February 19, 2023

ஜபம்-பதிவு-933 மரணமற்ற அஸ்வத்தாமன்-65 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-933

மரணமற்ற

அஸ்வத்தாமன்-65

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரியோதனன் :

சண்டை என்றீர்கள்

இது சண்டை கிடையாது

போட்டி தானே

 

துரோணர் :

ஒருவொருக்கொருவர்

நேருக்கு நேராக

நின்று கொண்டு

சண்டையிட்டால் மட்டும்

சண்டை இல்லை

தனித்தனியாக

நின்று கொண்டு

ஒவ்வொருவரும்

தங்களுடைய திறமையை

நிரூபித்தாலும்

சண்டை தான்

 

துரியோதனன் :

இதை நீங்கள் முன்பே

சொல்லவில்லை

 

துரோணர் :

அடுத்து என்ன

நடக்கும் என்பது

இந்த உலகத்தில் உள்ள

யாருக்கும் தெரியாது

அடுத்து என்ன நடந்தாலும்

அதை எதிர்கொள்வது

தான் ஒரு

வீரனுக்கு அழகு

 

அடுத்து என்ன

நடந்தாலும் அதை

எதிர்கொள்வதற்கு

அர்ஜுனன் தயாராக

இருந்தான்

நீ தயாராக இல்லை

 

துரியோதனன் :

பரவாயில்லை

நான் இல்லை

என்றால் என்ன

என்னுடைய நண்பன்

அஸ்வத்தாமன் இருக்கிறான்

அவன் பார்த்துக்

கொள்வான் அர்ஜுனனை

 

துரோணர் :

யார் யாரை பார்க்கப்

போகிறார்கள் என்பது

சண்டை முடிந்த

பிறகு தான் தெரியும்

 

துரியோதனன் :

இந்த உலகம் தான்

பார்க்கப் போகிறதே

 

துரோணர் :

அர்ஜுனா வா உன்

திறமையை நிரூபி

 

(அர்ஜுனன் வருகிறான்

குதிரையை அடக்க

முயல்கிறான்

அதன் மேல் ஏறி

அமர முயற்சி

செய்கிறான்

அமர முயற்சி

செய்தவனை குதிரை

கீழே தள்ளி விடுகிறது

கீழே விழுந்து

விடுகிறான்

குதிரை அவனை

எட்டி உதைக்கிறது

குதிரையை அவனால்

அடக்க முடியவில்லை

 

இக்காட்சியைக்

கண்டவர்களில்

பாண்டவர்கள் தவிர்த்து

அனைவரும்

சிரிக்கின்றனர்

அவமானத்தால்

தலை குனிந்தபடி

அர்ஜுனன் செல்கிறான்

 

நடந்த நிகழ்வைக்

கண்டு துரோணர்

அதிர்ச்சியுற்றார்

அதிர்ச்சியை அவர்

வெளிக்காட்டக் கூடாது

என்று

எவ்வளவு முயற்சி

செய்தும்

அவரால் தன்னுடைய

உணர்ச்சியை

வெளிக்காட்டாமல்

இருக்க முடியவில்லை

 

அதனை சமாளித்துக்

கொண்டு,

அஸ்வத்தாமனை

அழைக்கிறார்

 

அஸ்வத்தாமன் வருகிறான்

 

குதிரையை மெதுவாக

தடவி விடுகிறான்

கண்ணோடு

கண் பார்க்கிறான்

அதன் காதில் பேசுகிறான்

அதன் உடல் முழுவதும்

தடவிக் கொண்டே

இருக்கிறான்

குதிரை புரிந்து

கொண்டது போல்

தலையை ஆட்டுகிறது

அஸ்வத்தாமன்

குதிரையின் மேல்

ஏறுகிறான்

அதன் மூச்சு

அனைவருக்கும் கேட்கும்

வகையில் அது

மூச்சு விடுகிறது

அஸ்வத்தாமன்

அதன் மேல்

அமர்கிறான்

துள்ளிக்

குதிக்கிறது குதிரை

அஸ்வத்தாமன் கீழே

விழாமல்

அமர்ந்து இருக்கிறான்

சிறிது நேரம்

குதித்தப் பிறது

அமைதியாகி விடுகிறது

குதிரை

 

குதிரையின் மேல்

அமர்ந்து கொண்டு

அந்த மைதானத்தை

மூன்று முறை

சுற்றி வருகிறான்

அஸ்வத்தாமன்

 

அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன்

என்ற பெயரை

அனைவரும்

உச்சரிக்கின்றனர்

 

கரகோஷமும் ஆரவாரமும்

விண்ணைப் பிளக்கிறது

கரவொலி எழுப்புகின்றனர்

 

அர்ஜுனனைத் தோற்கடித்த

அஸ்வத்தாமன் வாழ்க

என்று பாண்டவர்களைத்

தவிர்த்து அனைவரும்

கோஷம் எழுப்பினர்

 

அர்ஜுனன் உட்பட

பாண்டவர்கள் ஐவரும்

தலைகுனிந்தபடி

இருந்தனர்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர் &

   பேச்சாளர்

 

-----18-02-2023

-----சனிக் கிழமை

//////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment