March 29, 2022

ஜபம்-பதிவு-722 (சாவேயில்லாத சிகண்டி-56)

 ஜபம்-பதிவு-722

(சாவேயில்லாத

சிகண்டி-56)

 

வரும் போதும்

ஒன்றும் கொண்டு

வரவில்லை

போகும் போதும்

ஒன்றும் கொண்டு

போகப்போவதில்லை

என்று சிலர்

சொல்வார்கள்

ஆனால் அந்த

வார்த்தை

தவறான வார்த்தை

 

நாம் வரும் போது

கர்மவினையைக்

கொண்டு

வருகிறோம்

 

வாழும் போதும்

கர்மவினையைக்

கொண்டு தான்

வாழ்கிறோம்

 

வாழும் போது

கர்மவினையைக்

கழிக்கவில்லை எனில்

போகும் போது

கர்மவினையைத்

தான் கொண்டு

போகிறோம்

 

வாழும் போது

கர்மவினையைக்

கழித்து விட்டால்

அடுத்து

பிறப்பு இல்லை

 

பிறப்பு இல்லை

என்றால்

இறப்பு இல்லை

பிறப்பு இறப்பு என்ற

சுழற்சி இல்லை

 

கர்மவினையின்

விளைவுகளை

புரிந்து கொள்ள

முயற்சி செய்

அம்பையே

 

அம்பை :

சில குழந்தைகள்

பிறக்கும் போது

குருடாகவும்,

ஊமையாகவும்,

உடல்

குறைபாடுடன்

பிறக்கிறதே

அதற்குக் காரணம்

அந்தக் குழந்தை

முற்பிறவிகளில்

செய்த செயல்களின்

விளைவால்

உண்டான

சஞ்சித கர்மம்

என்று

சொல்கிறீர்களா

 

ஹோத்திரவாஹனர் :

இல்லை

ஒரு குழந்தை

பிறக்கும் போது

அந்தக் குழந்தை

குறைபாட்டுடன்

பிறக்கிறது என்றால்

அது அந்தக்

குழுந்தை

முற்பிறவிகளில்

செய்த கர்மாவாகவும்

இருக்கலாம்

 

அல்லது

 

குழந்தையின்

பெற்றோர்கள்

செய்த

கர்மாவாகவும்

இருக்கலாம்

 

அல்லது

 

குழந்தையின்

முன்னோர்கள்
செய்த

கர்மாவாகவும்

இருக்கலாம்

 

குழந்தைகள்

பிறக்கும் போதே

குறைபாட்டுடன்

பிறக்கிறது

என்றால்

இதிலிருந்து

தெரிந்து கொள்ள

வேண்டாமா

நம்முடைய

கர்மாக்கள்

மட்டும் நம்மை

இயக்குவதில்லை

நம்முடைய

பெற்றோர்கள்

நம்முடைய

முன்னோர்கள்

ஆகியோர்களின்

கர்மாக்களும்

நம்மை இயக்கிக்

கொண்டிருக்கிறது

என்பதை

 

மேலும் ஒரு

குழந்தை பிறப்பது

அது தன்னுடைய

கர்மாவைக்

கழிப்பதற்குத் தான்

என்பதைத் தெரிந்து

கொள்

 

அம்பை :

ஒரு செயலின்

விளைவை

நாம் தடுக்க

முடியாது என்றால்

அதை

அனுபவித்தே

ஆக வேண்டும்

என்றால்

இறைவனாலும்

அதை தடுக்க

முடியாது என்றால்

கோயில் எதற்கு

கடவுள் எதற்கு

கடவுளை நாம்

ஏன் கும்பிட

வேண்டும்

கடவுளை

கும்பிடுவதால்

ஒரு பயனும்

இல்லையே

 

கடவுளை

எதற்காகக்

கும்பிட வேண்டும்

 

நம்முடைய

கர்மவினையை நாம்

அனுபவித்து விட்டு

போகலாமே

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment