June 26, 2020

அறிய வேண்டியவை-பதிவு-54


              ஜபம்-பதிவு-546
        (அறிய வேண்டியவை-54)

“தாழ்ந்த குலத்தில்
பிறந்த கர்ணன் - நான்
இருக்கும் வரை
என்னுடைய
அணியில்
போரிடக் கூடாது
என்று பீஷ்மரால்
ஒதுக்கி வைக்கப்பட்ட
கர்ணன்
தனக்கு நேர்ந்த
அவமானங்களால்
உண்டான
காயங்களின்
வடுக்கள்
மறையாத
நிலையில்
தன்னந்தனியாக
கௌரவர்களின்
சேனாதிபதியாக
அர்ஜுனனோடு
தன்னந் தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன் “

“கர்ணனை
சேனாதிபதியாக்கிய
போது
தாழ்ந்த குலத்தில்
பிறந்த கர்ணன்
கௌரவப்
படைகளுக்கு
சேனாதிபதியானல்
நான் கர்ணன்
கீழ் இருந்து
போரிட மாட்டேன் ;
என்று சொல்லிய
துரோணருக்காக
துரோணரை
சேனாதிபதியாக்கினான்
துரியோதனன் ;
துரோணர்
சேனாதிபதியான
பிறகு தான்
தன்னுடைய
அணியில்
கர்ணனை போரிட
அனுமதி அளித்தார்
துரோணர் ;
சமுதாயத்தின்
இந்த
ஏற்றத் தாழ்வுகளை
நினைத்து
தனக்கு ஏற்பட்ட
வேதனைகளைத்
தாங்கிக் கொண்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“அர்ஜுனனிடம்
இரு குறையாத
அம்பறாத்
தூணிகள்
இருக்கின்றன
காண்டீபத்தின்
நாண்கயிறு
தெய்வத்
தன்மையுள்ளது
இந்த மூன்றும்
இல்லாமல்
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“தன்னுடைய கவச
குண்டலங்களை
இந்திரனுக்கு
தானம்
செய்து விட்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“கற்ற வித்தை
தக்க சமயத்தில்
மறந்து போகும்
என்று பரசுராமர்
கொடுத்த சாபத்தை
வைத்துக் கொண்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“போரில் உன்
தேர்ச்சக்கரம்
பூமியில்
புதைபடும் என்ற
பிராமணரின்
சாபத்தைத்
தாங்கிக் கொண்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“பஞ்ச
பாண்டவர்களில்
அர்ஜுனனைத்
தவிர்த்து
மற்ற பாண்வர்கள்
நால்வரையும்
கொல்ல மாட்டேன்
என்று
குந்தி தேவிக்கு
செய்து கொடுத்த
சத்தியத்தை
தாங்கிக் கொண்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“நாகாஸ்திரத்தை
அர்ஜுனன் மேல்
ஒரு முறைக்கு மேல்
மறு முறை
பிரயோகிக்கக் கூடாது
என்று குந்தி
தேவிக்கு செய்து
கொடுத்த சத்தியத்தை
தாங்கிக் கொண்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

“அர்ஜுனனை
அழிப்பதற்கு தன்னிடம்
இருந்த ஒரே
ஆயுதமான
சக்தி ஆயுதத்தை
கிருஷ்ணனின்
சூழ்ச்சியால்
கடோத்கஜனை
அழிப்பதற்காகப்
பயன்படுத்தி விட்டு
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன் “

“சாபங்கள்
வாக்குறுதிகள்
ஆகியவைகள்
அனைத்தையும்
தாங்கிக் கொண்டு
போர் விதிகளை
முறைகளை
சிறிதும் மீறாமல்
கடைபிடித்து
கெளரவர்களின்
சேனாதியாக
அர்ஜுனனோடு
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருந்தான்
கர்ணன்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 26-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment