June 03, 2022

ஜபம்-பதிவு-772 (சாவேயில்லாத சிகண்டி-106)

 ஜபம்-பதிவு-772

(சாவேயில்லாத

சிகண்டி-106)

 

உங்கள் கடமையை

நீங்கள் மறந்து

விட்டீர்கள்

அதனால் அந்தக்

கடமையை நான்

செய்கிறேன்

 

தவறுகள்

அனைத்தையும்

நீங்கள் செய்து விட்டு

நான் தவறு

செய்ய முயற்சி

செய்கிறேன்

என்கிறீர்கள்

 

சிவன் :

என்னை

குற்றவாளி என்கிறாயா

 

அம்பை :

நான்

உண்மையைச்

சொன்னேன்

 

உண்மை எப்போதும்

கசக்கத் தான்

செய்யும்

 

சிவன் :

என்னைப் பார்த்து

பயப்பட மாட்டேன்

என்கிறாய்

 

கடவுளைப் பார்த்து

பயப்பட வேண்டும்

என்று யாரும்

உனக்கு சொல்லித்

தரவில்லையா

 

அம்பை :

கடவுளைப் பார்த்து

நான் ஏன்

பயப்பட வேண்டும்

நேர்மையாகவும்

உண்மையாகவும்

இருக்கும் நான்

ஏன் கடவுளைப்

பார்த்து பயப்பபட

வேண்டும்

 

கடவுளைப் பார்த்து

பயப்பட வேண்டும்

என்று

சொல்லித் தருபவன்

தவறு செய்தவனாகத்

தான் இருப்பான்

 

தவறு செய்தவன்

தான் கடவுளை

பார்த்துப்

பயப்படுவான்

 

நேர்மையாகவும்

உண்மையாகவும்

இருப்பவர்கள்

கடவுளைப் பார்த்து

பயப்பட வேண்டிய

அவசியம் இல்லை

 

இந்த அம்பை

நேர்மையானவள்

உண்மையானவள்

அதனால் உங்களைப்

பார்த்து பயப்பட

வேண்டிய அவசியம்

எனக்கு

ஏற்படவில்லை

 

சிவன் :

அம்பையே நான்

உனக்கு பீஷ்மரைக்

கொல்லும் வரம்

தரவில்லை என்றால்

என்ன செய்வாய்

 

அம்பை :

அதற்காகக்

கவலைப்பட்டு

ஒரத்தில் முடங்கிக்

கிடக்க மாட்டாள்

இந்த அம்பை

 

பீஷ்மனைக்

கொல்வதற்கென்று

ஏதேனும்

வழிமுறைகள்

உள்ளதா என்பதைக்

கண்டறிய

எத்தகைய

முயற்சிகளை எல்லாம்

செய்ய வேண்டுமோ

அத்தகைய

முயற்சிகளை

எல்லாம் செய்வேன்

 

எத்தகைய

வழிமுறைகளைக்

கையாண்டால்

பீஷ்மனைக்

கொல்ல முடியுமோ

அத்தகைய

வழிமுறைகளை

எல்லாம்

கையாள்வேன்

 

கடவுளே

கைவிட்டாலும்

பீஷ்மனைக்

கொல்வதற்கான

என்னுடைய

முயற்சியை மட்டும்

எப்போதும் நான்

கைவிட மாட்டேன்

 

இன்னும் ஆயிரம்

பிறவி எடுத்தாவது

கண்டிப்பாக பீஷ்மனை

நான் கொல்வேன்

 

சிவன் :

ஆயிரமாவது

பிறவியில் தான்

நீ பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற விதி இருந்து

ஒவ்வொரு பிறவி

எடுத்து நீ

பிறக்கும் போதும்

அந்தப் பிறவியில்

உன்னால் பீஷ்மரைக்

கொல்ல முடியாது

ஆயிரமாவது

பிறவியில் தான்

உன்னால் பீஷ்மனைக்

கொல்ல முடியும்

என்ற விஷயம்

தெரியும் நிலை

உனக்கு ஏற்பட்டால்

என்ன செய்வாய்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment