November 17, 2021

பதிவு-4-முடிவும்- திருக்குறள்

 பதிவு-4-முடிவும்-

திருக்குறள்

 

எந்த ஒரு

சிக்கலான

விஷயத்தையும்

சமாளிக்கும்

திறமை இருந்தால்

மட்டுமே

விழாவை

விழா அன்று

எந்தவிதமான

தடங்கல்

ஏற்பட்டாலும்

அந்த விழாவை

சரியாக

நடத்த முடியும்.

 

விழாவிற்கு

வருகிறேன் என்று

சொன்னவர்களில்

பலர் வராமல்

போகலாம்.

சில சமயங்களில்

நாம்

எதிர்பார்க்காதவர்கள்

கூட விழாவிற்கு

வரலாம்.

 

விழாவிற்கு நாம்

நினைத்த

எண்ணிக்கையை விட

குறைவானவர்கள்

வரலாம்

(அல்லது)

விழாவிற்கு நாம்

அழைத்தவர்களை

விட அதிகமான

எண்ணிக்கையில்

வரலாம்.

இந்த சிக்கலான

விஷயங்களை

சமாளிக்கும்

திறமை வேண்டும்.

 

விழாவிற்கு

ஒரு குறிப்பிட்ட

நேரத்தை குறித்தால்

அந்த நேரத்தில்

பெரும்பாலானவர்கள்

வர மாட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில்

வந்தவர்களை

வைத்துக் கொண்டு

விழாவை

நடத்துவதற்கு

தேவையான

சாமர்த்தியம்

இருக்க வேண்டும்.

 

விழாவின்

நிகழ்வுகளை

குறிப்பிட்ட நேரங்களில்

முடிப்பதற்கும்,

தொடர்ச்சியான

வரிசையிலோ

அல்லது

தேவைப்படும்

வரிசையிலோ

விழாவின்

நிகழ்வுகளை

நடத்துவதற்குத்

தேவையான

திறமை

இருக்க வேண்டும்.

 

விழாவிற்கு

முக்கியமானவர்கள்

வரவில்லை

என்றாலும்,

இவர்

இல்லாவிட்டால்

விழாவையே

நடத்த முடியாது

என்ற நிலை

இருந்தாலும்

அதை சமாளித்து

எத்தகையவர்களை

வைத்துக் கொண்டு

விழாவை

நடத்த முடியுமோ

அத்தகையவர்களை

வைத்துக் கொண்டு

விழாவினை

நடத்துவதற்கு

தேவையான

துணிச்சல்

இருக்க வேண்டும்.

 

விழாவில் வழி

தெரியாமல்

தடுமாறுகிறவர்களுக்கு

வழி காட்டுவதற்கும்,

விழாவிற்கு

வருகிறவர்களை

அழைத்து

வருவதற்கும்

போக்குவரத்து

தொடர்பான

செயல்களைச்

செய்ய வேண்டும்.

 

விழாவில்

பங்கேற்பவர்கள்,

விழாவில்

கலந்து

கொள்கிறவர்கள்

ஆகியோருக்கு

தேவைப்படும்

தண்ணீர், குளிர்பானம்,

தேனீர், சாப்பாடு

ஆகியவற்றை

குறிப்பிட்ட

நேரத்தில் வழங்க

வேண்டும்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

No comments:

Post a Comment