August 18, 2024

ஜபம்-பதிவு-1018 மரணமற்ற அஸ்வத்தாமன்-150 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1018

மரணமற்ற அஸ்வத்தாமன்-150

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

மந்திரத்தில் யாரும் தொட முடியாத உச்சத்தைத் தொட்டாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

எத்தனை கோயில் கோயிலாக அலைந்தாலும்,

எத்தனை சாமிகளைக் கும்பிட்டாலும்,

எவ்வளவு பிராயச்சித்தம் செய்தாலும்  

பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

 

பாவத்தின் பலனை கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும்

பாவத்தைச் செய்து விட்டு அதன் விளைவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது,

பாவமன்னிப்பு யாரும் யாருக்கும் தரமுடியாது,

பாவமன்னிப்பால் பாவத்தை யாராலும் தீர்க்க முடியாது,

என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

 

ஞானம், சமாதி என்ற நிலையை அடைந்தவர்களாக இருந்தாலும்,

முக்தி என்ற நிலையை அடையாதவர்களாக இருந்தாலும்,

பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

அஸ்வத்தாமா!

மரணமற்ற அஸ்வத்தாமா

உனக்கு மரணமில்லை என்ற காரணத்தினால் தானே இத்தகைய ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்தாய்.

உன் நெற்றியில் இருக்கும் ஸயந்தகமணி இனி உனக்கு சொந்தம் இல்லை. அது இருந்ததால் தானே எதை எல்லாம் செய்யக் கூடாதோ அதை எல்லாம் செய்தாய்.

இனி அது உனக்கு சொந்தம் இல்லை. அதை வைத்திருக்கும் தகுதியும் உனக்கு இல்லை. அது உலகத்தின் பொக்கிஷம். எடுத்துக் கொடுத்து கொடு.

அஸ்வத்தாமன் : என்னுடைய ஸ்யமந்தகமணியை, என்னுடன் பிறந்த என்னுடைய ஸ்யமந்தகமணியை, என்னை காப்பாற்றிக் கொண்டிருந்த அந்த ஸ்யமந்தகமணியை,  யாரும் தொட வேண்டும். தொடுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை. குறிப்பாக பாண்டவர்களுக்கு அந்தத் தகுதி கிடையவே கிடையாது.

கர்ணனுடைய கவச குண்டலங்களை எப்படி நயவஞ்சகமாக பெற்று அவனைக் கொன்று விட்டீர்களோ. அதைப் போல் என்னுடைய ஸ்யமந்தகமணியைப் பெற்று என்னை கொல்லப் பார்க்கிறீர்கள்

என்னை நயவஞ்சகமாக யாரும் கொல்லவும் முடியாது. என்னை கொல்லக் கூடிய சக்தியும் யாருக்கும் கிடையாது.

ஏன் நீங்கள் கடவுளாக நினைக்கும் அந்த கிருஷ்ணனுக்கும் கிடையாது.

ஏனென்றால் நான் மரணமற்றவன் என்பது அனைவருக்கும் தெரியும்.

என்னைக் கொல்ல முடியாது என்ற காரணத்தால், என்னிடமிருந்து என்னுடைய ஸ்யமந்தகமணியை பிரித்து எனக்கு கஷ்டத்தை உண்டாக்க முடிவு செய்து விட்டீர்கள். அதனால் என்னுடைய ஸ்யமந்தகமணியை கேட்கிறீர்கள்.

இதற்கு மேல் நான் மனிதர்களுடன் வாழ விரும்பவில்லை. அவர்களுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை.

நல்லவர்கள் போல் நடிக்கும் மனிதர்களுடன்,

சுயநலத்துடன் வாழும் மனிதர்களுடன்,

தான் வாழ பிறரை கெடுக்கும் பாவத்தைச் செய்யும் மனிதர்களுடன்,

பாவம் என்று தெரிந்தும் துணிந்து பாவத்தைச் செய்யும் மனிதர்களுடன்,

பணம் பதவி அதிகாரத்திற்காக பாவம் செய்யும் மனிதர்களுடன்,

தர்மம் என்று சொல்லிக் கொண்டு

அதர்மச் செயல்களைச் செய்யும் மனிதர்களுடன்,

இனி நான் வாழ விரும்பவில்லை

 

கடவுளே இந்த உலகத்தில் பிறந்து வந்தாலும்

சூழ்ச்சி செய்து தான் வாழ வேண்டும்

என்ற நிலை உண்டான பிறகு,

 

தர்மம் என்ற வார்த்தையைச் சொல்லி

அதர்மச் செய்யும் கடவுளர்கள்

இந்த உலகத்தில் வாழும் நிலை உண்டான பிறகு,

 

இந்த உலகத்தில்

உண்மையானவர்கள்,

நேர்மையானவர்கள்,

நல்லவர்கள்

வாழ வழி இல்லாமல் போன பிறகு

 

இந்த மனிதர்களுடன் வாழ நான் விரும்பவில்லை

மனிதர்களை விட்டு விலகிச் செல்லவே விரும்புகிறேன்.

நாட்டை விட்டு காட்டிற்குள் செல்லவே விரும்புகிறேன்.

 

நான் இந்த உலகத்தில் பிறந்த கடமை முடிந்து விட்டது.  நான்  இந்த உலகத்திற்கு வந்த வேலையை முடித்து விட்டேன். இதற்கு மேல் நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.

இதற்கு மேல் அந்த ஸ்யமந்தகமணி எனக்குத் தேவையில்லை. அதை வைத்திருக்கவும் நான் விரும்பவில்லை.

நான் என்னுடைய ஸ்யமந்தகமணியை பிச்சையாகப் போடுகிறேன். எடுத்துக் கொள்ளுங்கள். 

(என்று அஸ்வத்தாமன் தன்னுடைய நெற்றியில் இருந்த ஸ்யமந்தகமணியை வெட்டி எடுத்து கிருஷ்ணனுக்கு பிச்சை போட்டான்.

கிருஷ்ணன் அந்த ஸ்யமந்தகமணியை பிச்சையாகப் பெற்றுக் கொண்டான்.)

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-1017 மரணமற்ற அஸ்வத்தாமன்-149 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1017

மரணமற்ற அஸ்வத்தாமன்-149

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஆனால், நல்லவன் போல் நடித்த அர்ஜுனனை என் தந்தை நம்பி விட்டார். அதனால் தான் பிரம்மாஸ்திரத்தை முழுவதுமாக அவனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

 

இத்தகைய காரணத்தினால் தான் பிரம்மாஸ்திரத்தை செலுத்தும் வித்தை எனக்குத் தெரியும், திரும்ப அழைத்துக் கொள்ளும் வித்தை எனக்குத் தெரியாது.

 

இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள்.

 

வேத வியாசர் : பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைக்கும் வித்தை தெரியவில்லை என்றால் அதன் பாதையை மாற்று. அதை எதன் மீதாவது செலுத்து.

 

அஸ்வத்தாமன் : இரவிலே பாண்டவர்களைக் கொல்ல வந்த போது கிருஷ்ணன் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். அப்போது பாண்டவர்கள் தப்பித்தார்கள். ஆனால் பாண்டவர்களின் வாரிசை கொன்று விட்டேன்.

 

இப்போதும் பாண்டவர்களைக் கொல்ல வந்தேன். ஆனால், வேத வியாசரான தாங்கள் அவர்களைக் காப்பாற்றி விட்டீர்கள். என்னால் பாண்டவர்களைக் கொல்ல முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுடைய வாரிசைக் கொல்கிறேன்.

 

உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையை நோக்கி செலுத்துகிறேன். உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொல்கிறேன். பாண்டவர்களின் வாரிசு இந்த உலகத்தில் இல்லாமல் அழிக்கிறேன்.

 

பாண்டவர்களைப் போல அந்த குழந்தையும் இந்த உலகத்தில் பிறந்து சூழ்ச்சி செய்து வாழ வேண்டாம்.

 

அதனால் பிரம்மாஸ்திரமே உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் போய் கொன்று விடு.

 

(பிரம்மாஸ்திரம் உத்தரை இருக்கும் இடத்திற்குச் சென்று அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை நோக்கி சென்று உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொன்று விடுகிறது)

 

கிருஷ்ணன் : அஸ்வத்தாமா எவ்வளவு கொடுமையான செயலைச் செய்து இருக்கிறாய்?

ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் இல்லையா?

அஸ்வத்தாமன் : எதைப் பாவம் என்கிறாய். நான் செய்தது பாவம் கிடையாது. பாவத்துடன் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

பாண்டவர்களாகிய பாவிகளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

சூழ்ச்சிகள் செய்து பாவத்தைத் தேடிக் கொண்ட பாண்டவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

அதுவும் அர்ஜுனனின் வாரிசைக் கொல்வது பாவமே கிடையாது.

குழந்தை பிறந்து, வளர்ந்து பாண்டவர்களைப் போல் சூழ்ச்சிகள் செய்து பாவத்தைத் தான் தேடிக்கொள்ளப் போகிறது.

அந்த குழந்தையைப் பாவம் பிடித்து கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தான் உத்தரையின் குழந்தையைக் கொன்றேன்.

கிருஷ்ணன் : நீ கொன்று விட்டால் குழந்தை இறந்து விடும் என்று நினைத்தாயா?

குழந்தையைக் காப்பாற்ற யாரும் இல்லை என்று நினைத்தாயா?

குழந்தைக்கு உயிர் கொடுக்க யாரும் இல்லை என்று நினைத்தாயா?

நான் இருக்கிறேன். இறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்க நான் இருக்கிறேன்.

குழந்தையை உயிரோடு எழுப்ப நான் இருக்கிறேன்.

பாண்டவர்களின் வாரிசுக்கு உயிர் கொடுக்க நான் இருக்கிறேன்.

பாண்டவர்களின் வம்சத்தை அழியாமல் காப்பதற்கு நான் இருக்கிறேன்.

பாணடவர்களுக்காக நான் இருக்கிறேன்.

பாண்டவர்களையும், பாண்டவர்களின் வம்சத்தையும் அழியாமல் பாதுகாக்க நான் இருக்கிறேன்.

நான் இருக்கும் வரை பாண்டவர்களையும், பாண்டவர்கள் வம்சத்தையும் யாரும் ஒன்றும் செய்து விடவும் முடியாது. அழித்து விடவும் முடியாது.

அஸ்வத்தாமா!

நீ செய்த செயல் எவ்வளவு கொடுமையான செயல் தெரியுமா

யாரும் செய்யாத செயல் தெரியுமா

யாருமே செய்ய யோசிக்கக் கூடிய செயல் தெரியுமா

இதுவரை இந்த செயலை யாரும் செய்ததில்லை தெரியுமா

நான் உனக்கு தரப்போகும் சாபம் இந்த உலகத்திற்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

வருங்காலத்தில் இந்தகைய ஒரு செயலை செய்ய யாரும் யோசிக்கவே கூடாது செய்ய முயற்சி செய்யவே கூடாது.

பாவம் செய்தால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

பணம் பதவி அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-1016 மரணமற்ற அஸ்வத்தாமன்-148 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1016

மரணமற்ற அஸ்வத்தாமன்-148

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

வேத வியாசர் : நீ விடும் பிரம்மாஸ்திரம் பாண்டவர்களை  மட்டும் அழித்தால் பரவாயில்லை. ஆனால் பிரம்மாஸ்திரம் இந்த உலகத்தையே அழித்து விடும்.

 

பிரம்மாஸ்திரம் இந்த உலகத்தையே அழித்துவிடும். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அழித்து விடும். எதிர்காலத்தில் இந்த உலகத்தில் எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்று உனக்கு பிரம்மாஸ்திரம் சொல்லிக் கொடுத்தவர் சொல்லவில்லையா

 

 

உன்னுடைய பகை உணர்ச்சி உன்னுடைய பகைவனை மட்டும் அழிக்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். இந்த உலகத்தை அழிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது

 

பாண்டவர்கள் மேல் நீ கொண்ட வெறுப்பு இந்த உலகத்தை அழிக்கக் காரணமாகி விடக்கூடாது.

 

(அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான்)

 

வேத வியாசர் : அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டு விட்டான். நடக்கப் போகும் விரும்பத் தகாத நிகழ்வுகளை கருத்தில் கொண்டு நீயும் பிரம்மாஸ்திரத்தைத் திரும்ப அழைத்துக் கொள்.

 

(அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தைத் திரும்ப அழைத்துக் கொள்ளாமல் இருக்கிறான்.)

 

வேத வியாசர் : அஸ்வத்தாமா! பிரம்மாஸ்திரத்தை ஏன் திரும்ப அழைத்துக் கொள்ளாமல் இருக்கிறாய்? என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய். நேரம் சென்று கொண்டிருக்கிறது. பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்.

 

அஸ்வத்தாமன் : பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்ளும் வித்தை எனக்குத் தெரியாது!

 

வேத வியாசர் : பிரம்மாஸ்திரத்தை முழுவதுமாக தெரியாமல் பயன்படுத்தக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?

 

அஸ்வத்தாமன் :  எனக்குத் தெரியும். அதனால் தான் என் தந்தையிடம் முழுமையாக கற்றுக் கொடுங்கள் என்றேன். என் தந்தை எனக்கு முழுமையாகக் கற்றுக் கொடுக்கவில்லை..

 

வேத வியாசர் : எதற்காக கற்றுக் கொடுக்கவில்லை?

 

அஸ்வத்தாமன் : எனக்கு நல்லவனாக நடிக்கத் தெரியவில்லை. அர்ஜுனனைப் போல் நல்லவனாக நடிக்க எனக்குத் தெரியவில்லை.அதனால் எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

 

அர்ஜுனனைப் போல் நல்லவனாக நடிக்க எனக்குத் தெரிந்து இருந்தால் அர்ஜுனனுக்கு எவ்வாறு பிரம்மாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக சொல்லிக் கொடுத்தாரோ அவ்வாறே எனக்கும் முழுமையாக சொல்லிக் கொடுத்து இருப்பார்

 

எனக்கு அர்ஜுனனைப் போல் நல்லவனாக நடிக்கத் தெரியாத காரணத்தினால் தான் பிரம்மாஸ்திரத்தைப் பற்றி என்னுடைய தந்தை முழுமையாக எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை

 

என் தந்தை அர்ஜுனனை நல்லவன் என்று நம்பினார்.

தன்னை ஏமாற்ற மாட்டான் என்று நம்பினார்.

தனக்கு துரோகம் செய்ய மாட்டான் என்று நம்பினார்.

தனக்கு கெடுதல் செய்ய மாட்டான் என்று நம்பினார்.

அதனால் தான் அர்ஜுனனுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார்.

பிரம்மாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக கற்றுக் கொடுத்தார்.

ஆனால் அர்ஜுனன் என் தந்தை கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதை தடுக்கக் கூட வரவில்லை. அதை தடுப்பதற்கு எந்த ஒரு செயலும் செய்யவில்லை. எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

 

என் தந்தை அர்ஜுனனை நம்பி இருந்தார். ஆனால் அர்ஜுனன் என் தந்தைக்கு துரோகம் செய்து விட்டான்.

 

நல்லவனாக இருந்த என்னை என் தந்தை நம்பவில்லை. அர்ஜுனனைப் போல் நல்லவனாக எனக்கு நடிக்கத் தெரியவில்லை. அதனால் என் தந்தை பிரம்மாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-1015 மரணமற்ற அஸ்வத்தாமன்-147 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1015

மரணமற்ற அஸ்வத்தாமன்-147

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

 

உன்னை எப்படி கர்ணனுடன் ஒப்பிட முடியும்.

உன்னை கர்ணனுடன் ஒப்பிடவே கூடாது.

கர்ணனுடன் ஒப்பிடும் அளவிற்கு உனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

கர்ணனுடன் உன்னை ஒப்பிடும் அளவுக்கு

நீ ஒன்றும் வீரத்தில் சிறந்தவன் இல்லை.

நீ ஒரு அடிமை.

கிருஷ்ணனின் அடிமை.

கிருஷ்ணன் சொன்னதைச் செய்யும் அடிமை

சுயபுத்தி இல்லாத அடிமை.

 

குருஷேத்திரப் போர்க்களத்தில் வில்லை எடுத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தாய். நான் வீரன் வீரன் என்று சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தாய். நீ எல்லாம் வீரத்தைப் பற்றிப் பேசுகிறாய். வேடிக்கையாக இருக்கிறது

 

கிருஷ்ணன் உனக்கு சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே அஸ்வத்தாமன் மரணமற்றவன்

அவனைக் கொல்ல முடியாது

அவனை அடிமைப்படுத்த முடியாது.

அவனை வீழ்த்த முடியாது.

அவனை சூழ்ச்சி செய்து நாட்டை விட்டுத் தான் துரத்த முடியும் என்று சொல்லி இருப்பானே.

 

என்னை எப்படி சூழ்ச்சி செய்து விரட்டுவது என்று சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே.

 

சூழ்ச்சி செய்து தானே அனைவரையும் வீழ்த்தினீர்கள், சூழ்ச்சி செய்து தானே அனைவரையும் கொன்றீர்கள். அதனால் என்னையும் எப்படி சூழ்ச்சி செய்து விரட்டுவது என்பதை சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே அந்த சூழ்ச்சி மேதை கிருஷ்ணன்.

 

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் கிருஷ்ணன் அதை செயல்படுத்துவதில் வல்லவர்கள் நீங்கள்.

 

இப்போது என்னை விரட்ட எந்த சூழ்ச்சியுடன் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்குத் தான் வீரம் என்பதே கிடையாதே.

 

அர்ஜுனா!

நான் வீரன், நான் வீரன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாயே! உனக்கு வெட்கமாக இல்லை.

 

நீயெல்லாம் ஒரு வீரன்

உன்னையும் வீரன் என்று நம்பிக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது.

உன்னைப் போற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

உன்னை வாழ்த்துவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

ஒன்றும் அறியாத அடிமைக் கூட்டம்

உன்னை வீரன் என்று நம்பிக் கொண்டு இருக்கிறது.

 

வீரம் இல்லாத உனக்கு வில் எதற்கு? எதற்காக வில்லை கையில் எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறாய். சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதற்கு கைகளில் வில். அதை கீழே எறிந்து விட்டு சூழ்ச்சியை செயல்படுத்து..

 

அர்ஜுனன் : போதும் பேசுவதை நிறுத்து அஸ்வத்தாமா! உனக்கு பேச மட்டும் தான் தெரியும்.

 

அஸ்வத்தாமன் : ஆமாம் எனக்கு உண்மையை பேசத் தெரியும்,

வீரம் என்றால் என்ன என்று தெரியும்

வீரம் இல்லாதவர்கள் யார் என்று தெரியும்

வீரத்துடன் போரிடாதவர்கள் யார் என்று தெரியும்

வீரம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் யார் என்று தெரியும்

வீரர்களைப் பார்த்து பயப்படுபவர்கள் யார் என்று தெரியும்

 

சூழ்ச்சி செய்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சியை உணர்ந்து கொள்ளத் தெரியும்

சூழ்ச்சி செய்பவர்களுடன் கூட்டு வைத்திருப்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து வெற்றி பெற நினைப்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து கொல்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து கொன்றவர்கள் யார் என்று தெரியும்

 

(அர்ஜுனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது.

 

சண்டையின் உச்சகட்டத்தில் பிரம்மாஸ்திரத்தை அஸ்வத்தாமன் விட அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை விடுகிறான்)

 

வேத வியாசர் : அர்ஜுனா, அஸ்வத்தாமா இருவரும் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்.

 

அஸ்வத்தாமன் : எதற்காக நான் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

 

அர்ஜுனனையும், பாண்டவர்களையும் அழிப்பதற்காகத் தானே செலுத்தினேன்.

அவர்களைக் கொல்வதற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இறக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கொல்வதற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால் மேலும் மேலும் அக்கிரங்களைச் செய்து கொண்டிருப்பார்கள் என்ற காரணத்தினால் தானே செலுத்தினேன்.

 

சூழ்ச்சிகள் செய்து இன்னும் பல குடும்பங்களை அழிப்பார்கள் என்ற காரணத்திற்காகத் தானே செலுத்தினேன்.

 

பாண்டவர்களைக் கொல்வேன் என்று துரியோதனனுக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தானே செலுத்தினேன்.

 

இதில் என்ன தவறு இருக்கிறது

 

இதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

ஜபம்-பதிவு-1014 மரணமற்ற அஸ்வத்தாமன்-146 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1014

மரணமற்ற அஸ்வத்தாமன்-146

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

பாண்டவர்களைக் கொல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாண்டவர்களின் வாரிசுகளையாவது கொன்றேனே அதுவே எனக்குப் போதும்.

அன்று இரவில் நீங்கள் ஐவரும் இருந்திருந்தால் அனைவரும் கொல்லப்பட்டு இருப்பீரகள் என்று கிருஷ்ணனுக்குத் தெரியும்

என்னை எதிர்த்து உங்களால் போரிட்டு ஜெயிக்க முடியாது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்.

என்னுடன் சண்டையிட்டு நீங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்.

என்னை எதிர்த்து சண்டையிட்டால நீங்கள் இறந்து விடுவீர்கள் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்,

உங்கள் உயிரைக் காப்பாற்ற கிருஷ்ணன் உங்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். மறைவான இடத்தில் கொண்டு சென்று உங்களை மறைத்து வைத்து விட்டான்.

நீங்களும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி போய் ஒளிந்து கொண்டீர்கள்.

உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்ட நீங்கள் கோழைகளா? அல்லது உங்களை அழிக்க வந்த நான் கோழையா?

நீங்கள் தான் கோழைகள். வீரர்கள் போல நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை வீரர்கள் போல் இந்த உலகத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

உங்களுடைய போலி நாடகத்தை நம்பி ஏமாந்து, இந்த உலகமும் உங்களை வீர்ர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது.

உங்களை வாழ்த்திக் கொண்டு இருக்கிறது. போற்றிக் கொண்டு இருக்கிறது.

அர்ஜுனா!

ஜெயத்ரதனை சூரிய உதயத்திற்குள் கொல்வேன் அப்படி என்னால் கொல்ல முடியவில்லை என்றால் தீயில் விழுந்து இறந்து போவேன் என்று வீரவேசமாக சபதம் எடுத்து விட்டு

 

ஜெயத்ரதனை நெருங்க முடியாமல், ஜெயத்ரதனைக் கொல்ல முடியாமல், எங்கே தோற்று விடுவோமோ? நெருப்பில் இறங்கி இறந்து இறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து 

 

என் தந்தையின் காலில் விழுந்து, அழுது புரண்டு, நீதி என்றும். நியாயம் என்றும், தர்மம் என்றும், பேசி, உயிர் வாழ்வதற்குப் பிச்சை கேட்டு,

 

உங்கள் சீடனுக்கு இந்த நிலை ஏற்படலாமா என்று கதறி கண்ணீர் விட்டு என் தந்தையின் காலைப் பிடித்துக் கதறியதால், நீ செல்வதற்கு என் தந்தை வழி விட்டார்.

 

பின்னர் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் சூரியனை மறைத்து ஜெயத்ரதனை வெளியே வரச்செய்து ஜெயத்ரதன் வெளியே வந்ததும், சூரியன் இன்னும் அஸ்தனமம் ஆகவில்லை ஜெயத்ரதனைக் கொல் என்று கிருஷ்ணன் சொன்னதும், சுயபுத்தி இல்லாமல் ஜெயத்ரதனைக் கொன்றாயே நீ தானடா கோழை.

 

கர்ணன் ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த போது கர்ணனைக் கொன்றாயே நீ தான் கோழை.

 

அர்ஜுனா

இந்த 18 நாள் நடந்த குருஷேத்திரப் போரில் உருப்படியாக என்ன செய்தாய்.  உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை.

எந்த ஒரு சாதனையையும் செய்யவில்லை. வீரத்துடன் போரிடவில்லை. நேர்மையாக யாரையும் கொல்லவில்லை.

கிருஷ்ணன் போரிடு என்று சொல்லும் போது போரிட்டாய்.

கிருஷ்ணன் போரிடாதே என்று சொல்லும் போது போரிடவில்லை.

 

கிருஷ்ணன் அம்பை விடு என்று சொல்லும் போது அம்பை விட்டாய்.

கிருஷ்ணன் அம்பை விடாதே என்று சொல்லும் போது அம்பை விடவில்லை.

 

கிருஷ்ணன் எதிரியைக் கொல் என்று சொல்லும் போது எதிரியைக் கொன்றாய்.

கிருஷ்ணன் எதிரியைக் கொல்லாதே என்று சொல்லும் போது எதிரியைக் கொல்லவில்லை.

 

சொல்லப்போனால் இந்தப் போரில் நீ சுயமாக எதுவும் செய்யவில்லை. சொந்தமாக செயல்படவில்லை. சுயபுத்தியுடன் போரிடவில்லை.

 

கிருஷ்ணனுக்கு அடிமையாக இருந்தாய். கிருஷ்ணன் சொல்லியதை செயல்படுத்தினாய். கிருஷ்ணன் சொன்னபடி நடந்து கொண்டாய்.

 

கிருஷ்ணன் உன்னை இயக்கினான். நீ இயங்கினாய். கிருஷ்ணனின் கைப்பாவையாக இருந்தாய்.

 

கிருஷ்ணன் செய்த சூழ்ச்சியை நீ செயல்படுத்தினாய். அவ்வளவு தான் இந்தப் போரில் எங்கே உன் வீரம் வெளிப்பட்டது. எங்கேயும், எந்த இடத்திலும் உன்னுடைய வீரம் வெளிப்படவேயில்லை.

 

பீஷ்மரை சிகண்டி கொன்றான்

என் தந்தை துரோணரை திருஷ்டத்யும்னன் கொன்றான்

சல்லியனை தர்மர் கொன்றான்

துரியோதனனையும் மற்ற கௌரவர்கள் 99 பேரையும் பீமன் கொன்றான்

 

இந்தப் போரில் என்ன பெரியதாக சாதித்து விட்டாய். இந்தப் போரில் நீ ஒன்றுமே சாதிக்கவில்லை.

 

 

உன்னை கர்ணனுடன் ஒப்பிடுகிறார்கள். அது தவறானது. கேவலமானது. வெட்கக் கேடானது. உன்னை கர்ணனுடன் ஒப்பிடவே கூடாது.

 

கர்ணன் போரில் தனியாக சுயபுத்தியுடன் போரிட்டான். வீரத்துடன் போரிட்டான். நேர்மையாக போரிட்டான். ஆனால் நீ கிருஷ்ணன் சொன்னதைச் செய்தாய். கிருஷ்ணனுக்கு அடிமையாக செயல்பட்டாய். கிருஷ்ணனின் சூழ்ச்சிகளைச் செயல்படுத்தினாய்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////