June 26, 2020

அறிய வேண்டியவை-பதிவு-51


              ஜபம்-பதிவு-543
         (அறிய வேண்டியவை-51)

“இந்த உலகத்தில் உள்ள
மனிதர்கள் அனைவரும்
இரண்டு செயல்களைச்
செய்து கொண்டிருக்கின்றனர்”

ஒன்று  :
“பாவச் செயல்களைச்
செய்து
கொண்டிருக்கின்றனர்”

இரண்டு :
“புண்ணியச் செயல்களைச்
செய்து
கொண்டிருக்கின்றனர்”

“பாவமும் புண்ணியமும்
மனிதன் செய்யும்
செயலைப் பொறுத்து
தீர்மானம்
செய்யப்படுவதில்லை”

“பாவமும் புண்ணியமும்
மனிதன் செய்யும்
செயலின் விளைவைப்
பொறுத்துத் தான்
தீர்மானம்
செய்யப்படுகிறது”

ஒன்று – பாவம் :
“ஒரு கொலைகாரன்
கத்தி எடுத்துக் கொண்டு
தன்னுடைய
விரோதியை கொலை
செய்வதற்காக
கத்தியை
எடுத்துக் கொண்டு
சென்று அவருடைய
கழுத்தை வெட்டுகிறான்”

“கொலைகாரனின்
செயலானது விரோதியின்
உயிரை எடுப்பதற்காக
கழுத்தை வெட்டுவது ;
விளைவானது விரோதி
இறந்து விடுகிறார் ;”

“செயலின் விளைவானது
ஒரு உயிரைக்
கொல்வது என்ற
காரணத்தினால்
கொலைகாரன் செய்த
செயல் பாவத்தில் சேரும் “

இரண்டு – புண்ணியம் :
“ஒரு மருத்துவர்
ஒரு உயிரைக்
காப்பாற்றுவதற்காக
அறுவை சிகிச்சையை
போராடி செய்கிறார்
நோயாளி பிழைத்துக்
கொள்கிறார் “

“மருத்துவரின் செயலானது
நோயாளியின் உயிரைக்
காப்பாற்றுவதற்காக
அறுவை
சிகிச்சை செய்வது ;
விளைவானது நோயாளி
பிழைத்துக் கொள்வது ;    

“செயலின் விளைவானது
ஒரு உயிரைக்
காப்பாற்றுவது என்ற
காரணத்தினால்
மருத்துவர் செய்த செயல்
புண்ணியத்தில் சேரும் “

“மனிதன் செய்யும்
பாவச் செயல்களும்
புண்ணியச் செயல்களும்
பாவப் பதிவுகளாகவும்,
புண்ணியப் பதிவுகளாகவும்
மனிதனுடைய
ஆன்மாவில்
பதிந்து விடுகிறது “

“மனிதனுடைய
ஆன்மாவில்
பதிந்துள்ள இந்த
பாவப் பதிவுகளையும்
புண்ணியப் பதிவுகளையும்
கர்மா என்ற வார்த்தையால்
அழைக்கிறோம் “

“கர்மாவை மூன்று
வகைகளாகப் பிரிக்கலாம்”

ஒன்று  : சஞ்சித கர்மம்
இரண்டு: பிராரப்த கர்மம்
மூன்று : ஆகாம்ய கர்மம்

ஒன்று :
(சஞ்சித கர்மம்)
“கருவழியே அவனது
முன்னோர்களிடமிருந்து
என்ன பதிவுகளைப்
பெற்றானோ
அது சஞ்சித கர்மம்
எனப்படும் “

இரண்டு :
(பிராரப்த கர்மம்)
“நாம் பிறந்தது முதல்
இன்று வரை
என்னென்ன
செயல்களைச்
செய்தோமோ - அது
பிராரப்த கர்மம்
எனப்படும் “

மூன்று :
(ஆகாம்ய கர்மம்)
“சஞ்சித கர்மம்,
பிராரப்த கர்மம்
ஆகிய இரண்டிலிருந்து
வரக்கூடிய
செயல்களின் பதிவு
ஆகாம்ய கர்மம்
எனப்படும் “

“சஞ்சித கர்மம்
பிராரப்த கர்மம்
ஆகிய இரண்டும்
பழவினை என்ற
பெயராலும்
ஆகாம்ய கர்மம்
என்ற ஒன்று
புகுவினை என்ற
பெயராலும்
குறிப்பிடப்படுகிறது”

“தமிழில் பழவினை
புகுவினை என்று
இரண்டு வினைகளாகக்
குறிப்பிடப்படுவது
இந்த மூன்று
கர்மங்களைத் தான்”

“பழவினை
புகுவினை என்று
அழைக்கப்படக்கூடிய
கர்மாக்களான
பாவப்பதிவுகளும்
புண்ணியப்பதிவுகளும்
மனிதனுடைய
ஆன்மாவில்
பதிந்து இருக்கிறது”

“மனிதன் தன்னுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்மாக்கள் முழுவதையும்
கழித்தால் மட்டுமே
மனிதனால் மீண்டும்
பிறவாத நிலையை
அடைய முடியும்
பிறப்பின் சுழற்சியானது
நிற்கும் - மனிதனால்
முக்தி என்ற மோட்சம்
என்ற நிலையை
அடைய முடியும் “

“மனிதனுடைய
ஆன்மாவில் பதிந்துள்ள
கர்மாக்கள் இருக்கும்
வரை மனிதப்
பிறப்பானது தொடர்ந்து
நடந்து கொண்டு
தான் இருக்கும்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment