,

பாசுபதாஸ்திரம்

பெற்ற ஒரே ஒரு வீரன்

இந்த அஸ்வத்தாமன் மட்டுமே.!

 

இந்த யுகத்தில் இந்த மூன்று அஸ்திரங்களும் என்னிடம் மட்டுமே உள்ளது

இந்த மூன்று அஸ்திரங்களையும் வைத்திருக்கும் நான் ஏன் பயப்பட வேண்டும்.

 

பாண்டவர்கள் தான் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும். அர்ஜுனன் தான் என்னிடம் சண்டையிட பயப்பட வேண்டும்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

  

ஜபம்-பதிவு-1010 மரணமற்ற அஸ்வத்தாமன்-142 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1010

மரணமற்ற அஸ்வத்தாமன்-142

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

சூரிய அஸ்தனமத்திற்குள் ஜெயத்ரதனைக் கொல்வேன் அப்படிக் கொல்லாவிட்டால் தீ மூட்டி இறப்பேன் என்று அர்ஜுனன் சபதம் செய்தான் அந்த சபதத்தை எடுப்பதற்கு முன்னால் அதை அவனால் செய்ய முடியுமா என்பதை அர்ஜுனன் யோசிக்க வேண்டாமா

அவன் யோசிக்கவில்லை. கௌரவர்களின் பெரும்படையைத் தாண்டி ஜெயத்ரதனைக் கொல்ல முடியுமா என்று யோசித்தானா யோசிக்கவில்லை.

துரோணர் தளபதியாக இருக்கும் போது ஜெயத்ரதனை நெருங்க முடியுமா என்று யோசித்தானா யோசிக்கவில்லை

அர்ஜுனன் எதையுமே யோசிக்கவில்லை. உணர்ச்சிவயப்பட்டு சபதம் எடுத்தான்

உணர்ச்சி வயப்பட்டு செய்யும் செயல்கள் மட்டுமல்ல சபதமும் தவறானது  தான் என்பதை ஏன் நீங்கள் உணரவில்லை.

சூரியனை மறைத்து ஜெயத்ரனை வெளியில் வரவழைத்தேன் அதன் பிறகு தான் அர்ஜுனனால் ஜெயத்ரதனைக் கொல்ல முடியாது,

சபதம் எடுப்பதற்கு முன்னால் நம்மால் அந்த சபதத்தை நிறைவேற்ற முடியுமா என்று ஆராய்ந்து பார்த்த பிறகு தான் சபதம் எடுக்க வேண்டும்.

நம்மால் அந்த சபதத்தை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தால் நாம் சபதம் எடுக்கவே கூடாது

உணர்ச்சி வயப்பட்டு எடுக்கும் எந்த ஒன்றும் உருப்படாது என்பதற்கு நீங்கள் அனைவரும் எடுக்கும் சபதம் தான் சாட்சி

அந்த வரிசையில் நீ சபதம் எடுக்கிறாய் அவனை அடிமையாக கொண்டு வந்தால் தான் சாப்பிடுவேன், உறங்குவேன் என்கிறாய்

உங்களைத் திருத்தவே முடியாது. எவ்வளவு சொன்னாலும் நீங்கள் திருந்தவே மாட்டீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பீமன் : நான் செல்கிறேன், அஸ்வத்தாமனை நாட்டை விட்டுத் துரத்துகிறேன்.

பாஞ்சாலி : அதை நான் எப்படி நம்புவது

பீமன் : நீ நம்ப நான் என்ன செய்ய வேண்டும் பாஞ்சாலி.

பாஞ்சாலி : அஸ்வத்தாமன் நெற்றியில் ஒரு ஸயந்தகமணி இருக்கிறது. அது அற்புதங்கள் நிறைந்தது. அது எனக்கு வேண்டும்.

பீமன் : அதைக் கொண்டு வருகிறேன்.

(என்று சொல்லி விட்டு பீமன் ரதத்தில் ஏறினான். நகுலன் சாரதியானான். அஸ்வத்தாமனை தேடிப் புறப்பட்டான்.

கிருஷ்ணன் தர்மரிடம் பேசினார்.)

கிருஷ்ணன் : பீமன் தனியாகச் செல்வது சரியான செயல் கிடையாது. பீமன் மரணத்தை தானே சென்று வாங்குவது போல் உள்ளது.

அஸ்வத்தாமனை யாராலும் வீழ்த்த முடியாது. அவனிடம் அற்புத ஆயுதங்கள் உள்ளது.

தெய்வீக அஸ்திரங்கள் உள்ளது. அதை பீமனால் சமாளிக்க முடியாது.

அர்ஜுனா உன்னால் மட்டும் தான் அஸ்வத்தாமனை சமாளிக்க முடியும். வா கிளம்பலாம்.

மரணத்தைத் தேடிச் சென்ற பீமனை மரணம் நெருங்குவதற்கு முன்னர் பீமனை தடுப்போம். வா

(என்று கிருஷ்ணன் அர்ஜுனன், தர்மர் ஆகியோரைக் கூட்டிக் கொண்டு ரதத்தில் ஏறி புறப்பட்டனர்.)  

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

ஜபம்-பதிவு-1009 மரணமற்ற அஸ்வத்தாமன்-141 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1009

மரணமற்ற அஸ்வத்தாமன்-141

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

கிருஷ்ணன் : அஸ்வத்தாமனை யாராலும் தடுக்க முடியாது

அவனைக் கொல்லக் கூடாது

அப்படிக் கொன்றால் அது உலகத்தின் அழிவு

ஆனால் அவன் அனைவரையும் கொல்லலாம்.

யாரும் அவனைத் தடுக்க முடியாது.

அவன் பாண்டவர்கள் ஐவரையும் கொல்லும் திறன் படைத்தவன்

அதனால் தான் அவர்களைக் கூட்டிக் கொண்டு சென்றேன்

இத்தகைய சூழ்நிலையில் இதைத் தவிர்த்து வேறு எதையும் செய்ய முடியாது.

பாஞ்சாலி : அவர்களுக்குப் பதில் என் பிள்ளைகளைக் கொன்று விட்டீர்கள்

கிருஷ்ணன் : கர்மாவைப் பற்றித் தெரியாத காரணத்தினால் தான் சிலர் கடவுளையே குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

கடவுளையே குறை சொல்லும் அளவுக்கு வந்து விட்டார்கள்

இந்த மனிதர்களுக்கு கர்மா என்றால் என்ன என்று தெரியவில்லை

கர்மா எப்படி இயங்கும் என்பதும் தெரியவில்லை

கர்மா எப்படி தன்னுடைய விளைவுகளைக் கொடுக்கிறது என்பதும் தெரியவில்லை

கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதும் தெரியவில்லை.

கர்மா தன்னுடைய விளைவைக் கொடுக்கும் வரை அமைதியாக இருக்காது என்பதும் தெரியவில்லை.

கடவுளைக் கும்பிட்டாலும் கர்மா பாதிக்கும் என்பதும் தெரியவில்லை

ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை அடைந்தாலும் கர்மா இருக்கும் வரை அது தன் விளைவுகளைக் கொடுக்கும் என்பது தெரியவில்லை

கர்மாவைப் பற்றி சொன்னாலும் தெரியவில்லை

அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளவும் தெரியவில்லை

இந்த மனிதர்களை என்ன செய்வது

பாஞ்சாலி : அஸ்வத்தாமனை விரட்டப் போவது யார். யார் இந்தச் செயலை எனக்காகச் செய்யப் போகிறார்கள்.

இந்த செயலைச் செய்து முடிக்கும் வரை, என் மனம் அமைதி அடையும் வரை, நான் உண்ணப் போவதில்லை, உறங்கப் போவதில்லை, என் பிள்ளைகளுக்கு இறுதிச் சடங்கு செய்யப் போவதில்லை.

கிருஷ்ணன் : எப்போது பார்த்தாலும் ஒன்று சாபம் இட வேண்டும் அல்லது சபதம் எடுக்க வேண்டும்

இதே வேலையாகத் தான் பாண்டவர்களும், பாண்டவர்களைச் சார்ந்த  அனைவரும் இருக்கீறீர்கள்

சரி சபதம் எடுக்கிறீர்கள் அதை உங்களால் தனிப்பட்ட முறையில் நிறைவேற்ற முடிந்ததா இல்லையே

அனைத்தையும் நான் தான் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது

அதற்காக நான் செய்யும் செயல்களால் என்னை எல்லோரும் கெட்டவன் என்கிறார்கள்

சபதத்தை முடிக்கக் கூடிய திறமை இருந்தால் மட்டுமே சபதம் எடுக்க வேண்டும்

சபதத்தை முடிக்கக் கூடிய திறமை இல்லாமல் ஏன் அனைவரும் சபதம் எடுக்கிறீர்கள்

இதுவரை நீங்கள் எடுத்த சபதம் ஏதேனும் ஒன்றை நான் இல்லாமல் நீங்கள் சுயமாக நிறைவேற்றி இருக்கிறீர்களா

ஒன்றையும் என்னுடைய துணை இல்லாமல் நிறைவேற்றவில்லை.

நீங்கள் அனைவரும் சிந்திக்காமல், நாம் எடுக்கும் சபதத்தை நம்மால் முடிக்க முடியுமா என்று சிந்திக்காமல் உணர்ச்சி வயப்பட்டு எடுத்து விடுகிறீர்கள்

அதனை முடிக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள் அதை முடிக்க நான் வர வேண்டி இருக்கிறது. அதை நான் தான் வந்து முடித்து வைக்க வேண்டி இருக்கிறது

பிறகு எதற்காக சபதம் எடுக்கிறீர்கள்

கௌரவர்கள் யாராவது சபதம் எடுக்கிறீர்களா

அவர்களுக்கு அவர்களுடைய சக்தி தெரியும்

தங்களால் இந்த செயலைச் செய்ய முடியுமா என்று தெரியும்

தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்.

முடியாவிட்டால் விட்டு விட்டுப் போய் விடுகிறார்கள்

அவர்கள் சபதம் பெரும்பாலும் எடுப்பதே இல்லை.

சபதமும், சாபமும் தேவையில்லாதது என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்

ஆனால் பாண்டவர்களும் பாண்டவர்களைச் சார்ந்தவர்களும் எதற்கு எடுத்தாலும் சபதம் எடுப்பதையே தொழிலாக வைத்து இருக்கிறீர்கள்

சாபம் இடுவதையே பிழைப்பாக நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்

பீமன் துரியோதனனை கொல்வதாக சபதம் எடுத்தான். அதை அவனால் சுயமாக செய்ய முடிந்ததா. செய்ய முடியவில்லை.

துரியோதனனை தொடையில் அடித்தால் தான் கொல்ல முடியும் என்று நான் சொல்லிக் கொடுத்ததால் தான் பீமன் துரியோதனனைக் கொன்றான். இல்லை என்றால் பீமனால் துரியோதனனைக் கொன்று இருக்கவே முடியாது

துரியோதனன் செய்த தவறுக்கு அவனை போரில் கொல்ல முடிந்தால் கொல்லலாம் என்று பீமன் இருந்து இருக்க வேண்டும்

ஆனால் அவ்வாறு செய்யாமல் சபதம் எடுக்கிறேன் துரியோதனனைக் கொல்வேன் என்று சபதம் எடுக்கிறேன் என்று சபதம் எடுத்தத்தால் என்ன பயன் ஏற்பட்டது. ஒரு பயனும் ஏற்படவில்லை

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////