June 03, 2022

ஜபம்-பதிவு-769 (சாவேயில்லாத சிகண்டி-103)

 ஜபம்-பதிவு-769

(சாவேயில்லாத

சிகண்டி-103)

 

சிவனை நோக்கி

எப்படி தவம்

செய்வது

சிவனை எப்படி

வரவழைப்பது

சிவனிடம் இருந்து

எப்படி பீஷ்மனைக்

கொல்லும் வரம்

பெறுவது என்பதை

அறியும் பொருட்டு

அம்பை

நந்தாஸ்ரமம்,

உலூகருடைய

ஆஸ்ரமம்,

ச்யவனருடைய

ஆஸ்ரமம்,

பிரம்மாவினுடைய

ஸ்தானம்,

பிரயாகை,

தேவயஜனம்,

தேவாரண்யங்கள்,

போகவதி,

கௌசிகருடைய

ஆஸ்ரமம்,

மாண்டவ்யருடைய

ஆஸ்ரமம்,

திலீபருடைய

ஆஸ்ரமம்,

ராமஹ்ரதம்,

பைலருடைய

ஆஸ்ரமம்,

கர்க்கருடைய

ஆஸ்ரமம் ஆகிய

பல்வேறு

இடங்களுக்குச் சென்று

அங்குள்ள

தவசீலர்களை

சந்தித்து

சித்த வித்தையில்

உள்ள கதியின்

பல்வேறு

வகைகளைக்

கற்றுக் கொண்டாள்

அம்பை

 

யமுனை நதிக்கரை

சென்று யமுனை

நதிக்கரையில்

ஒரு வருடமும்,

யமுனை நதியில்

இருந்தவாறு ஒரு

வருடமும்,

கால் கட்டை

விரலில் நின்று

கொண்டு ஒரு

வருடமும் என்று

பன்னிரெண்டு

வருடங்கள்

உண்ணாமலும்,

உறங்காமலும்

காற்றை

சுவாசித்துக் கொண்டு

சித்தவித்தையின்

கதிகளை

தொடர்ந்து

முறைப்படி செய்து

வந்தாள் அம்பை.

 

அம்பையின்

தவக்கனல் ஈரேழு

பதினாலு

லோகத்தையும்

எரித்தது.

கயிலாயத்தையே

அசைத்துப் பார்த்தது.

அம்பையின்

தவத்தால்

உச்சி குளிர்ந்த

சிவபெருமான் வரம்

கொடுப்பதற்காக

அம்பையின்

முன்னால்

தோன்றினார்.

 

வந்திருப்பது சிவன்

என்று தெரிந்ததும்

தவத்தை முடித்து

கண்களைத் திறந்து

சிவனின் காலடியில்

விழுந்து வணங்கி

எழுந்து இரண்டு

கரங்களையும்

கூப்பியபடி நின்று

கொண்டிருந்தாள்

அம்பை.

 

(சிவன்

அம்பையைப்

பார்த்து பேசத்

தொடங்கினார்)

 

சிவன் :

முக்தி வேண்டி

தவம்

செய்தவர்களுக்கே

முக்தியை

வழங்காத நான்

 

முக்தி வேண்டி

தவம் செய்யாத

உனக்கு

முக்தியை வழங்க

வந்திருக்கிறேன்

என்றால்

 

முக்தியைப்

பெறுவதற்குரிய

தகுதியை நீ

பெற்றிருக்கிறாய் என்ற

காரணத்தினால் தான்

 

அம்பையே

முக்தியை உனக்கு

வழங்குகிறேன்

பெற்றுக் கொள்

 

அம்பை :

ஐயனே

எனக்கு

முக்தி வேண்டாம்

 

உங்களை நோக்கி

நான் தவம் செய்தது

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற வரத்தினைப்

பெறுவதற்காகத்

தான்

 

முக்தி

வேண்டி அல்ல

 

எனக்கு

முக்தியும் வேண்டாம்

அதில் எனக்கு

விருப்பமும் இல்லை

 

சிவன் :

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற உன்னுடைய

எண்ணம்

முக்தியை

விட உயர்ந்ததா

 

அம்பை :

ஆமாம்

முக்தியை விட

உயர்ந்தது தான்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment