July 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-116


                ஜபம்-பதிவு-608
         (அறிய வேண்டியவை-116)

“என்னுடைய
தந்தையை
இந்த பூமியை
ஆண்டு
அனுபவிக்காமல்
செய்து விட்டு
அவருடைய
வாரிசான
என்னையும்
இந்த பூமியை
ஆண்டு
அனுபவிக்காமல்
செய்து விட்டு
பாண்டுவும்
அவருடைய
வாரிசுகளும் தான்
இந்த பூமியை
ஆண்டு
அனுபவிக்க
வேண்டும் என்று
சொல்வது
எங்களுடைய
உரிமையைப்
பறிப்பது போல்
இருக்கிறது என்று
கேட்டால்
நாங்கள்
கெட்டவர்கள்
கௌரவர்கள்
கெட்டவர்கள்
துரியோதனன்
கெட்டவன்
கௌரவர்கள்
அதர்மச் செயல்
புரிபவர்கள்”

“ஆனால் இந்த
துரியோதனனுக்கு
கிடைக்க
வேண்டிய
உரிமையை
பாண்டவர்கள்
எடுத்துக்
கொண்டால்
பாண்டவர்கள்
நல்லவர்கள்
தர்மவான்கள்
தர்மச் செயலைப்
புரிபவர்கள்”

“பூமியின் மீது
ஆசை இருந்த
காரணத்தினால்
தானே
பாண்டவர்கள்
குருஷேத்திரப்
போரில்
போரிட்டார்கள்
நாட்டை
ஆள வேண்டும்
என்ற
காரணத்தினால்
தானே
பாண்டவர்கள்
குருஷேத்திரப்
போரில்
போரிட்டார்கள் “

“பார்வையற்றவரும்
அரசாட்சி
செய்யக் கூடாது
பார்வையற்றவருடைய
வாரிசுகளும்
அரசாட்சி
செய்யக்கூடாது
என்று எங்களுக்கு
இழைக்கப்பட்ட
அநீதியை
எதிர்க்க
வேண்டும்
என்ற
காரணத்திற்காகவும்

எங்களுக்கு
மறுக்கப்பட்ட
நீதியை நாங்கள்
பெற வேண்டும்
என்ற
காரணத்திற்காகவும்

எங்களுடைய
உரிமையை
நாங்கள் விட்டுக்
கொடுக்கக்
கூடாது
என்ற
காரணத்திற்காகவும்

வருங்காலத்தில்
எங்களைப் போன்ற
ஒரு நிலை
வேறு
யாருக்கும்
ஏற்படக் கூடாது
என்ற
காரணத்திற்காகவும்

என்னுடைய
தந்தைக்கு
மறுக்கப்பட்ட
உரிமை
எனக்கு
மறுக்கப்பட்ட
உரிமை
என்னுடைய
வாரிசுகளுக்கும்
ஏற்படக்கூடாது
என்ற
காரணத்திற்காகவும்
தான் கௌரவர்கள்
குருஷேத்திரப்
போரில்
போரிட்டார்கள்

ஆனால்
பூமியை
அரசாட்சி
செய்ய
வேண்டும்
என்று
பாண்டவர்களுக்கு
ஏற்பட்ட
பேராசையின்
காரணமாகத் தானே
பாண்டவர்கள்
குருஷேத்திரப்
போரில்
போரிட்டார்கள் “

“கௌரவர்களுடைய
உரிமைக்கும்
பாண்டவர்களுடைய
ஆசைக்கும்
இடையே
நடைபெற்ற
போர் தான்
குருஷேத்திரப்
போர்”

கிருஷ்ணன் :
“துரியோதனா
குருஷேத்திரப்
போர்
பூமியை யார்
அரசாட்சி செய்ய
வேண்டும் என்ற
காரணத்திற்காக
நடைபெற்றது
என்று
நினைத்து
விட்டாயா?”

“குருஷேத்திரப்
போர்
பூமியை
யார்
அரசாட்சி
செய்ய
வேண்டும்
என்பதற்காக
நடைபெற்ற
போர் கிடையாது”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 22-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment