June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-74


                  ஜபம்-பதிவு-566
           (அறிய வேண்டியவை-74)

துரியோதனன் :
“அப்படி என்றால் நீ
அதர்மச் செயலை
புரியவே இல்லையா”

“பாண்டவர்களை
வாரணாவதத்தில்
அவர்கள் தங்கி
இருந்த மாளிகையை
நெருப்புக்கு
இரையாக்கியபோது
அந்த செயலுக்கு நீ
துணையாகத்தானே
இருந்தாய்
இது அதர்மம் இல்லையா?”

கர்ணன் :
“அப்போது நீ
எனக்குத் தலைவனாக
இருந்தாய் நான்
உன் கட்டளைகளை
கேட்டு நடக்கும்
அடிமையாக இருந்தேன்”

துரியோதனன் :
“கௌரவர்கள் அவையில்
திரௌபதியை துகில்
உரித்த போது நடந்த
செயலை தடுக்காமல்
நீ எங்களுடன்
சேர்ந்து தானே இருந்தாய்
எங்களுடன் சேர்ந்துதானே
நீ திரௌபதியை
இழிவு தரும்
வார்த்தைகளைக்
கொண்டு பேசினாய்
அது அதர்மம் இல்லையா?”

கர்ணன் :
“அப்போதும் நீ
எனக்கு தலைவனாக
இருந்தாய் நான்
உனக்கு அடிமையாக
இருந்தேன்”

துரியோதனன் :
“கௌரவப் படையைச்
சேர்ந்தவர்கள் அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து
அபிமன்யுவைக்
கொன்றபோது நீயும்
தான் உடனிருந்து
அபிமன்யுவைக்
கொல்ல உதவி
புரிந்தாய்
அது அதர்மம் இல்லையா?”

கர்ணன் :
“அப்போது தலைவனாக
இருக்கும் உன்னுடைய
கட்டளையை ஏற்று
நடக்கக் கூடிய
சேனாதிபதியாக
துரோணர் இருந்தாரே
அதைப்போல
தலைவனாக இருந்த
உனக்கு நான்
அடிமையாக இருந்தேன்”

“நீ எப்போது எல்லாம்
தலைவனாக இருந்து
எனக்கு கட்டளை
பிறப்பித்தாயோ
அப்போது எல்லாம்
நான் உனக்கு
அடிமையாக இருந்து
நீ சொன்னவைகளைச்
செய்தேன்
உன்னுடைய
சொல்லுக்குக்
கட்டுப்பட்டேன்
உனக்கு அடிமையாக
இருந்தேன்”

“நீ கட்டளை இடும்
தலைவன் இடத்தில்
இருந்தாய் நான் அதை
ஏற்று நடத்தும்
அடிமையாக  இருந்தேன்”
 
“நீ தலைவனாக
இருந்து
கட்டளை இடும்
இடத்தில்
இருந்த போது
எல்லாம்
உன்னுடைய
அதர்மச் செயலை
என்னால்
தடுக்க முடியவில்லை
நீ நண்பனாக
என்னுடன் இருக்கும்
போது நீ செய்த
அதர்மச் செயலை
தடுக்க முயற்சி
செய்தேன்
முடியவில்லை “

“நண்பா! நீ
எத்தகைய செயலைச்
செய்தாலும் உன்னை
காப்பாற்றுவதற்கு இந்த
உலகத்தில் ஆயிரம்
பேர் வருவார்கள்
ஏனென்றால் நீ
உயர்ந்த குலத்தில்
பிறந்தவன் என்பதால்
என்னைக்
காப்பாற்றுவதற்கு
யாரும் வர
மாட்டார்கள்
நான் தாழ்ந்த
குலத்தில்
பிறந்தவன் என்று
இந்த உலகம்
என்னை நம்பிக்
கொண்டிருப்பதால்”

“அதனால் தான்
துரியோதனா நான்
அர்ஜுனன் மேல்
அம்பு செலுத்தவில்லை”

துரியோதனன் :
“துரோணர் உன்னை
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் அர்ஜுனனுடன்
மோதக் கூடாது
என்று தடுத்தாரே
அப்போது
உன்னுடைய
மானத்தைக்
காப்பாற்றியது நான்
என்பதை
மறந்து விட்டாயா?”

கர்ணன் :
“நான் மறக்கவில்லை
நீ செய்த உதவியை
நான் மறக்கவில்லை
நீ செய்த உதவியை
நான் என்றும்
மறக்க மாட்டேன்
அன்று நீ செய்த
அந்த ஒரு
செயலுக்காகத் தான்
நான் இன்று வரை
நான் உன் மேல்
உண்மையாக நட்பு
கொண்டிருக்கிறேன் நண்பா”

“உனக்காக உயிரையும்
கொடுக்கக் காத்துக்
கொண்டிருக்கிறேன்
என்னுடைய உயிர்
உனக்குத் தான் என்று
அன்று நான் சொன்ன
வார்த்தைகள்
சத்தியமான வார்த்தைகள்
இன்றும் சொல்கிறேன்
என்னுடைய
அருமை நண்பா
என்னுடைய உயிர்
உனக்குத் தான்”

“உன் மேல் நான்
கொண்ட நட்பு அன்று
முதல் இன்று வரை
மாறவேயில்லை
நீ தான் மாறி
விட்டாய் நண்பா”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment