January 01, 2022

பதிவு-6-கொக்கொக்க- திருக்குறள்

 பதிவு-6-கொக்கொக்க-

திருக்குறள்-

 

தனக்கு

இழைக்கப்பட்ட

அநியாயத்திற்கு

நியாயம் கிடைக்க

வேண்டும் அதனால்

பாண்டவர்களுக்கு

அஸ்தினாபுரத்தின்

ஒரு சிறு

பகுதியையும்

தரமாட்டேன் என்று

பாண்டவர்களுக்கு

எதிராக

துரியோதனன்

போரிட முடிவு

எடுத்து விட்ட

காரணத்தினாலும்,

 

பாண்டவர்களுக்கும்,

கௌரவர்களுக்கும்

இடையே

எந்தவிதமான

சமரசம் எதுவும்

ஏற்படாத

நிலையில்

அமைதி

பேச்சு வார்த்தை

அனைத்தும்

தோல்வியடைந்த

நிலையில்

குருஷேத்திரப் போர்

கௌரவர்களுக்கும்,

பாண்டவர்களுக்கும்

இடையே

ஆரம்பமானது

 

துரியோதனனுக்கு

தான் பட்ட

நன்றிக் கடனை

அடைப்பதற்காக

காத்துக்

கொண்டிருந்த

நேரத்தில்

வாய்ப்பிற்காகக்

காத்துக்

கொண்டிருந்த

நேரத்தில்

தனக்குக் கிடைத்த

குருஷேத்திரப் போர்

என்ற வாய்ப்பை

சரியாகப்

பயன்படுத்திக்

கொண்டான்

கர்ணன்

 

துரியோதனனுக்காக

குருஷேத்திரப்

போரில்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

தன் மேல் இருந்த

களங்கத்தை

துடைத்த

துரியோதனனுக்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

துரியோதனனுக்கு

தான் பட்ட

நன்றிக்

கடனை

தீர்ப்பதற்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

தாழ்த்தப்பட்டவன்

என்று தன்னை

அவமானப்படுத்தியதை

நீக்கி அங்கதேசத்து

மன்னனாக்கிய

துரியோதனனுக்காக

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

 

பாண்டவர்கள்

ஐவரும் தன்னுடைய

தம்பிகள் என்று

தெரிந்தும்

துரியோதனனுக்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

குந்தி தேவி

தன்னுடைய

தாய்

என்று தெரிந்தும்

துரியோதனனுக்காக

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

 

தான்

தாழ்த்தப்பட்டவன்

இல்லை

குந்தி தேவியின்

மூத்த மகன்,

பஞ்ச

பாண்டவர்களின்

மூத்த அண்ணன்

உயர்ந்த வகுப்பில்

பிறந்தவன்

சமுதாயத்தால்

தாழ்த்தப்பட்டவனாக

அடையாளம்

காட்டப்பட்டவன்

தான்

தாழ்த்தப்பட்டவன்

என்று

இந்த உலகம்

தன்னை அவமானப்

படுத்தியபோது

தன்னுடைய

மானத்தை

காப்பாற்றியது

துரியோதனன்

என்ற

காரணத்தினால்

துரியோதனனுக்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்.

தன்னுடைய

மானத்தைக்

காத்தவனுக்காகப்

போரிட்டு மடிந்தான்

கர்ணன்

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-01-2022

------சனிக்கிழமை

 

/////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment