May 14, 2020

பரம்பொருள்-பதிவு-238


               ஜபம்-பதிவு-486
             (பரம்பொருள்-238)

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
ஒன்றுடன்
ஒன்று
பிணைந்தது ;
ஒன்றுடன்
ஒன்று தொடர்பு
கொண்டது ;
இந்த மூன்றையும்
ஒன்றிலிருந்து
ஒன்றை
தனித்தனியாக
பிரிக்க முடியாது ;
மூன்றும்
ஒன்றுக்குள்
ஒன்று அடங்கி
இருக்கிறது ;
இந்த மூன்றின்
முக்கிய
நிலைகளில்
மனம் என்பது
இருக்காது ;
மனம் என்பது
இல்லாத
காரணத்தினால்
காலம் என்பது
இருக்காது ;
இதனால்
இந்த மூன்றும்
கடவுள் தன்மை
வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது ;
என்பதை
உணர்ந்தவர்களால்
காதல் ததும்பும்
காம ரசம்
சொட்டும்
சிலைகளை
கோயிலின்
கோபுரத்திலும்
கோயிலுக்குள்
உள்ள
இடங்களிலும்
வடித்து
வைத்தனர் “

“காதல்
காமம்
கடவுள்
மூன்றும்
ஒன்று
என்று
உணர்ந்தவர்களால்
மட்டுமே
இத்தகைய
சிலைகளை
வடிக்க முடியும் “

“மூன்றும்
ஒன்று என்று
உணர்ந்தவர்களால்
மட்டுமே
இத்தகைய
சிலைகளின்
கடவுள் தன்மையை
உணர்ந்து
பார்க்க
முடியும் “

“கடவுளை
எவ்வளவு
புனிதமாக
நம்முடைய
முன்னோர்கள்
பார்த்தார்களோ
அவ்வளவு
புனிதமாக
காதலையும்
காமத்தையும்
நம்முடைய
முன்னோர்கள்
பார்த்தார்கள் “

காதல் :
“காதல்
செய்யும்
காதலன்
காதலி ஆகிய
இருவருமே
காதலின்
ஆழத்திற்கு
சென்று
காலம்
இல்லாத
நிலையான
கடவுள்
தன்மையை
தரிசனம்
செய்து இருந்தால்
காதலுக்கு
தடையாக
யார் இருந்தாலும்
அவர்களை
எதிர்க்க
இவர்கள்
தயங்க
மாட்டார்கள்
எந்த ஒன்றையும்
இழப்பதற்குத்
தயாராக
இருப்பார்கள் ;
மரணத்தைக்
கண்டு கலங்க
மாட்டார்கள் ;
காதலுக்காக
தங்கள்
உயிரையே
கொடுப்பதற்குக்
கூட தயாராக
இருப்பார்கள் ;”

“இது தான்
உண்மையான
காதல் ;
இவர்கள் தான்
உண்மையான
காதலர்கள் ;
இவர்கள் தான்
காதலின்
ஆழத்திற்கு
சென்று
காலம் இல்லாத
நிலையான
கடவுள்
தன்மையை
தரிசனம்
செய்தவர்கள் ;”

“காதலின்
ஆழத்திற்கு
சென்று
மனம் இல்லாத
நிலையில்
காலம் இல்லாத
நிலையான
கடவுள்
தன்மையை
தரிசனம் செய்து
இருந்தால்
மட்டுமே
இந்த நிலையில்
இருப்பார்கள்;
மற்ற காதலர்கள்
இவ்வாறு
இருக்க
மாட்டார்கள் ;”

“இவர்கள் தான்
காதலின்
ஆழத்தில்
கடவுள்
தன்மையை
உணர்ந்தவர்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 14-05-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment