November 17, 2021

பதிவு-2-முடிவும்- திருக்குறள்

 பதிவு-2-முடிவும்-

திருக்குறள்

 

தனக்கோ

தன்னைச்

சார்ந்தவர்களுக்கோ

நல்ல விஷயமோ

(அல்லது)

கெட்ட விஷயமோ

நடந்து விட்டது

அதனால்

என்னால் வர

முடியவில்லை

என்று

சொல்வார்கள்.

 

இரண்டு :

சிலர் எனக்கு

இந்த நாளில்

இந்த நேரத்தில்

இரண்டு விழாக்கள்

இருக்கிறது.

 

இரண்டும்

ஒரே நாளில்

ஒரே நேரத்தில்

இருக்கிறது.

இன்னொரு

விழாவில் கலந்து

கொள்ள வேண்டி

இருப்பதால்

உங்கள் விழாவில்

கலந்து கொள்ள

முடியவில்லை

என்று

சொல்வார்கள்

அவ்வாறு

சொன்னால்

இன்னொரு

விழா தான்

முக்கியம்

நம்முடைய விழா

முக்கியம் இல்லை

என்று பொருள்.

 

நம்முடைய

விழாவிற்கு

அவர்கள்

முக்கியத்துவம்

கொடுக்கவில்லை

என்று பொருள்.

 

நம்மையோ

நம்முடைய

விழாவையோ

அவர்கள் பெரிதாக

நினைக்கவில்லை

என்று பொருள்.

 

நம்மையோ

நம்மைச்

சார்ந்தவர்களையோ

அவர்கள்

மதிக்கவில்லை

என்று பொருள்.

 

நம்மை

மதிப்பவர்கள் யார்,

நம்முடைய

அழைப்புக்கு

மரியாதை

கொடுப்பவர்கள் யார்,

நாம் அழைத்தால்

எந்தவிதமான

கஷ்டங்களையும்

சமாளித்து

வருபவர்கள் யார்,

 

நாம் அழைத்தால்

வரமுடியவில்லை

என்பதற்கு பல்வேறு

காரணங்களைச்

சொல்லுபவர்கள் யார்

என்பதை முதலில்

ஆராய்ந்து பார்த்து

விழாவிற்கு

வருகிறவர்களின்

எண்ணிக்கையை

முடிவு செய்ய

வேண்டும்.

 

விழாவிற்கு

வருகிறவர்களின்

எண்ணிக்கையை

பல்வேறு

கோணங்களில்

ஆராய்ந்து

பார்த்த பிறகே

நாள், நேரம்,

இடம் தேர்வு

செய்ய வேண்டும்.

 

விழாவில்

பங்கேற்பவர்களுக்கு

மரியாதை

செய்வதற்கும்,

விழாவில் கலந்து

கொள்கிறவர்களின்

உள்ளங்களை

மகிழ்ச்சி அடையச்

செய்வதற்கும்

தேவையான

ஏற்பாடுகளைச்

செய்ய வேண்டும்.

 

விழாவிற்கு

வருகிறவர்களுக்கு

தண்ணீர், குளிர்பானம்,

தேனீர், சாப்பாடு

ஆகியவற்றில்

எவைகளை

கொடுக்க வேண்டும்.

எந்த நேரத்தில்

கொடுக்க வேண்டும்

யார் மூலமாகக்

கொடுக்க வேண்டும்

என்பதையும் முடிவு

செய்ய வேண்டும்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

No comments:

Post a Comment