July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-97


               ஜபம்-பதிவு-589
         (அறிய வேண்டியவை-97)

கிருஷ்ணன் :
துரியோதனன்
வெளியே வர
வேண்டும் என்றால்
நீங்கள் பேச
வேண்டும்
துரியோதனனை
வெளியே வரவழைக்க
ஒரே வழி நீங்கள்
பேச பேசுவது தான்
நீங்கள் பேசுவதைப்
பொறுத்துத் தான்
துரியோதனன்
வெளியே வருவதும்
வராததும்
இருக்கிறது”

தர்மர் :
“துரியோதனா
ஏன் போய்
மடுவிற்குள் ஒளிந்து
கொண்டிருக்கிறாய்  

“எல்லா
சஷத்திரியர்களையும்
உன்னுடன்
சேர்ந்தவர்களையும்
உன்னுடைய
குலத்தையும்
அழித்து விட்டு
ஏன் இங்கு
வந்து ஒளிந்து
கொண்டிருக்கிறாய்
துரியோதனா
வெளியே வா
வெளியே வந்து
போரிடு”

“சஷத்திரியனாக
நற்குலத்தில்
பிறந்தவன் நீ
குருவம்சத்தில்
உதித்தவன் நீ
குருவம்சத்தின்
பெருமைகளை
உணர்ந்தவன் நீ
குரு வம்சத்திற்கு
உன்னால் கெட்ட
பெயர் ஏற்படாமல்
இருக்க
வேண்டுமானால்
கோழையைப் போல்
ஒளிந்து கொள்ளாமல்
வெளியே
வந்து போரிடு”

“கோழையைப் போல்
ஒளிந்து கொள்ளாதே
கோழையைப் போல்
ஒளிந்து கொண்டு
குரு வம்சத்திற்கு
கெட்ட பெயர்
ஏற்படுத்தாதே
குருவம்சத்தில்
பிறந்த நீ ஏன்
இவ்வாறு
தண்ணீரில் ஒளிந்து
கொண்டிருக்கிறாய்
போரிடாமல்
கோழையைப் போல்
ஓடி ஒளிந்து
கொள்வது தர்மம்
கிடையாது
அவ்வாறு ஓடிப்
போனவர்களுக்கு
சுவர்க்கம் என்பது
கிடைக்காது
நரகமே கிடைக்கும்
என்பது உனக்குத்
தெரியாதா
துரியோதனா
ஒளிந்து
கொண்டிருந்தது
போதும் வெளியே வா
வெளியே வந்து
போரிடு துரியோதனா”

“தந்தைகள் மகன்கள்
மாமன்கள் புத்திரர்கள்
உறவினர்கள்
ஆகியோர்
கொல்லப்படக்
காரணமாக இருந்த நீ
கொல்லப்பட்டதை
நேரில் கண்ட நீ
வீரமரணம்
அடைந்தவர்களைக்
கண்ட நீ
இறப்பைக் கண்டு
அஞ்சாமல் நின்ற நீ
பயம் கொள்ளாமல்
வீரத்துடன்
போரிட்டவர்களைக்
கண்ட நீ
பயத்துடன் ஏன்
மடுவிற்குள் போய்
ஒளிந்து
கொண்டிருக்கிறாய்
வா வெளியே வா
வெளியே வந்து போரிடு”

“வீரன் என்ற
பெயரினை
எடுத்து விட்டு
விரமிக்க
சஷத்திரியர்
குலத்தில்
பிறந்து விட்டு
உலகத்திலேயே
மிகச் சிறந்தவர்கள்
என்று போற்றப்படக்
கூடியவர்களுடைய
இறப்பிற்கு காரணமாக
இருந்து விட்டு
வீரத்துடன் போரிட்டு
வெற்றி என்ற
ஒன்றைப் பெற்று
உயிருடன் இருக்க
வேண்டும் என்று
நினைக்காமல்
கோழையைப் போல்
ஒளிந்து கொண்டு
உயிரைக் காப்பாற்றிக்
கொண்டு உயிரோடு
இருக்கலாம்
உயிர் பிழைத்து
வாழலாம் என்ற
தவறான எண்ணத்தை
ஏன் உன்னுடைய
மனதில் பதித்து
வைத்துக் கொண்டு
இப்படி மடுவிற்குள்
போய் ஒளிந்து
கொண்டிருக்கிறாய்
துரியோதனா ‘வா
வெளியே வா
வெளியே
வந்து போரிடு”

“எதைக் கண்டும்
அஞ்சாத உன்னுடைய
வீரம் எங்கே
போயிற்று
எதற்கும் கலங்காத
உன்னுடைய இதயம்
எங்கே போயிற்று
எத்தகைய
துக்கத்திற்கும்
உடையாத உன்னுடைய
மனம் எங்கே
போயிற்று
யாருக்கும் பயப்படாத
உன்னுடைய
அஞ்சா நெஞ்சம்
எங்கே போயிற்று
யாருக்கும் நடுங்காத
உன்னுடைய பேராண்மை
எங்கே போயிற்று
உயிருக்கு உயிராக
நினைக்க வேண்டிய
உன்னுடைய மானம்
எங்கே போயிற்று
உன்னுடைய
அஸ்திரப் பயிற்சி
எங்கே போயிற்று
தண்ணிருக்குள்ளிருந்து
வெளியே வா
வெளியே வந்து
எங்களுடன் போரிடு”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////


No comments:

Post a Comment