September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-1

 ஜபம்-பதிவு-667

(சாவேயில்லாத

சிகண்டி-1)

 

வரலாற்றின்

நுழைவுக் கதவானது

யாராலும் எளிதில்

நுழைய முடியாத படி

சாத்தப்பட்டு

திறக்க முடியாத

பூட்டினால்

பூட்டப் பட்டுள்ளது.

 

வரலாற்றின்

நுழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள பூட்டினைத்

திறக்கக்கூடிய

சரியான சாவி

எது என்று

தெரிந்து

வைத்திருக்க

வேண்டும்.

 

அவ்வாறு தெரிந்து

வைத்திருப்பவர்களால்

மட்டுமே

வரலாற்றின்

நுழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள

பூட்டினைத் திறந்து

உள்ளே நுழைந்து

வரலாற்றின்

நிகழ்வுகளைத்

தெரிந்து கொள்ள

முடியும்

 

அந்தக் காலம்

முதல்

இந்தக் காலம்

வரை

வரலாற்றின்

நு6ழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள

பூட்டினைத் திறப்பதற்கு

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

இரண்டே இரண்டு

சாவிகளை

மட்டுமே

பயன்படுத்தி

வந்திருக்கின்றனர்.

 

ஒன்று :

அறிவு என்ற

சாவியைப்

பயன்படுத்தி

வந்திருக்கின்றனர்.

 

இரண்டு :

உண்மை என்ற

சாவியைப்

பயன்படுத்தி

வந்திருக்கின்றனர்.

 

வரலாற்றின்

நுழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள பூட்டினை

அறிவு என்ற சாவி

கொண்டு திறப்பவர்கள்

தங்களுடைய

அறிவையே

வரலாற்றின்

நிகழ்வுகளாகப்

பதிவு செய்கின்றனர்

ஆனால்,

வரலாற்றின்

நுழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள பூட்டினை

உண்மை என்ற

சாவி கொண்டு

திறப்பவர்கள்

உண்மையான

வரலாற்றையே

வரலாறாக பதிவு

செய்கின்றனர்.

 

இந்த

உலகத்தில் உள்ள

பெரும்பாலான

வரலாறுகள்

அனைத்தும்

அறிவினால் எழுதப்

பட்டவைகளாகத் தான்

இருக்கின்றன

உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாறுகள் மிகவும்

குறைவாகத் தான்

இருக்கின்றன.

 

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

எழுதப்பட்டவரின்

அறிவே

எல்லா இடங்களிலும்

நிரம்பி இருக்கும்

ஆனால்

உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

எல்லா இடங்களிலும்

உண்மை மட்டுமே

நிரம்பி இருக்கும்.

 

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றுக்கும்

உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றுக்கும்

சிறிதளவு

வித்தியாசம் தான்

இருக்கிறது.

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

பொய் மட்டும் தான்

இருக்கும்

அதாவது

உண்மை என்பது

இருக்காது

ஆனால்

உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

உண்மை

மட்டும் தான்

இருக்கும்

பொய் என்பது

இருக்காது

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

No comments:

Post a Comment