January 01, 2022

பதிவு-4-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-4-கொக்கொக்க-

திருக்குறள்-

 

உன்னுடைய

தந்தை யார்

உன்னுடைய

தாய் யார்

உன்னுடைய

ஊர் என்ன

உன்னுடைய

சாதி என்ன

எங்கிருந்து வந்தாய்

ஏன் வந்தாய்

எதற்காக வந்தாய்

என்ன காரணத்திற்காக

வந்தாய்

என்ன நோக்கத்திற்காக

வந்தாய்

என்பவை

கர்ணனிடம்

கேட்கப்பட்ட

அடுத்தடுத்த

கேள்விகள்

 

அதனைத் தொடர்ந்து

நடந்த நிகழ்வுகளின்

தொடர்ச்சியாக

கர்ணன்

தேரோட்டியின்

மகன் என்று

தெரிந்ததும்

சதியின் இரண்டாம்

கட்டம்

ஆரம்பானது

சதித்திட்டம்

அரங்கேறியது

 

பல்லாயிரக்

கணக்கானவர்கள்

கூடியிருந்த அந்த

மைதானத்தில்

அதிகாரத்தில்

இருப்பவர்கள்

பதவியில்

இருப்பவர்கள்

பணபலம்

படைத்தவர்கள்

தங்கள் சதித்திட்டத்தை

அரங்கேற்றினர்

 

கர்ணனை

தேரோட்டியின்

மகன் என்றும்

பிறப்பால்

தாழ்த்தப்பட்டவன்

என்றும்

சமுதாயத்தால்

ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

என்றும்

சமுதாயத்தில் இருந்து

ஒதுங்கி இருக்க

வேண்டியவன் என்றும்

சொல்லி கர்ணனை

இழிவு படுத்தினர்

 

அரச பரம்பரையில்

பிறந்த

அர்ஜுனனுடன்

அதிகாரத்திற்கு

உரியவனான

அர்ஜுனனுடன்

அரச பதவி

வகிப்பதற்கு தகுதி

உடையவனான

அர்ஜுனனுடன்

சண்டையிடுவதற்கு

கர்ணனுக்கு

தகுதியில்லை

எனவே, அர்ஜுனன்

கர்ணனுடன்

சண்டையிட மாட்டான்

கர்ணன் அர்ஜுனனை

சண்டையிட

கூப்பிடக் கூடாது.

அர்ஜுனனை

சண்டையிடுவதற்கு

கூப்பிடும் தகுதி

கர்ணனுக்கு இல்லை

என்று கர்ணனை

அவமானப்படுத்தினர்

அசிங்கப் படுத்தினர்

 

அதிகார

வர்க்கத்தினரால்

அவமானப் படுத்தப்பட்டு

வெட்கி தலைகுனிந்து

யாரும் ஆதரவு

இல்லாத நிலையில்

தன்னந்தனியாக

நின்றான்

கர்ணன்

 

சமுதாயத்தால்  

ஒதுக்கப்பட்டவன்

தாழ்த்தப்பட்டவன்

என்று தள்ளி

வைக்கப்பட்டவன்

தேரோட்டியின்

மகன்  என்று

அவமானப்

படுத்தப்பட்டவன்

திறமையாக

இருக்கக் கூடாதா

தன்னுடைய

திறமையை

வெளிப்படுத்தக்கூடாதா

தன்னுடைய

திறமையை

வெளிப்படுத்த வாய்ப்பு

கொடுக்கக்கூடாதா

 

சட்டம் தடுக்கிறது

விதிமுறைகள்

தடுக்கிறது

என்று தடுப்பதா

இப்படி இருந்தால்

எப்படி

ஒதுக்கப்பட்டவன்

தள்ளி வைக்கப்பட்டவன்

தன்னுடைய

திறமையை

வெளிப்படுத்த முடியும்

 

சமுதாயத்தில்

உயர்ந்த நிலையில்

இருப்பவர்களால்

சமுதாயத்தில் தாழ்த்தி

வைக்கப்பட்டவர்கள்

தங்களுடைய

திறமையை

வெளிப்படுத்தக்கூடாதா

வெளிப்படுத்த

முடியாதா

இந்த இழி

நிலையைக்

கேட்பதற்கு

இங்கு யாரும்

இல்லையா

இந்த சமுதாயத்தில்

யாரும் இல்லையா

இதைக் கேட்பதற்கு

யாரும் இல்லையா

 

இந்த அநீதியை

எதிர்த்துக் குரல்

கொடுக்க ஒருவரும்

இல்லையா

அநீதிக்கு துணை

போகிறவர்கள்

இருக்கிறவரை

தாழ்த்தப்பட்டவன்

என்று ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

ஒதுங்கியே இருக்க

வேண்டுமா

அவர்களை தூக்கி விட

சமுதாயத்தில்

யாரும் இல்லையா

சமுதாயத்தில்

யாரும்

பிறக்க வில்லையா

நல்ல மனம்

படைத்தவர்கள்

யாரும் இல்லையா

அநீதியை

தட்டிக் கேட்க

யாரும் இல்லையா

என்று கர்ணன்

பலவாறாக மனம்

வேதனைப்பட்டு

நின்று

கொண்டிருந்த போது

அவமானப்பட்டு

நின்று

கொண்டிருந்த போது

மனவருத்தத்துடன்

நின்று

கொண்டிருந்த போது

ஒரு குரல் அந்த

மைதானத்தில்

அநீதி என்று

குரல் கொடுத்தது

அந்தக் குரல் அநீதிக்கு

எதிரான குரல்

அந்தக் குரலைக்

கொடுத்தது

துரியோதனன்

அநீதி என்று குரல்

கொடுத்தது

துரியோதனன்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment