June 26, 2020

அறிய வேண்டியவை-பதிவு-58


             ஜபம்-பதிவு-550
       (அறிய வேண்டியவை-58)

“கர்ணனுடைய இறுதி
யாத்திரையை முடித்து
வைக்க வேண்டிய
முக்கியமான கடமை
எனக்கு இருக்கிறது”

“கர்ணனுக்கு நான்
செய்ய வேண்டிய
கடமையை முடித்து
விட்டு வருகிறேன்”

“கர்ணனை நான்
சந்திக்க செல்கிறேன்”

(என்று சொல்லி
விட்டு கர்ணனை
சந்திக்க கிருஷ்ணன்
சென்று
கொண்டிருந்தார்)

(கிருஷ்ணன்
கர்ணனை சந்திக்க
அந்தணர் வேடத்தில்
செல்கிறார்)

கிருஷ்ணன் :
“தர்மமே சாய்ந்த
நிலையில் கிடக்கிறது”

“தர்மமே ஆதரவற்ற
நிலையில் இருக்கிறது”

“தர்மமே யாருமற்ற
நிலையில்
அனாதையாகக்
கிடக்கிறது”

“தர்மத்திற்கே உதவி
தேவைப்படும்
நிலையில் இருக்கிறது”

“தர்மமே யாரும்
உதவி செய்யாமல்
தனியாகக் கிடக்கிறது”

“தர்மத்திற்கே
ஒருவருடைய
ஆதரவு தேவைப்படும்
நிலையில்
இருக்கிறது”

“தர்மத்திற்கே உதவி
தேவைப்படும்
நிலையில் இருக்கும்
போது என்னுடைய
நிலையைச் சொல்லி
நான் எப்படி
தர்மத்திடம்
உதவி
கேட்க முடியும் ;
தர்மம் எப்படி
உதவி செய்யும் ; “

“உதவி
கேட்க வந்த
எனக்கு இப்படி
ஒரு நிலையா
ஏற்பட வேண்டும்“

“நான் உதவி கேட்க
வரும் வேளையிலா
தர்மம் உதவி
செய்ய முடியாமல்
இருக்க வேண்டும்”

“தர்மம் உதவி
செய்ய முடியாமல்
இருக்கும் நிலை
இருக்கும் போதா
நான் உதவி
கேட்டு
வர வேண்டும்”

கர்ணன் :
“அந்தணரே
தங்களுக்கு
என்ன வேண்டும்
தங்களுக்கு நான்
என்ன உதவி
செய்ய வேண்டும்”

“இந்த நிலையில்
இருக்கும் நான்
தங்களுக்கு எப்படி
உதவ முடியும்”

“இந்த நிலையில்
இருக்கும் என்னால்
தர்ம காரியங்களை
எப்படி
செய்ய முடியும்”

“இந்தக் கர்ணனை
கர்ணன் என்று
அழைக்காமல்
தர்மம் என்ற
வார்த்தையால்
சொல்லி என்னை
அழைத்து
பெருமைப்
படுத்தினீர்கள் “

“தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன்
கர்ணன் என்று
இந்த உலகம்
என்னை
அவமானப்படுத்தியது ;
இந்த உலகத்தில்
உள்ளவர்களால்
அவமானப்படுத்தப்பட்ட
என்னை கர்ணன்
என்று பெயரிட்டுக்
கூட அழைக்காமல்
தர்மம் என்று
சொல்லி என்னை
அழைத்ததன் மூலம்
நான் செய்த
தர்ம காரியங்களைப்
பெருமைப்
படுத்தினீர்கள் “

“நான் இருக்கும்
இந்த நிலையில்
தங்களுக்கு என்ன
உதவி செய்ய
முடியுமோ
அதை கண்டிப்பாக
செய்கிறேன்
என்னிடம்
உள்ள எதை
வேண்டுமானாலும்
நீங்கள்
கேட்டுப் பெறலாம்”

“என்னைத் தேடி
உதவி என்று கேட்டு
வந்தவர்களுக்கு
இல்லை என்று
சொல்லாமல் உதவி
செய்திருக்கிறேன்”

“தன்னைத் தேடி
உதவி என்று
கேட்டு
வந்தவர்களுக்கு
இல்லை என்று
சொல்லாமல்
வாரி வழங்குபவன்
கர்ணன் என்ற
வார்த்தையை
பொய்யாக்காமல்
தங்களுக்கு
வேண்டியதை
கேட்டுப் பெற்றுக்
கொள்ளுங்கள் “

“என்னிடம் இருப்பது
என்னுடைய
உயிர் மட்டுமே
அது தேவைப்பட்டால்
அதை உங்களுக்குத்
தருகிறேன்
என்னுடைய உயிரை
நீங்கள் பெற்றுக்
கொள்கிறீர்களா”

“என்னிடம்
என்னுடைய
உயிர் மட்டுமே
இருக்கிறது”

“என்னிடம்
அளிப்பதற்கு
என்னுடைய
உயிரைத் தவிர
வேறு எதுவும்
இல்லை”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment