July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-114


             ஜபம்-பதிவு-606
       (அறிய வேண்டியவை-114)

“அர்ஜுனனைக்
கொல்வதற்காக
கர்ணன்
இந்திரனிடம்
இருந்து கேட்டு
பெற்ற சக்தி
ஆயுதத்தை
கர்ணனை
கடோத்கஜன் மீது
செலுத்த வைத்து
அதர்மச்
செயல் புரிந்து
கடோத்கஜனைக்
கொல்லச் செய்து
கர்ணனின் சக்தி
ஆயுதத்தை
வீணடிக்கும்படிச்
செய்து விட்டாய் “

“கர்ணனின் தேர்
தரையில்
அமிழ்ந்து
இருந்த போது
கர்ணன்
தேரிலிருந்து
இறங்கி
நின்ற போது
கர்ணன்
மந்திரங்களை
மறந்து
நின்ற போது
கர்ணன்
நிராயுதபாணியாக
தரையில்
நின்று
கொண்டிருந்த
போது
அர்ஜுனனை
கர்ணன் மேல்
அம்பு
விடச் செய்து
அதர்மச் செயல்
புரிந்து
கர்ணனைக்
கொன்றாய்”

“சூரியனை
மறைக்கும்
மாய வித்தை
செய்து
சிந்து ராஜனான
ஜயத்ரதனை
அர்ஜுனனைக்
கொண்டு
அதர்மச் செயல்
புரிந்து
கொன்றாய்”

“பலசாலியான
பூரிச்ரவஸானவன்
உன்னால்
தூண்டி விடப்பட்ட
துராத்மாவான
சாத்யகியால்
அதர்மச்
செயல் புரிந்து
கொல்லப்பட்டான்”

“என்னுடைய
உடலில்
பலவீனமான பகுதி
இடுப்பிற்குக்
கீழே இருக்கும்
தொடை
என்பதை
பீமனுக்கு
குறிப்பால்
உணர்த்தி
கதாயுதச்
சண்டையில்
விதிகளை மீறி
அதர்மச்
செயல் புரிந்து
என்னைக்
காயப்படுத்தி
படுக்க
வைத்திருக்கிறாய்”

“உலகத்திலேயே
சிறந்த வீரர்களாகக்
கருதப் படுவர்களை
அனைவரையும்
அதர்மச் செயல்
புரிந்து
காயப்படுத்தியும்
கொன்றும்
செயல்களைச்
செய்து விட்டு
செய்த செயல்கள்
அனைத்தையும்
தர்மத்தை மீறி
அதர்மச் செயல்
செய்து விட்டு
என்னை
அதர்மச் செயல்
புரிந்தேன்
என்கிறாய்”

“என்னுடைய
சித்தப்பா பாண்டு
இறந்த பின்
அஸ்தினாபுரத்தின்
அரியணையில்
யாரை
ஏறக்கூடாது
என்று
சொன்னீர்களோ
அஸ்தினாபுரத்தை
ஆள்வதற்கு
தகுதியற்றவர்
என்று
யாரை
சொன்னீர்களோ
பார்வையற்றவர்
அரசாட்சி செய்ய
தகுதியற்றவர்
என்று
யாரை
சொன்னீர்களோ
சட்டத்தைக் காட்டி
யாரை அரசாட்சி
செய்யக் கூடாது
என்று
தடுத்தீர்களோ
அவரைத் தான்
என்னுடைய
தந்தையைதான்
அஸ்தினாபுரத்தின்
அரசராக
நியமித்தீர்கள்”

“அவர் தான்
அரசாட்சியை
ஏற்ற
என்னுடைய
தந்தை தான்
இன்று வரை
அஸ்தினாபுரத்தை
அரசாட்சி செய்து
வருகிறார்”

“என்னுடைய
தந்தை
பார்வையற்றவராக
இருந்தார் என்ற
காரணத்தினால்
இந்த நாட்டை
என்னுடைய
தந்தையான
திருதராஷ்டிரன்
ஆளக்கூடாது
என்று என்னுடைய
தந்தையை
அரசாட்சி
செய்ய
விடாமல்
தடுத்து
பாண்டுவை
அரசாட்சி
செய்ய
வைத்து
அதர்மச் செயலைப்
புரிந்தது யார்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment