March 29, 2022

ஜபம்-பதிவு-721 (சாவேயில்லாத சிகண்டி-55)

 ஜபம்-பதிவு-721

(சாவேயில்லாத

சிகண்டி-55)

 

நாம் செய்த

செயல்களின்

விளைவினால்

உண்டான பாவம்

புண்ணியம் சேர்ந்த

கர்மவினையின்

விளைவை

மட்டும் நாம்

அனுபவிப்பதில்லை

தாயின்

கர்மவினையின்

விளைவினையும்

தந்தையின்

கர்மவினையின்

விளைவினையும்

சேர்த்துத்தான்

அனுபவிக்கிறோம்

 

உன்னுடைய

தாய் தந்தை

இருவரும்

சேரவில்லை என்றால்

அம்பையே

நீ பிறந்திருக்கவே

முடியாது

நீ பிறப்பதற்கு

இருவர் தேவை

தாயின் கர்மவினையும்

தந்தையின்

கர்மவினையும்

சேர்ந்து தான்

நீ பிறந்திருக்கிறாய்

 

தாயின் கர்மவினை

என்றால்

தாயின் கர்மவினையை

மட்டும் குறிப்பிடாது

தாயின் பெற்றோர்கள்

தாயின் முன்னோர்கள்

என்று

ஆதி முதல்

பல பிறவிகளின்

தொடர்பாக

கருத்தொடராக வந்த

கர்மவினைகளைக்

குறிக்கும்

 

அதைப்போல

தந்தையின்

கர்மவினை என்றால்

தந்தையின்

கர்மவினையை

மட்டும் குறிப்பிடாது

தந்தையின்

பெற்றோர்கள்

தந்தையின்

முன்னோர்கள் என்று

ஆதி முதல்

பல பிறவிகளின்

தொடர்பாக

கருத்தொடராக வந்த

கர்மவினைகளைக்

குறிக்கும்

 

தாய் தந்தை இருவரின்

கர்மவினையின்

விளைவில் தான்

நீ  பிறந்திருக்கிறாய்

தாயின் வயிற்றில்

நீ கருக்கொண்டு

உருக்கொள்ளும் போது

ஆணா பெண்ணா

என்று முடிவெடுத்து

குழந்தையை

உருவாக்குவதும்

அவர்கள்

இருவரில் பதிந்துள்ள

கர்மவினைகள் தான்

 

இருவருடைய

கர்மவினையும்

இல்லை என்றால்

தாயின் வயிற்றில்

கருக்கொண்டு

உருக்கொண்டு

குழந்தை

வளர முடியாது

 

தாயின்

கர்மவினையையும்

தந்தையின்

கர்மவினையையும்

கொண்டு இந்த

உலகத்தில் குழந்தை

பிறக்கும் போது

முந்தைய பல

பிறவிகளில்

சேர்த்து வைத்துள்ள

நல்ல மற்றும்

தீய கர்மாக்களின்

மொத்த மூட்டையான

சஞ்சித கர்மாவைக்

கொண்டு தான்

குழந்தை பிறக்கும்

 

இந்த உலகத்தில்

பிறந்தது முதல்

உயிரோடு வாழ்ந்த

காலம் வரை நாம்

செய்த செயல்களின்

விளைவுகள்

பிராரப்த கர்மம்

எனப்படும்

சஞ்சித கர்மாவின் 

ஒரு சிறு பகுதி தான்

பிராரப்த கர்மா.

இது இந்தப்

பிறவியில்

அனுபவிக்க வேண்டிய

நல்ல மற்றும்

தீய பலன்கள்

 

இந்தப் பிறவியில்

செய்யும்

நல்ல மற்றும்

தீய கர்மாக்கள்

ஆகாம்ய கர்மா

எனப்படும்.

இவை

இந்தப் பிறவியின்

இறுதியில்

சஞ்சித கர்மாவோடு

சேர்க்கப்படும்

 

இந்த மூன்று விதமான

கர்மாக்களைக்

கொண்டு தான்

இந்த உலகத்தில்

வாழும் அனைத்து

மனிதர்களும்

வாழ வேண்டும்

நீயும்

இப்படித் தான்

வாழ்ந்து

கொண்டிருக்கிறாய்

 

நீ கஷ்டப்படுவதற்கு

காரணம்

சஞ்சித கர்மாவாக

இருக்கலாம்

அல்லது

பிராரப்த கர்மாவாக

இருக்கலாம்

அல்லது

ஆகாம்ய

கர்மாவாக

இருக்கலாம்

 

இந்த மூன்று

கர்மாக்களில்

எந்த கர்மாவினால்

கஷ்டப்படுகிறாய்

என்பதை உணர்ந்து

கொள்வது கடினம்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----29-03-2022

-----செவ்வாய்க்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment