April 09, 2025

ஜபம்-பதிவு-1046 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-24

 ஜபம்-பதிவு-1046

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-24
எங்கள் முன்னோர்கள் வரலாற்றை உருவாக்கினார்கள், நாங்கள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், எங்களுடைய சந்ததிகள் வரலாற்றை உருவாக்குவார்கள், பாண்டியர்களை யாரும் அழிக்க முடியாது. பாண்டியர்களை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள்.
பாண்டியர்கள் வரலாறு பரம்பரை பரம்பரையாக கடந்து செல்லும். பரிணாமம் அடைந்து கொண்டே செல்லும், பாண்டியர்களின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. ஏனென்றால், வரலாற்றுக்கு தொடக்கப் புள்ளி வைத்ததே பாண்டியர்கள் தான்.
சேர, சோழ, பாண்டியர் என்று தவறாக வரிசைப்படுத்தி வைத்து இருக்கின்றனர். சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களுடைய வரிசையில் முதலில் வைத்துப் போற்றப்பட வேண்டியதும் பாண்டியர்கள் தான், முதன்மையாக வைத்துப் போற்றப்பட வேண்டியதும் பாண்டியர்கள் தான், முதலில் வைக்கத் தகுதி படைத்தவர்களும் பாண்டியர்கள் தான்.
மூவேந்தர்களில் சிறந்தவர்கள் பாண்டியர்கள். பாண்டியர்களின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள், பாண்டியர்களின் வரலாற்றைப் பிடிக்காதவர்கள், பாண்டியர்களின் பெருமையைப் பிடிக்காதவர்கள், பாண்டியர்களின் உயர்வைப் பிடிக்காதவர்கள், பாண்டியர்களின் வீரத்தைப் பிடிக்காதவர்கள் செய்த சதி வேலை தான் மூவேந்தர்களில் பாண்டியர்களை மூன்றாவதாக வைத்தது.
மூவேந்தர்களில் பாண்டியர்களை முதலில் வைக்காமல் மூன்றாவதாக வைத்ததில் இருந்து பாண்டியர்களுடைய விரோதிகள் பாண்டியர்கள் மேல் எவ்வளவு விரோதம் கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இருந்தாலும், விரோதிகளின் எதிர்ப்புகளையும் மீறி,
நயவஞ்சகர்களின் நயவஞ்சகத்தையும் மீறி,
துரோகிகளின் துரோகத்தையும் மீறி,
பாண்டியர்களாகிய நாங்கள் யாராலும் அசைக்க முடியாத மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கி வைத்து இருக்கிறோம்,
யாராலும், உருவாக்க முடியாத வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கிறோம்,
யாராலும், சிந்தித்துக் கூட பார்க்க முடியாத வரலாற்றை
உருவாக்கி வைத்து இருக்கிறோம்,
யாராலும் செயல்படுத்த முடியாத வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கிறோம்,
யாராலும், நெருங்கக்கூட முடியாத வரலாற்றை
உருவாக்கி வைத்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட எங்கள் மீது நீ கோபப்படும் போதே உனக்கு வரலாறு இல்லை என்பது தெரிகிறது. உனது முன்னோர்கள் வரலாற்றை உருவாக்கவில்லை என்பது தெரிகிறது. அதனால் தான் நீ இப்படி பேசுகிறாய் என்று தெரிகிறது.
பாண்டியர்கள் வரலாறு என்பது காலத்தால் காட்ட முடியாதது, வார்த்தைகளால் எழுத முடியாதது, சொற்களால் சொல்ல முடியாதது, இருந்தாலும் நாங்கள் எழுத்தில் எழுதி வைத்து இருக்கிறோம். வார்த்தையால் நீ கேட்கும்படி இப்போது சொல்லி இருக்கிறோம்.
பாண்டியர்கள் வரலாறு என்பது இந்த உலகம் தோன்றும் போது தோன்றியது. இந்த உலகம் அழிந்தாலும் பாண்டியர்களின் வரலாறு அழியாது. இப்போது தெரிந்து கொள். பாண்டியர்கள் எவ்வளவு சிறப்பைப் பெற்றவர்கள் என்பதைத் தெரிந்து கொள்.
இதுவரை எங்கள் முன்னோர்களின் வரலாற்றைத் தெரிந்து கொண்டாய். இனி நாங்கள் உருவாக்கப் போகும் வரலாற்றை நீ தெரிந்து கொள்ளப்போகிறாய். இப்போது உன்னை வைத்து நாங்கள் உருவாக்கப்போகும் வரலாற்றை இனி இந்த உலகமே காணப்போவதை தெரிந்து கொள்ளப் போகிறாய்.
இங்கே குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறானே இவன் பாண்டிய நாட்டிற்குள் வந்திருக்கிறான். யார் நீ? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டதற்கு பாண்டிய நாட்டு ஒற்றர்கள் உலகத்திலேயே திறமைசாலிகள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஏன் அவர்களால் கூட நான் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லையா? என்று கேட்டிருக்கிறான்.
இவனைப் பற்றிய அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு விட்டன. இவன் சொன்னான் என்பதற்காக இவனைப்பற்றிய விவரங்கள் திரட்டப்படவில்லை. பாண்டியர்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதையும், பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதையும், இவன் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவனைப் பற்றிய விவரங்கள் திரட்டப்பட்டன.
அர்ஜுனன் : முதலில் என்னைப் பற்றி நீங்கள் திரட்டிய தகவல்களைச் சொல்லுங்கள். பிறகு முடிவு செய்து கொள்ளலாம் நீங்கள் திரட்டிய தகவல்கள் என்னைப் பற்றிய தகவல்கள் தானா என்பதை. என்னைப் பற்றி ஏதோ ஒன்றிரண்டு தகவல்களை திரட்டி இருப்பீர்கள். ஆனால், என்னைப் பற்றி அனைத்து தகவல்களையும் திரட்டி விட்டதாக சொல்கிறீர்கள்
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share
v

ஜபம்-பதிவு-1045 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-23

 ஜபம்-பதிவு-1045

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-23
அது மட்டுமா பாண்டியர்கள்,
தமிழை வளர்த்தார்கள்,
தமிழுக்காக உயிரைக் கொடுத்தார்கள்,
எழுத்தில் புரட்சியைப் புகுத்தினார்கள்,
வீரத்தை விதைத்தார்கள்,
அடிமை நிலையை அறுத்தார்கள்,
சுதந்திர காற்றைச் சுவாசித்தார்கள்,
நாட்டை விரிவுபடுத்தினார்கள்,
புதிய ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள்,
மக்கள் போற்ற அரசாட்சி செய்தார்கள்,
இல்லாமை என்ற சொல்லை போக்கினார்கள்,
கலைகளை வளர்த்தார்கள்,
பண்பாட்டை பேணிக் காத்தார்கள்,
அரசியலில் புகழ் பெற்று திகழ்ந்தார்கள்,
யாராலும் வீழ்த்த முடியாத சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள்,
யாருக்கும் அடிமையாக இல்லாமல் இருந்தார்கள்,
யாரையும் அடிமைப்படுத்தி வைக்காமல் இருந்தார்கள்,
படை பலத்தில் சிறந்து விளங்கினார்கள்,
செல்வ வளத்தை பெருக்கினார்கள்,
வாணிபத்தில் உயர்ந்த நிலையில் இருந்தார்கள்,
வரலாற்று சின்னங்களை படைத்தார்கள்,
வரலாறுகளை உருவாக்கினார்கள்,
மதங்களின் பேதங்களைப் போக்கினார்கள்,
மக்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தார்கள்,
விவசாயத்தைப் பெருக்கினார்கள்,
கடல் கடந்து வாணிகம் செய்தார்கள்,
உலகம் முழுவதும் தங்கள் புகழை நிலை நாட்டினார்கள்,
யாராலும் செய்ய முடியாத செயல்களைச் செய்தார்கள்,
யாரும் செய்யக் கூட யோசிக்கும் செயல்களைச் செய்தார்கள்,
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள்,
பல்லுயிர் ஓம்புதலில் புகழ் பெற்று விளங்கினார்கள்,
யாராலும் வீழ்த்த முடியாத வீரர்களாக திகழ்ந்தார்கள்,
கடவுளே தவறு செய்தாலும் தண்டித்தார்கள்,
கடவுளுக்கு சமமாக உயர்ந்தார்கள்,
உண்மைக் கடவுளை உணர்ந்தார்கள்,
உண்மைக் கடவுளை உணர்த்தினார்கள்,
அனைவரையும் ஏற்றத் தாழ்வு இல்லாமல் நடத்தினார்கள்,
அனைத்தும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கச் செய்தார்கள்,
நீதிக்காக உயிரைக் கொடுத்தார்கள்,
வளைந்த நீதியை தன் உயிரைக் கொடுத்து நிமிர்த்தினார்கள்,
வீரத்தை நிலை நாட்டினார்கள்,
விவேகத்தைச் செயல்படுத்தினார்கள்,
அன்பை விதைத்தார்கள்,
கருணைக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார்கள்,
அழகை ஆராதித்தார்கள்,
அறிவில் உயர்ந்து இருந்தார்கள்,
புத்திசாலித் தனத்தில் சிறந்து விளங்கினார்கள்,
படைக்க முடியாததையும் படைத்தார்கள்,
யாராலும் படைக்க முடியாததையும் படைத்தார்கள்,
உயர்வு தாழ்வு பாராட்டாமல் வாழ்ந்தார்கள்,
வறுமை என்ற சொல்லே இல்லாமல் வாழ்ந்தார்கள்,
ஏழ்மை என்ற சொல்லை அறியாமல் இருந்தார்கள்,
காதலில் காவியம் படைத்தார்கள்,
காமத்தை பகுத்தறிந்து வாழ்ந்தார்கள்,
உழைப்பில் உயர்ந்து நின்றார்கள்,
அல்லும் பகலும் கடினமாக உழைத்தார்கள்,
தன்னலம் கருதாமல் வாழ்ந்தார்கள்,
பொதுநலம் கருதி இருந்தார்கள்,
உண்மையாக பேசி வாழ்ந்தார்கள்,
நல்லவர்களாக வாழ்ந்தார்கள்,
நல்லவர்களாக நடிக்காமல் வாழ்ந்தார்கள்,
ஏமாற்றி பிழைக்காமல் வாழ்ந்தார்கள்,
ஆன்மீகத்தில் சிறந்த விளங்கினார்கள்,
பக்தி வெறி இல்லாமல் இருந்தார்கள்,
அனைத்து கடவுளையும் மதித்தார்கள்,
கடவுளுக்காக சண்டை போடாமல் இருந்தார்கள்,
தொழிலை வைத்து பேதம் பார்க்காமல் வாழ்ந்தார்கள்,
பிறப்பில் உயர்வு தாழ்வு பாராட்டாமல் வாழ்ந்தார்கள்,
பாமரரையும் மதித்தார்கள்,
படித்தவன் பேச்சைக் கேட்டார்கள்,
உண்மையாக வாழ்ந்தார்கள்,
ஊருக்காக வாழ்ந்தார்கள்,
நாட்டுக்கு தீங்கு என்றால் உயிரைக் கொடுத்தார்கள்,
தன்னை நம்பியவருக்கு அனைத்தையும் செய்தார்கள்,
எதிரியை வீழ்த்தினார்க்ள்,
துரோகியை அழித்தார்கள்,
உறவை மதித்தார்கள்,
உறவுக்குக் கை கொடுத்தார்கள்,
உரிமைக்குக் குரல் கொடுத்தார்கள்,
சிந்தனையில் சிறந்து விளங்கினார்கள்,
அறிவில் உயர்ந்து இருந்தார்கள்,
புத்தியை சிறப்பாக பயன்படுத்தினார்கள்,
அமைதியுடன் வாழ்ந்தார்கள்,
பொறுமையைக் கடைபிடித்தார்கள்,
நிதானத்தை செயல்படுத்தினார்கள்,
உயர்வின் அரியணையில் அமர்ந்தார்கள்,
ஊருக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார்கள்,
நாட்டுக்கு தலைவனாக வாழ்ந்தார்கள்,
அரசருக்கு எல்லாம் அரசராக திகழ்ந்தார்கள்,
ராஜாக்களையே மண்டியிட வைத்தார்கள்,
அனைத்து சாம்ராஜ்யங்களையும் தன் காலடியில் வைத்தார்கள்,
உலகத்தை ஒரே குடையின் கீழ் ஆண்டார்கள்,
சீர்திருத்த செம்மலாக திகழ்ந்தார்கள்,
சிந்தனையில் உயர்ந்தார்கள்,
திக்கற்றவர்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தார்கள்,
தெய்வத்துக்கு சமமாக இருந்தார்கள்,
தவறு செய்தால் தெய்வத்தையும் தண்டித்தார்கள்,
குற்றம் செய்த கடவுளையும் குற்றம் என்றார்கள்,
யாருக்கும் எதற்கும் பயப்படாமல் வாழ்ந்தார்கள்,
அவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
என்ற நிலையில் வாழ்ந்தார்கள்,
அத்தகைய சிறப்பு வாய்ந்தவர்கள் தான்
எங்கள் முன்னோர்களாகிய பாண்டியர்கள்,
அத்தகைய பாண்டியர்கள் வழி வந்தவர்கள் தான் நாங்கள்
என்று சொல்லும் போதே எங்களிடம்
வீரம் கொப்பளிக்கிறது,
விவேகம் தாண்டவமாடுகிறது,
கோபக்கனல் பறக்கிறது,
காதல் கனிகிறது,
தமிழ் மணக்கிறது,
தென்றல் வீசுகிறது,
குழந்தை சிரிக்கிறது,
தெய்வம் அருள் சுரக்கிறது,
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025. ----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share
v

ஜபம்-பதிவு-1044 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-22

 ஜபம்-பதிவு-1044

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-22
இந்த உலகத்தில் உள்ள சிலர் தங்கள் சாதி என்று சில மன்னர்களைச் சொல்லக் காரணம் அந்த மன்னர் வரலாறு படைத்தார் என்ற காரணத்தினால் தான். தங்கள் சாதியைச் சேர்ந்த மன்னர் என்று யாராவது சொன்னால் அவர்கள் சொல்லும் மன்னரை நன்றாக உற்றுக் கவனித்தால் அவர் வரலாறு படைத்தவராகத் தான் இருப்பார். வரலாறு படைத்த காரணத்தினால் தான் தங்கள் சாதி என்று சொல்கிறார்கள். வரலாறு படைக்கவில்லை என்றால் தங்கள் சாதி என்று சொல்ல மாட்டார்கள். இதிலிருந்து சாதி வெறி எப்படி மனிதனுக்குள் ஆட்டம் போடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாதி வெறி ஒரு மனிதனை எப்படி ஆட்டி வைக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
வரலாறு படைத்த மன்னர்களை தங்கள் சாதி என்று சொல்லிக் கொண்டு சண்டையிட்டுக் கொள்வது இந்த உலகத்தில் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
உங்களால் வரலாற்றை உருவாக்க முடியவில்லை. அதனால் முன்னோர்களின் வரலாற்றை சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள். வரலாறு படைத்த மன்னர்களை உங்கள் சாதி என்று சொல்லிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்றபடி வரலாற்றை உருமாற்றி வைத்துக் கொள்கிறீர்கள்.
அமைச்சர் : வரலாறு இருப்பவர்கள் தங்கள் வரலாற்றைப் பற்றிப் பேசுவார்கள். வரலாறு இல்லாதவர்கள் வரலாறு இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள். அதை கோபத்தின் மூலம் வெளிப்படுத்துவார்கள். நீ கோபப் படுவதைப் பார்க்கும் போது உனக்கு வரலாறு இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
உன்னுடைய முன்னோர்கள் எந்த ஒரு வரலாறையும் உருவாக்கவில்லை என்று தெரிகிறது. வரலாற்றை உருவாக்காதவர்கள் உன்னுடைய முன்னோர்கள் என்று தெரிகிறது. வரலாற்றை உருவாக்க முடியாமல் போனவர்கள் உன்னுடைய முன்னோர்கள் என்று தெரிகிறது. வரலாற்றை உருவாக்கும் தகுதி உன்னுடைய முன்னோர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. அதனால் தான், வரலாறு உள்ளவர்கள் வரலாற்றைப் பற்றிப் பேசும் போது எந்த ஒரு வரலாறும் இல்லாத உனக்கு கோபம் வருகிறது.
தங்களுக்கு என்று ஒரு வரலாறு இருந்தால் மட்டுமே அவர்கள் தங்கள் முன்னோர்களைப் பற்றிப் பேசுவார்கள். வரலாறு இல்லாதவர்கள் வரலாறு உள்ளவர்களைப் பார்த்து கோபப்படத்தான் செய்வார்கள்.
பாண்டியர்களுக்கென்று மாபெரும் வரலாறு இருக்கிறது,
பாண்டியர்களுக்கென்று தனிப்பட்ட வரலாறு இருக்கிறது,
யாரும் இது வரை உருவாக்காத வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
யாராலும் இனி உருவாக்க முடியாத வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
யாராலும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத வரலாறு
பாண்டியர்களுக்கு இருக்கிறது,
மறைத்து வைக்கப்பட்ட வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
பலபேர் தெரிந்து கொள்ளாத வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
பலபேர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாத வரலாறு
பாண்டியர்களுக்கு இருக்கிறது,
யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்று
மறைத்து வைக்கப்பட்ட வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது,
வரலாற்றிலே சிறந்த வரலாறு பாண்டியர்களுடைய
வரலாறு தான் என்று வரலாற்றிலேயே இருக்கிறது,
பாண்டியர்களுடைய வரலாற்றைப் போன்ற வரலாறு
யாரிடமும் இல்லாமல் இருக்கிறது,
சேரர்களை விட சிறந்த வரலாறு பாண்டியர்களிடம் தான் இருக்கிறது,
சோழர்களை விட சிறந்த வரலாறு பாண்டியர்களிடம் தான் இருக்கிறது,
மூவேந்தர்களில் சிறந்த வரலாறு பாண்டியர்களிம் மட்டும் தான் இருக்கிறது.
உலகிலுள்ள எந்த ஒரு மன்னரும் செய்யாத வரலாறு
பாண்டியர்களிடம் தான் இருக்கிறது,
சேரர்களையும், சோழர்களையும் வென்ற வரலாறு
பாண்டியர்களிடம் தான் இருக்கிறது.
சேரர்களையும், சோழர்களையும் அடிமைப்படுத்திய வரலாறு பாண்டியர்களிடம் தான் இருக்கிறது.
உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த வரலாறு
பாண்டியர்களிடம் தான் இருக்கிறது.
கலை, பண்பாடு, கலாச்சாரம், நாகரிகத்தில் சிறந்தவர்கள்
பாண்டியர்கள் தான் என்ற வரலாறு இருக்கிறது,
மிகப்பெரிய வரலாறு பாண்டியர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-1043 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-21

 ஜபம்-பதிவு-1043

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-21
அர்ஜுனன் : ரத்தம் தெறிக்கும் பேச்சு!
அமைச்சர் : விரைவில் உன் ரத்தமும் தெறிக்கப் போகிறது!
அர்ஜுனன் : நடக்கும் போது பார்க்கலாம்?
அமைச்சர் : உலகம் பார்க்கத் தானே போகிறது!
அர்ஜுனன் : பேச்சில் இருக்கும் வீரம், செயலில் இருக்குமா?
அமைச்சர் : நம்பிக்கையில்லையா?
அர்ஜுனன் : நம்பிக்கையில்லை.
அமைச்சர் : ஏன் நம்பிக்கையில்லை?
அர்ஜுனன் : நம்பிக்கையை இரண்டு பேர்களின் மேல் தான் வைக்க முடியும். ஒன்று தன் மேல் நம்பிக்கை வைக்க முடியும், இரண்டு தெரிந்தவர் மேல் நம்பிக்கை வைக்க முடியும்.
ஒருவர் தன் மேல் நம்பிக்கை வைக்கும் போது வாழ்க்கையில் உயர்கிறார்.
தெரிந்தவர் மேல் நம்பிக்கை வைக்கும் போது தான் நினைத்ததை முடிக்கிறார்.
அதுவே, ஒருவர் தன் மேல் வைத்த நம்பிக்கையை இழக்கும் போது தன்னுடைய வாழ்க்கையை இழக்கிறார்.
தெரிந்தவர் மேல் வைத்த நம்பிக்கையை இழக்கும் போது தன்னுடைய உறவை இழக்கிறார்.
நம்பிக்கை என்பது தன் மீதும், தெரிந்தவர் மீதும் வைப்பது.
தெரியாதவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது.
அதனால் நீங்கள் சொல்லும் சொல்லில் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்கள் பேச்சில் இருக்கும் வீரம், செயலில் இருக்குமா என்பது தெரியவில்லை.
அமைச்சர் : பாண்டியர்களைப் பொறுத்தவரை, பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வீரம் இருக்கும், ஏன் எழுத்தில் கூட வீரம் இருக்கும்
எங்கள் முன்னோர்களின் வரலாறுகளை நீ கேட்டுக் கொண்டு தானே இருந்தாய். ஏன் உனக்கு தெரியவில்லையா?
அர்ஜுனன் : எவ்வளவு காலம் தான் உங்கள் முன்னோர்களின் வரலாறுகளைச் சொல்லிக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்
நீங்கள் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைவரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். தங்களது முன்னோர்களுடைய வரலாற்றுப் பெருமைகளைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் முன்னோர்கள் செய்த வரலாற்று சாதனைகளைச்
சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்.
உங்கள் முன்னோர்கள் படைத்த வரலாறுகளையே
சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கிறீர்களே!
ஏன் உங்களுக்கென்று தனிப்பட்ட ஒரு வரலாறு இல்லையா?
ஏன் உங்களால் தனிப்பட்ட நிலையில்
ஒரு வரலாற்றை உருவாக்க முடியாதா?
ஏன் இது வரை நீங்கள் ஒரு வரலாற்றைக் கூட உருவாக்கவில்லையா?
ஏன் உங்களால் ஒரு வரலாற்றைக் கூட உருவாக்க முடியாதா?
ஏன் வரலாற்றை உருவாக்கும் தகுதி உங்களுக்கு இல்லையா?
தன்னால் வரலாற்றை உருவாக்க முடியாதவன் தான் தன் முன்னோர்களின் வரலாற்றையே சொல்லிக் கொண்டு இருப்பான். அந்த விஷயத்திலேயே காலத்தை ஓட்டிக் கொண்டு இருப்பான். புதிய வரலாற்றை உருவாக்க முயற்சி செய்ய மாட்டான்.
இதே செயலைத் தான் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் இதே செயலைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
தங்கள் முன்னோர்கள் வரலாற்றைச் சொல்லும் போது வரலாறு படைத்த மன்னர்களை தங்கள் சாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளும் கூட்டம் அந்தக் காலத்திலும் இருந்தது. இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வருங்காலத்திலும் இருக்கத் தான் போகிறது.
வரலாறு படைத்த மன்னர்களைக் குறிப்பிட்டு அவர் எங்கள் சாதி என்று சொந்தம் கொண்டாடும் கூட்டமும் இருக்கிறது, வரலாறு படைத்த மன்னர்களை எங்கள் சாதி, என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் கூட்டமும் இருக்கிறது. வரலாறு படைத்த மன்னர்களை எங்கள் சாதி என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கூட்டமும் இருக்கிறது.
சாதி இருக்கும் வரை வரலாறு படைத்த மன்னர்களுக்கு சாதி அடையாளம் பூசும் கூட்டம் இந்த உலகத்தில் இருந்தது. இருந்து கொண்டே தான் இருக்கிறது. இனி இருக்கவும் போகிறது. இதை யாராலும் மாற்ற முடியாது.
மன்னருக்கு பொதுவாக சாதி என்பது கிடையாது. மன்னர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற காரணத்தினால் அவ்வாறு சொல்வது கிடையாது. மன்னர் நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்வார். மன்னர் ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். அரசி வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையை எந்த சாதி என்று சொல்ல முடியும். அந்த குழந்தை மன்னன் ஆனால் என்ன சாதி என்று சொல்ல முடியும். எந்த சாதி என்று சொல்லவே முடியாது.
அதனால் தான் அரச குடும்பத்தில் பிறந்து அரசாட்சி செய்யும் பெரும்பாலான அரசர்களுக்கு சாதி கிடையாது. இந்த மன்னர் இந்த சாதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. இந்த மன்னர் இந்த சாதி தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எனவே, தான் அரசர்களுக்கு சாதி என்பது கிடையாது என்று சொல்லக் காரணம்.
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share

ஜபம்-பதிவு-1042 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-20

 ஜபம்-பதிவு-1042

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-20
அத்தகைய சிறப்பு வாய்ந்த
உலகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களின் வழி வந்தவனே
போர்க்களத்தில் இறந்தவர்களின் உடம்புகளைப் பேய்கள் விருந்தாக உண்ணும்படி களவேள்வி செய்த பாண்டியர்களின் வழி வந்தவனே,
பொதிய மலையை உடைய பாண்டியர்களின் வழி வந்தவனே ,
சேரனும், சோழனையும் வென்ற பாண்டியர்களின் வழி வந்தவனே,
பல நாடுகளின் மேல் படையெடுத்து வேற்றரசர்களுடைய மதிலை முற்றுகையிட்டு உட்சென்று அம்மன்னர்களைப் பொருது வென்று, அவர்களைத் தன் ஏவல் கேட்கும்படி செய்து கொற்றவர் தம் கோனாக விளங்கிய பாண்டியர்களின் வழி வந்தவனே.
நண்பர்களின் குடியை உயரச் செய்து, பகைத்தவர் அரசைக் கைக்கொண்ட பாண்டியர்களின் வழி வந்தவனே!
புகழையும் முத்தையும் முத்துக் குளிப்பவரையும் அருகில் சிறிய ஊர்களையும் உடைய ஊருக்குத் தலைவனாக விளங்கிய பாண்டியர்களின் வழி வந்தவனே!
பிறருக்குக் கிடைப்பதற்கரிய பொருள்களை எளிதிலே கைக்கொண்டு அவற்றை தனக்கென்று பாதுகாத்து வைத்துக் கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்த பாண்டியர்களின் வழி வந்தவனே!
நகரத்திலே சுகமாக இருக்கலாம் என்று எண்ணாமல் பகைவரைப் பொரும் பொருட்டு மலைகளையும், காடுகளையும் கடந்து அவர்களுடைய உள்நாட்டிலே புகுந்து அரண்களைக் கைப்பற்றிப் பல காலம் அங்கங்கே தங்கிச் சிறப்புடன் போரில் வெற்றி கொள்ளும் பாண்டியர்களின் வழி வந்தவனே!
பகைவற் நாட்டிற் சென்று அவர்களுடைய காவற் காடுகளை அழித்து, வயல்களை எரியூட்டி, நாடென்னும் பெயர் மாறிக் காடு என்னும் பெயர் உண்டாகவும், பசுமாடுகள் தங்கின இடங்களில் காட்டு விலங்குகள் உறையவும், ஊராக இருந்த இடங்கள் பாழாகவும், மங்கையர் கூத்தாடி மகிழ்ந்த இடங்கள் பேயாடும் இடங்களாகவும், அங்குள்ள குடி மக்கள் பசியால் வருந்தி உறவினர்களைச் சென்றடையவும் , பெரிய மாளிகைகளில் இருந்த குதிர்கள் இப்போது சரிந்து போக அதில் கோட்டான் இருந்து கதறவும், செங்கழுநீர் பூத்துப் பொலிந்த பொய்கைகளில் கோரை வளர்ந்து மண்டவும், எருதுகள் உழுத வயல்களில் காட்டுப் பன்றிகள் ஓடித் திரியவும், அந்நாடுகள் பாழாகி விட்டன. யானைகளுடனும், படைகளுடனும் முருகன் போருக்குப் புறப்பட்டது போல் பகைவரிடம் சென்று வானத்தில் ஆரவாரம் எழ மழை போல் அம்புகளைத் தூவி குதிரைகள் புழுதி எழுப்பச் சங்கு முழங்கக் கொம்பு ஒலிக்க, அப்பகைவரை வென்று கொன்று அவர் நாடுகளை அழித்து மதில்களைக் கைக்கொண்டு அவருக்குத் துணையாக வந்தவரையும் வலியழித்து வீரம் காட்டிய பாண்டியர்களின் வழி வந்தவனே!
பகைவர்களை பாண்டியர்களின் ஏவலைக் கேட்டு நடக்கச் செய்த பாண்டியர்களின் வழி வந்தவனே!
நாடுகள் பலவற்றையும் வெற்றி கொண்டு அரசியல் பிழையாமல் அறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அடிவழியே தவறாமல் ஒழுகிய பாண்டியர்களின் வழி வந்தவனே !
தேவலோகத்தையும், அமுதபானத்தையும் பெறுவதாக இருப்பினும் பொய்யை மேற்கொள்ளாமல் மெய்யையே கடைப்பிடித்த பாண்டியர்களின் வழி வந்தவனே!
உலகத்தில் யார் எதிர்த்தாலும், தேவரே எதிரிகளாக வந்தாலும் பகைவர்களுக்கு அஞ்சாமல், புதையலாக உள்ள பெருநிதி கிடைத்தாலும் பழியை விரும்பாமல், பிறருக்கு நிதிகளைக் கொடுக்கும் நெஞ்சம் உடையவர்களாக விளங்கிய பாண்டியர்களின் வழி வந்தவனே!
தம்முடைய நகரங்களிலே இருந்து கூத்தாடும் மகளிருக்கு வளைகளையும், பாணர்களுக்கு யானைகளையும் வழங்கி தம்முடைய நண்பர்களுக்கு பல பொருள்களைக் கொடுத்து, காலையிலே எழுப்பும் சூதர்களுக்குத் தேரையும் குதிரைகளையும் வழங்கி, படைத் தலைவர்களுடன் இனிய குடிவகையை உண்டு, தம்மைப் பணிந்தோர் தேசங்கள் தம் ஏவலைக் கேட்டு நடக்க, பணியாதார் தேசங்களைப் பணியச் செய்து திறை கொள்வதற்காக அவர் நாட்டுக்குச் சென்று வென்ற பாண்டியர்களின் வழி வந்தவனே!
இத்தகைய சிறப்பு பாண்டிய வம்சத்தில் வழி வந்த பாண்டிய நாட்டின் மன்னன் சித்திரவாகனன் அவர்கள் புகழ் வாழ்க!
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-1041 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-19

 ஜபம்-பதிவு-1041

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-19
பூமிபாரத்தால் இளைப்புற்ற ஆதிசேஷனுக்கு ஓய்வு அளிக்கும் காரணியாக விளங்கும் பாண்டிய மன்னர்களின் குலம் ஊழிக்காலம் வரை இப்பூவுலகில் நிலைத்திருப்பதாக!
உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் விந்திய மலையை வளர விடாமல் தடுத்து நிறுத்தியவரும், கடல் நீர் முழுவதும் குடித்தவருமான குடமுனி அகத்தியரை புரோகிதராகக் கொண்டதும், செல்வத்துக்கு உறைவிடமான பாண்டிய மன்னர்களின் குலம் வெற்றி பெறுவதாக!
பழைய காலத்தில் மூவுலகமும் அழிந்த போதும் நிகரில்லா பெருமையால் புகழ் பெற்றிருந்த பாண்டியன் அழியாமல் கடலின் வாயிலில் நிலையாக நின்றான் !
வீரக்கழல்களை அணிந்த தனது திருவடிகளின் அசைவுகளால் எழும் ஒலிகளாலேயே தனது வலிமையின் அளவினை வேற்று நாட்டு அரசர்கள் அறியுமாறு உணர்த்தும் மாபெரும் பெருமை உடையவன் பாண்டிய மன்னன்.!
அவன் மீது வடிவேல் எறிந்த பெரும்பகையை பொறுக்காது கொடுங்கடல் ஒரு சமயம் ஓடும் அழகிய பஃறுளியாற்றுடனே பல மலைகளைக் கொண்ட குமரி மலைத் தொடர்களை விழுங்கிக் கொண்டது!
கொடுங்கடலின் ஆக்ரமிப்பால் தனது இடத்தை இழந்ததற்கு ஈடாகப் புதிதாக தோன்றிய வடதிசைக் கங்கையையும், இமயத்தையும் தனது பெரும்படை கொண்டு தென்திசை யாவற்றையும் ஒரே குடையின் கீழ் ஆண்டவன் தென்னவனான பாண்டியன் அவன் புகழ் வாழ்க!
திங்கட் செல்வனின் திருக்குலம் புகழ் விளங்கும் ஆயிரம் சிவந்த கண்களை உடைய இந்திரன் பூட்டிய திறம் விளங்கும் ஆரத்தை தன் புகழ் ஒளி பொங்கும் விரிந்த மார்பிலே அணிந்த பாண்டியன் புகழ் வாழ்க!
தனது பெருமைக்குரிய பெருநாட்டிலே பெய்யாது சென்ற மழை மேகங்களை சிறைப்படுத்தி பெருமழை சுரக்குமாறு செய்து நாட்டு வளத்தை பெருக்கிய மாபெரும் தலைவன் பாண்டியன் வாழ்க!
வேதங்களை அருளிய முதிய முதல்வனாகிய சிவபெருமானுக்கு பின்னர் வந்து உயர்ந்த குன்றுகளைக் கொண்ட பொதிகை மலையை ஆளும் பாண்டியன்!
பூமி தரும் செல்வ வளத்தின் நிழலில் ஆட்சி செய்வதை கடமையாகக் கொண்டு வருகிறவர் பாண்டியர்!
அவர்களுடைய சிறப்பினை உடைய செங்கோலும், ஆட்சியின் தன்மையும் அவனுடைய வேலினது வெற்றி சிறப்பும் உலகெங்கும் விளக்கம் பெற்ற கொள்கையையுடையன!
மதுரை மாநகரில் வாழ்வோர் அவ்விட்த்தை விட்டு நீங்குதலை விரும்பாதவர்கள் அத்தகைய வளம் கொண்டது மதுரை1
இமயமலையின் நெற்றியில் தனது அரச சின்னமாகிய கயல்மீனை பொறித்தவன் பாண்டியன் இதற்கு எதிராக புலியும், வில்லும் சோழராலும், சேரராலும் பின்னர் பொறிக்கப்பட்டன!
சேரர், சோழர் மற்றும் அனைத்து அரசர்களும் தனது ஏவலை ஏற்று நடக்கும் படியாக உலகாண்டவன் பாண்டியன்!
மணமாலைகள் தொங்குகின்ற வெண்கொற்றக் குடையினை உடையவன் பாண்டியன். அவன் அரண்மனையிலே காலை முரசம் பள்ளியெழுச்சி முரசாக முழங்குகிறது!
கோர்க்கப்படாத பொதிய மலையின் ஆரமும், கோத்த கொற்கை கடலில் கிடைக்கும் முத்தும் தேவர்கோனான இந்திரனை வென்று அவன் அணிந்திருந்த உயர்ந்த நவரத்ன மாலையும் ஆகிய இவை மூன்றுமே தென்னாட்டவருக்கு அரசனான பாண்டியன் மார்பில் அணிந்துள்ளான்!
வெற்றி தரும் இடியை படையாக உடைய இந்திரனது முடியை உடைத்த பாண்டிய மன்னனது குறுந்தடியால் அடிக்கப்படும் வெற்றி முரசமானது பகையரசர்கள் மருளுமாறு நாள்தோறும் பகைவர்களைக் கொன்று வெற்றி விளைவித்து தென்னவனுக்கு அளித்து முழங்குகிறது!
அரசனுக்கு அரசனும் திங்களை ஒத்த வெண்கொற்றக் குடையினையும் வாள் வலிமையையும் உடைய வேந்தன் பாண்டியன்!
கொற்கை நகரின் தலைவனும் குமரி ஆற்றுக்கு உரிமை உடையவனும் பொதியிலாகிய பொருப்பினை உடையவன் பாண்டியன்!
முடிசூடிய மூவேந்தர்களில் பெரும்படை கொண்டு விளங்குபவர்கள் பாண்டியர்கள்!
வடநாட்டார் படைகளை தோற்கடித்து வென்று தென் தமிழ் நாடனைத்தும் ஒன்றே என்று கட்டி ஆண்டவன் பாண்டியன்!
இத்தகைய சிறப்பு மிக்க பாண்டிய வம்சத்தில்,
பாண்டியர்களுடைய முன்னோர்கள் பாண்டிய நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தார்கள். அதனால் காற்று நன்றாக வீசியது. நட்சத்திரங்கள் காலத்துக்கு ஏற்ற கதியிலேயே நடந்தன. கதிரவனும் திங்களும் தங்களால் ஒரு குறையும் நேராமல் ஒளி வழங்கினர். மேகம் உரிய காலத்தில் மழையை பெய்தது. திசைகளெல்லாம் தழைத்தன. ஒன்று ஆயிரமாக விளை நிலங்கள் விளைந்து மல்கின. மரங்கள் நன்றாக பயன் தந்தன. பசியும் பிணியும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடம் வாழ்ந்தனர். எவ்வளவு பேர் எத்தனை காலம் உண்டாலும் குறையாத வளம் நாட்டில் நிரம்பி இருந்தது. எக்காலத்திலும் மெய்யையே கூறும் அமைச்சர்கள் அரசர்களுக்கு துணையாக இருந்து வந்துள்ளனர்.
சாதி, மதம், ஆன்மீகம் மூன்றையும் யார் சூதாட்டப் பொருட்களாக பயன்டுத்துகிறார்களோ? அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகின்றனர். பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களாக உயர்கின்றனர். இந்த மூன்றையும் சூதாட்டப் பொருட்களாக பயன்படுத்தத் தெரியாதவர்கள் வாழ்க்கையில் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அடிமைகளாக ஆக்கப்பட்டு ஏவல் செய்யும் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர். சமுதாயத்தில் இத்தகைய இழிவு நிலை உண்டாகக் காரணம் இழிந்த மனம் கொண்டவர்கள் சமுதாயத்தில் வாழ்கின்ற காரணத்தினால் தான்.
ஆனால், பாண்டிய நாட்டில் யாரும் இந்த மூன்றையும் சூதாட்டப் பொருட்களாக பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், பாண்டியர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். உலகத்திற்கே ஒழுக்கத்தை போதித்தவர்கள். ஒழுக்கத்திற்கே உதாரணமாகத் திகழ்பவர்கள் பாண்டியர்கள்.
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share