January 01, 2022

பதிவு-5-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-5-கொக்கொக்க-

திருக்குறள்-

 

துரியோதனனின்

குரல் தொடர்ந்தது

துரியோதனனின்

குரல் அந்த

மைதானத்தில்

தொடர்ந்து

எதிரொலித்தது

ஒருவருடைய

திறமையை

வைத்துத் தான்

ஒருவரை மதிக்க

வேண்டுமேயொழிய

ஒருவருடைய

பிறப்பை வைத்து

ஒருவருடைய

திறமையை

மதிக்கக் கூடாது

தாழ்ந்த சாதி என்று

சொல்லப்படும் கர்ணன்

உயர்ந்த சாதி என்று

சொல்லப்படும்

அர்ஜுனனோடு

மோதக்கூடாதா

 

ஏன் அர்ஜுனன்

தோற்று விடுவான்

என்று பயமா

ஏன் இந்த அநீதி

இங்கு நடக்கிறது

ஒருவன் தன் திறமையை

நிரூபிக்கக் கூடாதா

அதை சாதி

என்ற பெயரால்

அதிகாரத்தில்

இருப்பவர்களும்

பதவியில்

இருப்பவர்களும்

பணபலம்

படைத்தவர்களும்

அதைத் தடுக்க

வேண்டுமா

கர்ணன் பிறப்பால்

தாழ்ந்தவன் என்றால்

பிறப்பால் தாழ்ந்தவன்

சமுதாயத்தால் ஒதுக்கி

வைக்கப்பட்டவன்

தேரோட்டியின் மகன்

தீண்டாத்தகாதவன் என்று

சொல்லப்படுபவன்

அர்ஜுனனோடு

மோதக் கூடாதா

தன்னுடைய திறமையை

நிரூபிக்கக் கூடாதா

 

கர்ணன் தன்னுடைய

திறமையை

நிரூபிக்க வேண்டும்

அர்ஜுனனோடு

சண்டையிட வேண்டும்

கர்ணன் அர்ஜுனனோடு

சண்டையிடுவதற்கு

கர்ணனுடைய ஜாதி

தான் தடுக்கிறது என்றால்

கர்ணனை இக்கணமே

அங்க தேசத்து

மன்னனாக்குகிறேன்

 

கர்ணன் எப்போது

பதவிக்கு வருகிறானோ

அதிகாரத்திற்கு

வருகிறானோ

பணபலம்

படைத்தவனாகிறோனோ

அப்போது அவன்

அனைத்தையும்

கடந்தவனாகிறான்

 

தாழ்த்தப்பட்டவன் என்று

இந்த சமுதாயத்தால்

அடையாளம்

படுத்தப்பட்ட கர்ணன்

பதவிக்கு வந்ததால்

உயர்ந்தவனாகிறான்

அதனால் மன்னனான

கர்ணன் அர்ஜுனனோடு

மோதுவதற்கு

தகுதியாகிறான்

எனவே கர்ணனை

அங்க தேசத்து

மன்னனாக்குகிறேன்

என்று துரியோதனன்

கர்ணனை

அங்க தேசத்து

மன்னனாக்குகிறான்

 

கர்ணன் மேல்

படிந்திருந்த

தேரோட்டியின் மகன்

தாழ்த்தப்பட்டவன்

இந்த சமுதாயத்தால்

ஒதுக்கப்பட்டவன்

என்ற அவச்

சொல்லை நீக்கினான்

 

மைதானத்தில்

பல்லாயிரக்

கணக்கானவர்கள்

கூடியிருந்த வேளையில்

பலபேர்கள் பார்த்துக்

கொண்டிருந்த

மைதானத்தில்

பலபேர்கள் கவனித்துக்

கொண்டிருந்த

மைதானத்தில்

கர்ணனுடைய

களங்கத்தை துடைத்து

கர்ணனுக்கு நேர்ந்த

அசிங்கத்தை துடைத்து

கர்ணனுடைய மானத்தை

காத்தான் துரியோதனன்

 

பலபேர் முன்னிலையில்

கர்ணனுடைய மானத்தைக்

காத்தான் துரியோதனன்

என்ற காரணத்தினால்

தான் கர்ணன்

தன்னுடைய உயிரை

துரியோதனனுக்காகக்

கொடுத்தான்

செஞ்சோற்றுக்

கடன் தீர்ப்பதற்காக

கொடுக்கவில்லை

 

கர்ணன்

தன்னுடைய கடனை

துரியோதனனுக்கு

பட்ட கடனை

துரியோதனனுக்கு

தான் பட்ட

நன்றிக் கடனை

அடைப்பதற்கு காலம்

பார்த்துக்

கொண்டிருந்தான்

நேரம் பார்த்துக்

கொண்டிருந்தான்

இடம் பார்த்துக்

கொண்டிருந்தான்

சூழ்நிலை பார்த்துக்

கொண்டிருந்தான்

அதற்கான

வாய்ப்பிற்காகக்

காத்துக் கொண்டிருந்தான்

 

பதவிக்கு

வர வேண்டும்

அதிகாரத்திற்கு

வர வேண்டும்

பணபலம் பெற்றவராக

மாற வேண்டும்

அதற்கு நாடு வேண்டும்

என்ற ஆசை

பாண்டவர்களுக்கு

ஏற்பட்ட

காரணத்தினாலும்

தன்னுடைய தந்தை

திருதராஷ்டின் குருடன்

என்ற காரணத்திற்காக

அவருக்கு மறுக்கப்பட்டு

அவருடைய தம்பி

பாண்டுவிற்கு

தரப்பட்ட அரச பதவி

பாண்டு இறந்தபின்

குருடனான

தன்னுடைய தந்தை

திருதராஷ்டிரன் மகன்

என்ற காரணத்தினால்

தனக்கும் அரசபதவி

மறுக்கப்படுவது

எந்த விதத்தில்

நியாயம்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment