July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-102


               ஜபம்-பதிவு-594
        (அறிய வேண்டியவை-102)

“அத்தகைய
சிறப்பு வாய்ந்த
பீமனால் கூட
துரியோதனனை வெற்றி
கொள்ள முடியாது
ஏனென்றால்
பீமனைக் கொல்ல
வேண்டும் என்ற
எண்ணத்தினால்
பீமனைப் போல்
ஒரு உருவத்தை
இரும்பினால் செய்து
13 வருட காலம்
அந்த பீமனின்
இரும்புச் சிலையோடு
முறையாக
சண்டைப் பயிற்சி
செய்து இருக்கிறான்
துரியோதனன்
பீமன் திறமையானவனும்
பலம் வாய்ந்தவனும்
தான் - ஆனால்
பயிற்சி இல்லாதவன்
ஆனால் துரியோதனன்
திறமையும் பலமும்
பெற்றவன் மட்டுமல்ல
பயிற்சியும் செய்தவன்”

“வெற்றி பெற
வேண்டும் என்றால்
திறமையும் பலமும்
இருந்தால் மட்டும்
போதாது - முறையான
பயிற்சியும்
இருக்க வேண்டும்”

“திறமையையும்
பலத்தையும் வைத்துக்
கொண்டு மட்டும்
கதாயுத சண்டையில்
யாராலும் வெற்றி
பெற முடியாது
திறமையுடனும்
பலத்துடனும்
முறையான பயிற்சியும்
இருந்தால் மட்டுமே
கதாயுத சண்டையில்
வெற்றி பெற முடியும்”

“துரியோதனன்
அளவிட முடியாத
திறமையும்
நினைத்துப் பார்க்க
முடியாத பலத்தையும்
கொண்டு முறையான
பயிற்சி செய்து
சண்டையிட
தயாராக இருக்கிறான்
அதனால் தான்
நான் சொல்கிறேன்
பீமனாலேயே
துரியோதனனைக்
கதாயுத சண்டையில்
வீழ்த்தி வெற்றி
கொல்ல முடியாது
என்றால் நகுலனாலோ
சகாதேவனாலோ
அல்லது உங்களாலோ
எப்படி வெற்றி பெற
முடியும் பெரிய அண்ணா “

“துரியோதனனை
கதாயுத சண்டையில்
இந்த உலகத்தில் உள்ள
யாராலும் வீழ்த்தி
வெற்றி பெற முடியாது
என்பதை நினைவில்
கொள்ளுங்கள்
பெரிய அண்ணா”

“துரியோதனன்
பீமனை விட்டு விட்டு
மற்றவர்களைத்
தேர்ந்தெடுத்தால்
என்ன செய்வது
சொல்லுங்கள்
பெரிய அண்ணா
சொல்லுங்கள்
இப்போது என்ன
செய்வதென்று
சொல்லுங்கள்
சொல்லுங்கள்”

தர்மர் :   
“எனக்கு துரியோதனனை
நீருக்குள் இருந்து
வெளியே கொண்டு
வருவதற்கும்
அவனை சண்டையிட
சம்மதம் தெரிவிக்க
வைப்பதற்கும் வழி
எதுவும் தெரியவில்லை
அதனால் தான்
துரியோதனனிடம்
உனக்கு தேவைப்படும்
ஆயுதத்தை எடுத்துக்
கொள் உனக்கு
வேண்டியவரைத்
தேர்ந்தெடுத்து
வேண்டியவருடன்
சண்டையிடு என்றேன்
நீ யாரைத் தேர்ந்தெடுத்து
சண்டையிடுகிறாயோ
அவரைக் கொன்றால்
நீ இந்த நாட்டை
ஆளலாம் என்றேன் “

கிருஷ்ணன் :
“துரியோதனன் யாரைத்
தேர்ந்தெடுக்கிறான்
என்று பார்ப்போம்”

/////////////////////////////////////////
(துரியோதனன் பேசத்
தொடங்கினான்)

துரியோதனன் :
“நீங்கள் எனக்கு
வாய்ப்பு தந்தது போல்
நானும் உங்களுக்கு
வாய்ப்பு தருகிறேன்”

“உங்களில் யார்
ஒருவர் என்னுடன்
சண்டையிட வேண்டும்
என்று விரும்புகிறாரோ
யார் ஒருவர் என்னுடன்
சண்டையிட முடியும்
என்று நினைக்கிறாரோ
யார் ஒருவர் என்னுடன்
சண்டையிட தயாராக
இருக்கிறாரோ
என்னுடைய
திறமையை எதிர்த்து
என்னுடைய
பலத்தை எதிர்த்து
என்னுடைய
கதாயுதத்தை எதிர்த்து
என்னுடன் சண்டையிட
வேண்டும் என்று
யார் நினைக்கிறாரோ
அவர் என்னுடன்
வந்து நேருக்கு
நேராக வந்து
சண்டை புரியலாம்”

பீமன் :
“துரியோதனா உன்னுடன்
சண்டையிடுவதற்கு
நான் தயாராக
இருக்கிறேன்
வா துரியோதனா“

துரியோதனன் :
“சண்டையிடுவதற்கு
தயாராக இருக்கிறேன்
என்று சொல்லாதே
என்னிடம் அடி
வாங்குவதற்கு
தயாரக இருக்கிறேன்
என்று சொல்”
///////////////////////////////////
(தர்மர் கிருஷ்ணனிடம்
தனிமையில் பேசினார்)

தர்மர் :
“துரியோதனன்
ஏன் அவனாகவே
எதிரியை
தேர்ந்தெடுக்காமல்
தேர்ந்தெடுக்கும்
பொறுப்பை
எதிரியிடமே
ஒப்படைத்து விட்டான்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment