May 03, 2020

பரம்பொருள்-பதிவு-226


            ஜபம்-பதிவு-474
           (பரம்பொருள்-226)

“மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
பாவப்பதிவுகளை மட்டும்
கழித்தால் போதாது
புண்ணியத்தையும்
கழித்துத் தான்
ஆக வேண்டும் “

“மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
பாவப்பதிவுகளையும்
புண்ணிய பதிவுகளையும்
கழித்தால் மட்டுமே
மனிதனுடைய
ஆன்மாவிற்கு பிறவி
என்பது கிடையாது “

“மனிதன் செய்யும்
எந்தவொரு செயலும்
பாவப்பதிவுகளாகவும்
புண்ணியப் பதிவுகளாகவும்
மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்தாலும்
இவைகள்
சஞ்சித கர்மம்
பிராரப்த கர்மம்
ஆகாம்ய கர்மம்
என்ற மூன்று
கர்மாக்களாக
மனிதனுடைய ஆன்மாவில்
பதிந்து மனிதனுடைய
பிறவி முழுவதும்
தொடர்ந்து வந்து
கொண்டே இருக்கிறது “

“வெள்ளைத் துணியில்
அழுக்கு எப்படி
படிந்திருக்கிறதோ
அவ்வாறே
நம்முடைய ஆன்மாவில்
கர்மாக்கள் பதிந்துள்ளன “

“மனிதனுடைய
ஆன்மாவில்
கர்மாவானது பதிந்து
இருக்கும் வரை
மனிதனுடைய
பிறவியானது தொடர்ந்து
கொண்டே இருக்கும் “

“வெள்ளைத் துணியில்
உள்ள அழுக்கை
நீக்கினால்
வெள்ளைத் துணி
எப்படி அழுக்கு
இல்லாமல் இருக்குமோ
அதைப்போல
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்மாக்களை இறை
அருளால் நீக்க வேண்டும் “

“ஆன்மாவில்
பதிந்துள்ள கர்மாக்களை
இறை அருளால்
முழுவதும் நீங்கி
விடும்போது
ஆன்மாவானது
தன்னுடைய
யாத்திரையை
முடித்து விடுகிறது  

“கடவுளுடன்
இணைந்து அதுவாகவே
மாறி விடுகிறது
ஆன்மா
முக்தி என்ற
மோட்சத்தை
அடைந்து விடுகிறது “

“ஆன்மாவானது
முக்தி என்ற
மோட்சத்தை
அடைவதற்கு முதலில்
மனிதன்
ஆன்மீகத்தில்
முதல் அடியை
எடுத்து
வைக்க வேண்டும் “

“ஆன்மீகத்தில்
முதல் அடியை எடுத்து
வைப்பது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல “

“தான் நன்றாக
இருக்க வேண்டும்  ;
தன்னுடைய குடும்பம்
நன்றாக இருக்க
வேண்டும் ;
தன்னுடைய
சந்ததிகள் நன்றாக
இருக்க வேண்டும்; - என்று
தன்னைப் பற்றியும்
தன்னுடைய
குடும்பத்தைப்
பற்றியும் மட்டுமே
நினைத்துக் கொண்டு
வாழ்க்கையைப் பார்த்து
அச்சப் பட்டுக்
கொண்டிருப்பவர்களாலும்  ;
மரணத்தைப்
பார்த்து பயந்து
கொண்டிருப்பவர்களாலும் ;
ஆன்மீகத்தில்
முதல் அடியைக் கூட
எடுத்து வைக்க முடியாது “

“பிறருடைய துன்பம்
கண்டு வருத்தப்படுதல்  
பிறருடைய துன்பத்தை
தன்னுடைய துன்பமாக
நினைத்து அதை
துடைத்தல் ;
தனக்காக வாழாமல்
பிறருக்காக வாழுதல் ;  
பொது நல எண்ணம்
கொண்டு செயலைச்
செய்தல் ;
வாழ்க்கையின்
பிரச்சினையைக்
கண்டு கலங்கி
விடாதிருத்தல் ;
மரணத்தைக் கண்டு
பயப்படாதிருத்தல் ;
ஆகிய தன்மைகளைக்
கொண்டவர்களால்
மட்டுமே

இந்த உலகம் முழுவதும்
நிரம்பி இருக்கக்
கூடிய கடவுள்
நம்முடைய உடலிலும்
இருக்கிறான் என்பதை
உணர்ந்து கொள்ள
முடியும் அவ்வாறு
உணர்ந்து கொள்பவர்களால்
மட்டுமே ஆன்மீகத்தில்
முதல் அடியை
எடுத்து வைக்க முடியும்”

“அதனைத் தொடர்ந்து
ஞானம் சமாதி என்ற
வரிசையில்
மோட்சம்
என்ற நிலையை
அடைய முடியும்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment