ஜபம்-பதிவு-718
(சாவேயில்லாத
சிகண்டி-52)
(ராஜரிஷியும் தவசியுமான 
ஹோத்திரவாஹனர் 
அம்பை 
தங்கியிருக்கும்
ஆசிரமத்திற்கு 
வந்தார்.
அம்பையைப் பற்றிய 
அனைத்து
விவரங்களையும் 
கேட்டறிந்த 
ஹோத்திரவாஹனர் 
அம்பையிடம் பேசத் 
தொடங்கினார்.)
ஹோத்திரவாஹனர் :
அம்பையே
உன்னைப் பற்றிய 
விவரங்கள் 
அனைத்தையும் 
கேட்டுத் தெரிந்து 
கொண்டேன்
நீ யார் 
என்பதைத் தெரிந்து 
கொண்டேன்
நீ என்னுடைய 
பரம்பரை என்பதைத் 
தெரிந்து கொண்டேன்
உனக்கும் எனக்கும் 
இரத்த சம்பந்தம் 
இருக்கிறது என்பதைத் 
தெரிந்து கொண்டேன்
ஆமாம் 
அம்பையே
உன்னுடைய 
தாய் புராவதி 
என்னுடைய மகள்
நீ என்னுடைய 
மகளுடைய மகள்
கர்மவினையினால் 
உன் தாயை 
விட்டுப் பிரிந்திருக்க 
வேண்டிய சூழ்நிலை 
எனக்கு ஏற்பட்டு 
விட்டது
அதே கர்மவினை 
தான் உன்னையும் 
என்னையும் 
இப்போது ஒன்றாக 
சேர்த்திருக்கிறது
ஒரு குடும்பத்தில் 
உள்ள ஒருவர் 
தவம் செய்தால்
அவர் தவம் 
செய்ததினால் 
அவருக்குக் கிடைத்த 
தவசக்திகள்
அவர் சார்ந்த 
குடும்பத்தில் 
உள்ளவர்கள்
யாரேனும் 
கஷ்டப்பட்டால்
அவர்கள் 
எங்கிருந்தாலும் 
எந்த 
இடத்திலிருந்தாலும்
அவர்களை 
அந்த 
கஷ்டத்திலிருந்து
காப்பாற்றுவதற்காக
தவம் 
செய்தவருடைய
தவசக்திகள் 
உதவும் என்று 
ஆன்மீக நூல்கள் 
கூறுகின்றன
நம்முடைய 
குடும்பத்தில் 
நான் தவம் 
செய்ததினால் 
எனக்குக் கிடைத்த 
தவசக்திகள்
எங்கோ 
கஷ்டப்பட்டுக் 
கொண்டிருந்த
உ.ன்னுடைய 
கஷ்டத்தைப் 
போக்குவதற்காக
உன்னை என்னிடம் 
கொண்டு வந்து 
சேர்த்திருக்கிறது
கர்மவினையில் 
உண்டாகும் 
விளைவின் 
தாக்கத்தைத் 
தடுக்க முடியாது
ஆனால் 
அதனுடைய 
தாக்கத்தைக் 
குறைக்கலாம்
கர்மவினையினால் 
அல்லலுறும் 
உன்னுடைய
கஷ்டங்களை 
நான் போக்குவேன்
அதற்கு எத்தகைய 
செயல்களைச் 
செய்ய வேண்டுமோ 
அதைச் செய்வேன்
உன்னை 
கஷ்டத்திலிருந்து மீட்டு
வருவதற்கு 
என்னால் என்ன
செய்ய முடியுமோ 
அதைச் செய்வேன்
அம்பை :
பெற்றோர்களுடனும்
காதலனுடனும்
உறவுகளுடனும்
தோழிகளுடனும்
அன்பால் பிணைந்து
இளவரசியாக
வாழ்ந்த நான்
இப்போது யாரும்
இல்லாத
அனாதையாக
நிர்க்கதியாய்
நிற்பதற்குக் 
காரணம் என்ன
என்னுடைய இந்த
அவல நிலைக்குக்
காரணம் என்ன
நான் பிறந்தது முதல் 
இப்போது வரை
யாருக்கும் துரோகம் 
செய்ததில்லை
யாருடைய 
குடியையும் 
கெடுத்ததில்லை
மனதால் கூட 
யாரும் கெட்டுப் 
போக வேண்டும் 
என்று 
நினைத்ததில்லை
பாவம் 
செய்திருந்தால் 
கர்மவினையின்
விளைவானது 
என்னை பாதித்து
இருக்க வேண்டும்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----29-03-2022
-----செவ்வாய்க்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment