June 03, 2022

ஜபம்-பதிவு-774 (சாவேயில்லாத சிகண்டி-108)

 ஜபம்-பதிவு-774

(சாவேயில்லாத

சிகண்டி-108)

 

தவம் செய்த

எத்தனையோ

பேர்களுக்கு

அவர்களுடைய

கோரிக்கையை

நிறைவேற்றுவதற்காக

வரம்

அளித்திருக்கிறேன்

அதில் எனக்கு

பெரியதாக ஒரு

திருப்தியும்

இருந்ததில்லை

 

ஆனால் உனக்கு

நான் வரதத்தை

அளிக்கும் போது

என்னுடைய

மனம் மகிழ்கிறது

வரம் பெறத்

தகுதி கொண்ட

ஒருவருக்கு வரத்தை

அளிக்கிறேன் என்று

என்னுடைய மனம்

மகிழ்கிறது

 

அம்பையே

இந்தப் பிறவியில்

உன்னால் பீஷ்மனைக்

கொல்ல முடியாது

அடுத்தப் பிறவியில்

தான் உன்னால்

பீஷ்மனைக்

கொல்ல முடியும்

 

அடுத்த பிறவியில்

பெண்ணாகப் பிறந்து

ஆணாக

மாறும் போது

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற நினைவு

உனக்கு வரும்

அப்போது

பீஷ்மனைக்

கொல்வாய்

 

உன்னுடைய

கையால் தான்

பீஷ்மனுக்கு சாவு

என்ற வரத்தை

உனக்கு அளிக்கிறேன்

 

அம்பை :

ஐயனே

பெண்ணாகப் பிறந்து

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

அல்லது

ஆணாகப் பிறந்து

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

இரண்டும் இல்லாமல்

பெண்ணாகப் பிறந்து

ஆணாக மாறி

பின் நான் ஏன்

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

 

சிவன் :

அம்பையே

இந்தப் பிறவியில்

உன்னுடைய

வாழ்க்கையில்

நடந்த பல

நிகழ்ச்சிகள்

ஏன் நடந்தது என்ற

கேள்விக்கே உனக்கு

விடை தெரியாமல்

இருக்கும் போது

அடுத்த பிறவியில்

உன்னுடைய

வாழ்க்கையில்

நடக்கப் போகும்

நிகழ்ச்சி

ஏன் நடக்கப்

போகிறது என்ற

கேள்விக்கு

விடை தேட

நீ ஏன் முயற்சி

செய்கிறாய்

 

அடுத்த பிறவியில்

பெண்ணாகப் பிறந்து

ஆணாக மாறி

பீஷ்மனைக்

கொல்வதற்கான

முயற்சிகளை நீ

மேற்கொள்ளும் போது

நீ கேட்ட

கேள்விக்கான

விடை உனக்கு

தெரியும்

 

அடுத்தப் பிறவியில்

தான் உன்னால்

பீஷ்மனைக்

கொல்ல முடியும்

என்ற வரத்தை

நான் உனக்கு

தந்ததால்

இந்தப் பிறவியில்

பீஷ்மனை உன்னால்

கொல்ல

முடியவில்லையே

என்ற வருத்தம்

உனக்கு இருக்கிறதா

அம்பையே

 

அம்பை :

ஐயனே

எனக்கு எந்த

வருத்தமும் இல்லை

அடுத்த பிறவியில்

என்னால் பீஷ்மனைக்

கொல்ல

முடியும் என்ற

வரத்தைத்

தந்தீர்களே அதுவே

எனக்கு மகிழ்ச்சி

 

இந்தப் பிறவியில்

வாழ்ந்தால் தானே

நான் வருத்தப்பட

வேண்டும்

 

பீஷ்மனைக்

கொல்ல முடியாத

இந்தப் பிறவியை

முடித்து விட்டு

அடுத்தப் பிறவிக்கு

சென்று பீ‌ஷ்மனைக்

கொல்லப் போகிறேன்

 

பீஷ்மனைக்

கொல்வதற்காக

அடுத்தப் பிறவிக்கு

செல்லப் போகும்

நான் ஏன்

வருத்தப்பட

வேண்டும்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

ஜபம்-பதிவு-773 (சாவேயில்லாத சிகண்டி-107)

 ஜபம்-பதிவு-773

(சாவேயில்லாத

சிகண்டி-107)

 

அம்பை :

நான் பிறவி

எடுக்கும் போது

எடுத்த அந்தப்

பிறவியில்

பீஷ்மனைக்

கொல்ல முடியாது

என்ற விஷயம்

எனக்குத் தெரிந்தவுடன்

எடுத்த இந்தப்

பிறவி எனக்குத்

தேவையில்லை

என்று முடிவு செய்து

தீயில் இறங்கி

இறப்பேன்

 

இப்படியே 999

பிறவியிலும்

இறப்பேன்

ஆயிரமாவது

பிறவியில்

பீஷ்மரைக் கொல்ல

முடியும் என்று

தெரிந்தவுடன்

ஆயிரமாவது

பிறவியில்

பீஷ்மரைக்

கொல்வேன்

 

சிவன் :

பாதிக்கப்பட்டவர்கள்

யாராக இருந்தாலும்

பாதிப்பு ஏற்பட்டவுடன்

ஓடி போய் ஒளிந்து

கொள்வார்கள்

 

சபதம் ஏற்றவர்கள்

ஏற்ற சபதத்தை

நிறைவேற்ற

முடியாமல்

மண்ணுக்குள்

மறைந்து போவார்கள்

 

கொள்கை

மேற்கொண்டவர்கள்

கொள்கையில் வெற்றி

பெற முடியாமல்

அழிந்து போவார்கள்

 

கொள்கையுடன்

இருக்கிறேன் என்று

சொல்லிக் கொண்டு

திரிந்து

கொண்டிருப்பவர்கள் 

கொள்கையை விட

உயர்ந்த விஷயம்

கிடைத்தவுடன்

அவர்கள்

மேற்கொண்ட

கொள்கையை விட்டு

விட்டு சென்று

விடுவார்கள்

 

தன் கொள்கையை

நிறைவேற்ற

முடியவில்லை

என்று

நினைப்பவர்களும்

தன் கொள்கை

நிறைவேறாது என்று

முடிவு எடுப்பவர்களும்

தன் கொள்கைக்காக

அனைத்தையும்

இழக்க வேண்டி

இருக்கிறது என்று

நினைப்பவர்களும்

தாங்கள் மேற்கொண்ட

கொள்கையை

விட்டு விட்டு

சென்று விடுவார்கள்

 

ஆனால்

அம்பையே

நீ மேற்கொண்ட

கொள்கைக்காக

எவ்வளவு துன்பம்

வந்தாலும்

அதை எல்லாம்

எதிர்த்து நிற்கிறாய்

 

அனைத்தையும்

இழந்தாலும்

உன் கொள்கையில்

இருந்து மாறாமல்

இருக்கிறாய்

 

உலகத்திலேயே

உயர்ந்த விஷயம்

கிடைத்தும் அதை

வேண்டாம் என்கிறாய்

 

பிறப்பை அறுக்கும்

முக்தி கிடைத்தும்

அதை ஏற்க

மறுக்கிறாய்

 

வந்திருப்பது

கடவுளாக இருந்தாலும்

உன்

கொள்கைக்காக

எதிர்க்கிறாய்

 

உன்னைப் பார்த்து

நான் பிரமிக்கிறேன்

அம்பையே

 

உன்னைப் போல

ஒரு பெண் இந்த

உலகத்தில்

பிறக்கவும் இல்லை

இனி பிறக்கப்

போவதும் இல்லை

 

இந்த உலகம்

கண்டிராத புனிதப்

பிறவியம்மா நீ

 

உன்னுடைய இடத்தை

யாராலும்

நிரப்ப முடியாது

 

பாதிக்கப்பட்ட நீயே

உன்னுடைய

பாதிப்புக்கு

காரணமான

பீஷ்மனைக்

கொல்வதற்காக

நீயே இறங்கி

செயல்களைச்

செய்கிறாய்

என்று

நினைக்கும் போது

எனக்கே

பெருமையாக

இருக்கிறது

 

உனக்கு வரம்

கொடுப்பதால்

நானும் பெருமை

அடைகிறேன்

வரமும் பெருமை

அடைகிறது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

ஜபம்-பதிவு-772 (சாவேயில்லாத சிகண்டி-106)

 ஜபம்-பதிவு-772

(சாவேயில்லாத

சிகண்டி-106)

 

உங்கள் கடமையை

நீங்கள் மறந்து

விட்டீர்கள்

அதனால் அந்தக்

கடமையை நான்

செய்கிறேன்

 

தவறுகள்

அனைத்தையும்

நீங்கள் செய்து விட்டு

நான் தவறு

செய்ய முயற்சி

செய்கிறேன்

என்கிறீர்கள்

 

சிவன் :

என்னை

குற்றவாளி என்கிறாயா

 

அம்பை :

நான்

உண்மையைச்

சொன்னேன்

 

உண்மை எப்போதும்

கசக்கத் தான்

செய்யும்

 

சிவன் :

என்னைப் பார்த்து

பயப்பட மாட்டேன்

என்கிறாய்

 

கடவுளைப் பார்த்து

பயப்பட வேண்டும்

என்று யாரும்

உனக்கு சொல்லித்

தரவில்லையா

 

அம்பை :

கடவுளைப் பார்த்து

நான் ஏன்

பயப்பட வேண்டும்

நேர்மையாகவும்

உண்மையாகவும்

இருக்கும் நான்

ஏன் கடவுளைப்

பார்த்து பயப்பபட

வேண்டும்

 

கடவுளைப் பார்த்து

பயப்பட வேண்டும்

என்று

சொல்லித் தருபவன்

தவறு செய்தவனாகத்

தான் இருப்பான்

 

தவறு செய்தவன்

தான் கடவுளை

பார்த்துப்

பயப்படுவான்

 

நேர்மையாகவும்

உண்மையாகவும்

இருப்பவர்கள்

கடவுளைப் பார்த்து

பயப்பட வேண்டிய

அவசியம் இல்லை

 

இந்த அம்பை

நேர்மையானவள்

உண்மையானவள்

அதனால் உங்களைப்

பார்த்து பயப்பட

வேண்டிய அவசியம்

எனக்கு

ஏற்படவில்லை

 

சிவன் :

அம்பையே நான்

உனக்கு பீஷ்மரைக்

கொல்லும் வரம்

தரவில்லை என்றால்

என்ன செய்வாய்

 

அம்பை :

அதற்காகக்

கவலைப்பட்டு

ஒரத்தில் முடங்கிக்

கிடக்க மாட்டாள்

இந்த அம்பை

 

பீஷ்மனைக்

கொல்வதற்கென்று

ஏதேனும்

வழிமுறைகள்

உள்ளதா என்பதைக்

கண்டறிய

எத்தகைய

முயற்சிகளை எல்லாம்

செய்ய வேண்டுமோ

அத்தகைய

முயற்சிகளை

எல்லாம் செய்வேன்

 

எத்தகைய

வழிமுறைகளைக்

கையாண்டால்

பீஷ்மனைக்

கொல்ல முடியுமோ

அத்தகைய

வழிமுறைகளை

எல்லாம்

கையாள்வேன்

 

கடவுளே

கைவிட்டாலும்

பீஷ்மனைக்

கொல்வதற்கான

என்னுடைய

முயற்சியை மட்டும்

எப்போதும் நான்

கைவிட மாட்டேன்

 

இன்னும் ஆயிரம்

பிறவி எடுத்தாவது

கண்டிப்பாக பீஷ்மனை

நான் கொல்வேன்

 

சிவன் :

ஆயிரமாவது

பிறவியில் தான்

நீ பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற விதி இருந்து

ஒவ்வொரு பிறவி

எடுத்து நீ

பிறக்கும் போதும்

அந்தப் பிறவியில்

உன்னால் பீஷ்மரைக்

கொல்ல முடியாது

ஆயிரமாவது

பிறவியில் தான்

உன்னால் பீஷ்மனைக்

கொல்ல முடியும்

என்ற விஷயம்

தெரியும் நிலை

உனக்கு ஏற்பட்டால்

என்ன செய்வாய்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-771 (சாவேயில்லாத சிகண்டி-105)

 ஜபம்-பதிவு-771

(சாவேயில்லாத

சிகண்டி-105)

 

சிவன் :

தவறு செய்ய

முயற்சிக்கும்

உன்னை

தவறு செய்ய

விடாமல் தடுக்க

நினைத்தேன்

 

அம்பை :

என்னிடம் என்ன

தவறைக்

கண்டீர்கள்

 

சிவன் :

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்று முயற்சி

செய்கிறாயே அது

தவறில்லையா

 

அம்பை :

என்னுடைய

வாழ்க்கையை

அழித்து பீஷ்மன்

தவறு செய்தான்

 

தவறுக்குரிய

தண்டனையை

பீஷ்மனுக்கு வழங்காமல்

நீங்கள் தவறு

செய்தீர்கள்

 

பீஷ்மன் செய்த

தவறுக்குரிய

தண்டனையை

வழங்குவதற்காக

நான் முயற்சி

செய்து

கொண்டிருக்கிறேன்

 

என்னை தவறு

செய்ய

முயற்சிக்கிறேன்

என்று சொல்கிறீர்கள்

 

சிவன் :

தவறு செய்தவன்

அதற்குரிய

தண்டனையை

அனுபவிப்பான்

 

அம்பை :

எப்போது

அனுபவிப்பான்

 

இறந்த பிறகா

அனுபவிப்பான்

 

தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

கடவுளாகிய நீங்கள்

உடனே

கொடுத்து இருந்தால்

அதைப்

பார்ப்பவர்கள்

தவறு செய்வதற்கு

பயப்படுவார்கள்

 

ஆனால் தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

உடனே நீங்கள்

கொடுப்பதில்லையே

தவறு செய்தவனை

வேடிக்கை

பார்த்துக் கொண்டு

தானே இருக்கிறீர்கள்

 

தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

கடவுளாகிய நீங்கள்

உடனே கொடுத்து

இருந்தால்

தவறு செய்ய

நினைப்பவனும்

தவறு செய்ய

பயப்படுவான்

 

ஆனால் தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

நீங்கள் உடனே

கொடுக்காத

காரணத்தினாலும்

தவறு செய்தவன்

பணம் பதவி

அதிகாரம் புகழ்

என்று வாழ்வதை

இந்த உலகத்தில்

உள்ள மற்ற

மக்கள் பார்க்கின்ற

காரணத்தினாலும்

தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை கடவுள்

கொடுக்க மாட்டார்

என்று மனிதன்

புரிந்து

கொண்டிருக்கின்ற

காரணத்தினாலும் தான்

செய்வது தவறு

என்று தெரிந்தும்

மனிதன் துணிந்து

தவறை செய்கிறான்

 

அதனால் தான்

இந்த உலகம்

தவறு

செய்பவர்களால்

நிரம்பி இருக்கிறது

 

இந்த உலகம்

தவறு செய்பவர்களால்

நிரம்பி

இருப்பதற்கு காரணம்

கடவுளாகிய

நீங்கள் தான்

 

தவறு செய்த

பீஷ்மனுக்குரிய

தண்டனையை

நீங்கள் அளித்து

இருந்தால்

நான் ஏன்

தவம் செய்யப்

போகிறேன்

 

உங்களை ஏன்

அழைக்கப் போகிறேன்

 

உங்களிடம் வரம்

கேட்டு .ஏன்

நிற்கப் போகிறேன்

 

கடவுள் செய்ய

வேண்டிய கடமையை

கடவுள் செய்யவில்லை

தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

உடனே கடவுள்

கொடுக்கவில்லை

அதனால் நானே

பீஷ்மனுக்கு தண்டனை

கொடுக்க வேண்டும்

என்று நானே

கிளம்பி விட்டேன்

 

நீங்கள் செய்யத்

தவறிய கடமையை

நான் செய்கிறேன்

அது தவறா

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-770 (சாவேயில்லாத சிகண்டி-104)

 ஜபம்-பதிவு-770

(சாவேயில்லாத

சிகண்டி-104)

 

சிவன் :

இந்த உலகத்தில்

பிறக்கும்

மனிதர்கள் அனைவரும்

கர்மவினையைக்

கழித்து

பிறப்பை அறுத்து

முக்தியை

அடைய வேண்டும்

என்ற எண்ணத்தில்

தான் வாழ்ந்து

கொண்டு இருக்கிறார்கள்

 

தவம்

செய்பவர்களும்

முக்தியை

வேண்டித் தான்

தவம் செய்து

கொண்டிருக்கிறார்கள்

 

உலகத்திலேயே

மிக உயர்ந்த

விஷயமான முக்தியை

உனக்கு

அளிப்பதற்காக

நானே நேரில்

வந்தும் அதை

வேண்டாம் என்கிறாய்

 

அம்பை :

தன்னால்

கிடைக்கும் ஒன்றை

தவம் செய்து

தங்களை

வரவழைத்து

நான் ஏன்

பெற வேண்டும்

 

சிவன் :

முக்தி தன்னால்

பெறும் ஒன்றா

 

அம்பை :

ஆமாம் என்னைப்

பொறுத்தவரை

 

சிவன் :

உன்னால் எப்படி

முக்தியைப்

பெற முடியும்

 

அம்பை :

ஐயனே

என்னுடைய

வாழ்க்கையில் நான்

பட்ட கஷ்டங்களின்

காரணமாக

பெரும்பாலான

கர்மாக்களை

கழித்து விட்டேன்

 

எஞ்சியிருப்பது

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற எண்ணத்தினால்

உண்டான

கர்மா மட்டுமே

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற எண்ணத்தை

நான்

விட்டு விட்டால்

முக்தி எனக்கு

தன்னால்

கிடைக்கப் போகிறது

 

தன்னால் கிடைக்கும்

ஒன்றுக்காக நான்

ஏன் கஷ்டப்பட

வேண்டும்

 

அம்பை :

யாரிடம் பேசுகிறாய்

என்று தெரிந்து

தான் பேசுகிறாயா

 

அம்பை :

மும்மூர்த்திகளில்

ஒருவரிடம் பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

பிறப்பும் இறப்பும்

இல்லாத

பரம்பொருளிடம் பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

ஓம் என்ற

பிரணவ மந்திரத்தை

உருவாக்கியவரிடம்

பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

பிரளய காலத்தில்

அனைத்தையும்

அழித்துத் தன்னுள்

ஒடுக்கிச் சிவமாக

இருக்கும் சிவனிடம்

பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

அருவம் உருவம்

அருவுருவம் கொண்ட

சிவனிடம் பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

முப்புரம் எரித்த

முக்கண்

முதல்வனிடம் பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

ஆனால்

உங்களுக்குத் தான்

யாரிடம் பேசுகிறோம்

என்று தெரியாமல்

பேசிக்

கொண்டிருக்கிறீர்கள்

 

சிவன் :

தெரிந்து தான்

பேசிக்

கொண்டிருக்கிறேன்

 

அம்பை :

தெரிந்து பேசி

இருந்தால்

நீங்கள் முக்தியைப்

பற்றி பேசிக் கொண்டு

இருக்க மாட்டீர்கள்

 

பீஷ்மனைக்

கொல்வது எப்படி

என்பதைப் பற்றிப்

பேசிக் கொண்டு

இருந்திருப்பீர்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////