May 03, 2020

பரம்பொருள்-பதிவு-225


              ஜபம்-பதிவு-473
            (பரம்பொருள்-225)

“அழிவற்ற இருப்பு நிலை
எழுச்சி பெற்று
காலம் ; தூரம் ;
பருமன் ; வேகம் ;
ஆகிய நான்கு
பரிமாணங்களைக் கொண்டு
இயங்கும் போது
இயக்க நிலை
உண்டாகிறது “

“இருப்பு மற்றும்
இயக்கம் ஆகிய
இரண்டு நிலைகளும்
ஒன்றாக இணைந்து
பஞ்ச பூதங்கள் என்று
சொல்லப்படக்கூடிய
நிலம் நீர் நெருப்பு
காற்று விண்
ஆகியவை உண்டாகிறது”

“பஞ்சபூதங்கள் அனைத்தும்
ஒன்றாக இணைந்து

உடம்பால் உணரக்கூடிய
ஓரறிவு உயரினமான
புல் மரம்
போன்றவைகளும் ;

உடம்பு ; நாக்கு ;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
ஈரறிவு உயிரினமான
நத்தை சங்கு சிப்பி
போன்றவைகளும் ;

உடம்பு; நாக்கு; மூக்கு;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
மூவறிவு உயிரினமான
ஈசல் எறும்பு
போன்றவைகளும் ;

உடம்பு ;நாக்கு ;
மூக்கு ; கண் ;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
நான்கறிவு
உயிரினமான
நண்டு தும்பி
வண்டு
போன்றவைகளும் ;

உடம்பு ; நாக்கு ;
மூக்கு; கண்; காது;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
ஐயறிவு உயிரினமான
பறவைகள்
நான்கு கால் விலங்குகள்
போன்றவைகளும் ;

அதனைத் தொடர்ந்து

உடம்பு; நாக்கு; மூக்கு;
கண் ; காது ; மனது;
ஆகியவற்றால்
உணரக்கூடிய
ஆறறிவு உயிரினமான
மனிதனும் தோன்றுகிறான் “

“மனிதன் தான் என்ற
அதிகாரப் பற்றிலும்
தனது என்ற
பொருள் பற்றிலும்
செயல்களைச் செய்கிறான் “

“மனிதன் எந்தவொரு
செயலைச் செய்தாலும்
செயலுக்கான விளைவு
கண்டிப்பாக உண்டு “

“மனிதன் செய்யும்
எந்த ஒரு செயலிலும்
அந்த செயலுக்குரிய
விளைவானது
செய்யும் செயலிலேயே
இருக்கின்ற காரணத்தினால்
மனிதன் எந்த ஒரு
செயலையும் செய்து விட்டு
அந்த விளைவிலிருந்து
தப்பிக்கவே முடியாது “

“மனிதன் செய்யும்
எந்தவொரு செயலும்
பாவம் ; புண்ணியம் ;
என்ற இரு நிலைகளில்
மனிதனுடைய
ஆன்மாவில் பதிகிறது “

“மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
புண்ணிய பதிவுகளுக்கும்
பாவப்பதிவுகளுக்கும்
ஏற்றபடி மனிதனுக்கு
பிறவி என்பது ஏற்படுகிறது “

“மனிதனுடைய
ஆன்மாவில்
புண்ணிய பதிவுகள்
பாவப்பதிவுகள் ஆகிய
இரண்டு பதிவுகளும்
பதிந்து இருந்தால்
அந்த பதிவுகளுக்கு
ஏற்றபடி மனிதன்
இந்த உலகத்தில்
பிறவி எடுத்து
சுவர்க்க வாழ்க்கையையும்
நரக வாழ்க்கையையும்
மாறி மாறி ஒரு சேர
அனுபவிக்கிறான்”

“மனிதனுடைய
ஆன்மாவில்
புண்ணியப் பதிவுகள்
மட்டும் பதிந்து இருந்தால்
அந்த புண்ணியத்திற்குரிய
பலன்களை
அனுபவிப்பதற்காக இந்த
உலகத்தில் பிறவி எடுத்து
சுவர்க்க வாழ்க்கையை
அனுபவிக்கிறான்”

“மனிதனுடைய
ஆன்மாவில்
பாவப்பதிவுகள் மட்டும்
பதிந்து இருந்தால்
அந்த பாவத்திற்குரிய
பலன்களை
அனுபவிப்பதற்காக
இந்த உலகத்தில்
பிறவி எடுத்து
நரக வாழ்க்கையை
அனுபவிக்கிறான்”

“சுவர்க்கம் நரகம் என்ற
இரண்டு வார்த்தைகளும்
மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
புண்ணிய பதிவுகளுக்கும்
பாவப்பதிவுகளுக்கும்
ஏற்ப இந்த உலகத்தில்
பிறவி எடுத்து
அனுபவிக்கக்கூடிய
சுவர்க்க வாழ்க்கையையும்
நரக வாழ்க்கையையும்
குறிப்பது ஆகும்”

“பாவத்திற்காக
பிறவி எடுக்கும் ஆன்மா
புண்ணியத்திற்காகவும்
பிறவி எடுத்துத்
தான் ஆக வேண்டும்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment