November 17, 2021

பதிவு-7-முடிவும்- திருக்குறள்

 பதிவு-7-முடிவும்-

திருக்குறள்

 

விழாவை

தொடங்குவதற்கு

முன்பு,

விழாவை

நடத்தும் போது,

விழாவை

நடத்தி

முடித்த பின்பு

என்று மூன்று

நிலைகளில் எப்படி

செயல்பட

வேண்டும்

என்பதை அறிந்து

திட்டம் தீட்டி

விழாவினை

நடத்தும்

போது தான்

எந்த ஒரு

விழாவினையும்

சிறப்பாக

நடத்த முடியும்,

 

எந்த ஒரு

விழாவினை

எடுத்துக்

கொண்டாலும்

பல பேர்கள்

பல செயல்களைச்

செய்து

இருக்கிறார்கள்

என்பதையும்,

பல பேர்கள்

தங்கள்

உழைப்பை

கொடுத்திருக்கிறார்கள்

என்பதையும்,

பல பேர்கள்

தங்கள் அறிவைப்

பயன்படுத்தி

இருக்கிறார்கள்

என்பதையும்,

எவ்வளவு

பணத்தை

ஒவ்வொருவரும்

செலவு செய்து

இருக்கிறார்கள்

என்பதையும்

பெரிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

சிறிய விழாவாக

இருந்தாலும் சரி

அல்லது

எந்த ஒரு

விழாவாக

இருந்தாலும் சரி

எந்த ஒரு

விழாவினையும்

நடத்துவது

எவ்வளவு சிரமம்

என்பதையும்,

எந்த ஒரு

விழாவினையும்

அவ்வளவு

எளிதாக நடத்தி

விட முடியாது

என்பதையும்,

ஒரு விழாவினை

நடத்துவதற்கு

பல பேருடைய

ஒத்துழைப்பு

தேவை

என்பதையும்,

பல பேர்கள்

ஒன்று பட்டு

ஒற்றுமையாக

இணைந்து

செயல்களைச்

செய்தால் தான்

விழாவினை

நடத்த முடியும்

என்பதையும்,

தனிப்பட்ட

ஒருவரால்

எந்த ஒரு

விழாவினையும்

நடத்த முடியாது

என்பதையும்,

எந்த ஒரு

விழாவினையும்

தலைமை ஏற்று

நடத்துபவருக்கு

பொறுமை

நிதானம்,

தொலைநோக்கு

பார்வை,

அனைத்தையும்

சமாளிக்கும் திறன்,

அனைவரையும்

கட்டுப் படுத்தும்

திறமை

ஆகிய ஐந்தும்

இருக்க வேண்டும்

என்பதையும்

தெரிந்து

கொள்ளலாம்.

 

எந்த ஒரு

செயலைச்

செய்யும் போதும்

அந்த செயலை

செய்யும் போது

ஏற்படும்

தடைகள்

முடிவில்

கிடைக்கும் பயன்

ஆகியவற்றை

எண்ணிப் பார்த்து

பிறகே செய்தல்

வேண்டும்

என்பதைத் தான்

 

“”முடிவும்

இடையூறும்

முற்றியாங்கு

எய்தும்

படுபயனும்

பார்த்துச்

செயல்”””

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்.

 

------என்றும் அன்புடன்

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------17-11-2021

////////////////////////////////////////

No comments:

Post a Comment