April 15, 2020

பரம்பொருள்-பதிவு-197


             ஜபம்-பதிவு-445
           (பரம்பொருள்-197)

“மரணமே
ஒருவரைப் பார்த்து
மரண பயத்தில்
ஓலமிட்டு
அலறுகிறது என்றால்
அது அரவானைப்
பார்த்துத் தான்
என்று சொல்லத்
தக்க வகையில் “

“வீரத்தின் விளை
நிலமாக பிறந்த
அரவானை ;
அச்சத்தின் பொருள்
கூடத் தெரியாத
அரவானை ;
பயம் என்றால்
என்ன என்றே
தெரியாமல் வளர்ந்த
அரவானை ;
தைரியத்தின்
முன்னோடியாகத்
திகழ்ந்து 
கொண்டிருக்கும்
அரவானை ;
மனவுறுதிக்கு
இலக்கணமாக வாழ்ந்து
கொண்டிருக்கும்
அரவானை ;
சிந்தினையில் கூட
சிந்தித்துப் பார்க்க
முடியாத
பிரமிக்கத் தக்க
செயலை செய்து
காட்டுவதற்காக
அஞ்சா நெஞ்சத்துடன்
வாளை கையில் ஏந்தி
நின்று கொண்டிருந்த
அரவானை ;
கண் இமை கொட்டாமல்
பார்த்துக் கொண்டு நின்று
கொண்டிருந்தார்கள்
பஞ்ச பாண்டவர்கள் ; “

“சரித்திரம் இதுவரை
பதிவு செய்யாத
ஒரு செயலை  ;
சரித்திரத்தில்
யாராலும் இனி பதிவு
செய்ய முடியாத
ஒரு செயலை ;
சரித்திரம் நினைத்தாலும்
காணவே முடியாத
ஒரு செயலை ;
சரித்திரம் பதிவு
செய்வதற்காக சரித்திர
முக்கியத்துவம் வாய்ந்த
ஒரு செயலை
நிகழ்த்திக் காட்டுவதற்காக
வாளை வலது
கையில் ஏந்திக்
கொண்டு கிருஷ்ணனின்
உத்தரவிற்காக
கிருஷ்ணனையே
பார்த்துக் கொண்டு
நின்று கொண்டிருந்தான்
அரவான் ; “

“கடமையின் தன்மையை
கருத்தில் கொண்டு ;
தகுந்த
காலத்தைக் கணித்து ;
தகுந்த காலத்தில்
கடமையைச் செய்தால்
கடமை
காலத்தைக் கடந்து
மக்கள் மனதில்
நிலைத்து நிற்கும் ;
காலத்தால் அழியாமல்
கருத்தானது
கடமையினில்
உயிர்த்து இருக்கும் ;
என்பதால்
தகுந்த நேரத்தில்
அரவான்
தன்னுடைய
தலையைத் தானே
வெட்ட வேண்டும்
என்பதற்காக
சரியான நேரத்தை
எதிர்பார்த்து
வானத்தை உற்று
நோக்கியபடி நின்று
கொண்டிருந்தார்
கிருஷ்ணன் ; “

“ஆதியும்
அந்தமும் இல்லாத
அருட்பெரும் ஜோதியாக
விளங்கிக் கொண்டிருக்கும்
பரம்பொருள்
பிரபஞ்சமாக பரிணமித்து
பிரபஞ்ச ரகசியங்கள்
அனைத்தையும் தன்னுள்
வைத்துக் கொண்டு
இயங்கிக் கொண்டிருக்கும்
இந்த பிரபஞ்சத்தில்  
உள்ள 9 கிரகங்கள்
12 வீடுகளில் உள்ள
27 நட்சத்திரங்கள்
இவைகளுடன் இந்த
பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்து இருக்ககூடிய
கோடிக்கணக்கான
நட்சத்திரங்கள்
ஆகியவற்றுடன்
பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்து பொருட்களும்
நடைபெறப் போகும்
நிகழ்வுக்கு சாட்சியாக
நின்று கொண்டிருந்தன “

“தன்னலம் கருதாமல்
பொது நலத்திற்காக
தன்னுடைய
தலையை தானே
வெட்டுவதற்காக
தயாராக இருக்கும்
அரவானைக் கண்டு
இந்த பிரபஞ்சமே
அதிர்ச்சியில் உறைந்து
போய் இருந்தது ;
நடக்கப் போகும்
நிகழ்வை உற்று
நோக்குவதற்காக
அச்சத்துடன் காத்துக்
கொண்டிருந்தது ;
அந்த இடமே
அமைதியால்
நிரப்பப்பட்டு இருந்தது ;
சத்தம் என்ற ஒன்றே
அங்கு இல்லாமல்
இருந்தது ;
நேரம் போய்க்
கொண்டே இருந்தது ;”

“அங்கே
நடக்கப்போகும் காட்சி
இதுவரை யாரும்
பார்க்காத காட்சி ;
இனியும் யாரும்
பார்க்க முடியாத
காட்சி ;
என்பதால்
ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்துக்
கொண்டே இருந்தனர் ;
இதனால் காலம் கடந்து
கொண்டேபோய்க்
கொண்டு இருந்தது ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 15-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment