July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-119


                ஜபம்-பதிவு-611
          (அறிய வேண்டியவை-119)

(என்று
துரியோதனன்
சொல்லி
முடித்த போது
அதிக
வாசனையுள்ள
மலர்கள்
துரியோதனன் மேல்
விழுந்தது
கந்தவர்கள்
மிக இனிமையான
நான்கு
விதமான
வாத்தியங்களை
முழக்கினார்கள்
அப்சரஸ்களும்
துரியோதனனுடைய
கீர்த்தியை
பாடல்களாக
பாடினார்கள்
சித்தர்களும்
நல்லது
நல்லது
என்ற
வாக்குகளை
வெளியிட்டார்கள்‘
வாசனை
நிரம்பிய
காற்றானது
அமைதியாக
வீசியது
எல்லா
திசைகளும்
ஒளி விட்டு
பிரகாசித்தது
ஆகாயம்
வைடூரியம்
போல்
விளங்கியது

பாண்டவர்கள்
துரியோதனனுடைய
புகழையும்
துரியோதனனுக்கு
கிடைத்த
மரியாதையையும்
கண்டு
வெட்கித்
தலை
குனிந்தார்கள் )

அறியவேண்டிய
உண்மை
“ஒரு தவறைச்
செய்து விட்டு
அதன்
விளைவிலிருந்து
யாரும்
தப்ப
முடியாது
பாவச்
செயலைச்
செய்து விட்டு
செய்த
பாவத்திற்குரிய
விளைவை
அனுபவிக்க
வேண்டும்”

“மைத்ரேய
முனிவரை
அவமதிக்கும் 
செயலை
துரியோதனன்
செய்ததால்
துரியோதனா
உன்னுடைய
தொடை
உடைக்கப்பட்டு தான்
நீ சாவாய்
என்று
மைத்ரேய
முனிவர்
சாபம்
கொடுத்தார்”

“துரியோதனன்
செய்த பாவம்
மைத்ரேய
முனிவரை
அவமானப்
படுத்தியது
செய்த
பாவத்திற்கான
விளைவு
தொடை
உடைபட்டு சாக
வேண்டும்
என்பது
முதலாவதாக
பீமன்
துரியோதனனுடைய
தொடையை
உடைப்பதாக
சபதம்
எடுத்தான்
இரண்டாவதாக
துரியோதனனுடைய
தாயார்
காந்தாரி
தன்னுடைய
சக்தியை
துரியோதனனுடைய
தொடையில்
செலுத்த
முடியவில்லை
துரியோதனனுடைய
தொடை
அவனுடைய
உடலில்
பலவீனமாக
பகுதியாக
ஆனது”

“அதனைத்
தொடர்ந்து
கதாயுதத்தால்
பீமன்
துரியோதனனுடைய
தொடையை
உடைத்தான்”

“துரியோதனன்
செய்த
பாவம்
மைத்ரேய
முனிவரை
அவமானப்
படுத்தியது
செய்த
பாவத்திற்கான
விளைவு தொடை
உடைபட்டு சாக
வேண்டும்
என்பது
சரியாகவே
நடந்தது”

“இதிலிருந்து ஒரு
செயலைச்
செய்து
விட்டு
யாரும்
அதனுடைய
விளைவிலிருந்து
தப்ப
முடியாது
என்பதே
இக்கதையின்
மூலம்
நாம் அறிய
வேண்டிய
உண்மை
ஆகும்

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment