September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-2

 ஜபம்-பதிவு-668

(சாவேயில்லாத

சிகண்டி-2)

 

இதில் கஷ்டம்

என்னவென்றால்

எது அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாறு

எது உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாறு

என்று கண்டு

பிடிப்பது தான்

 

எது அறிவு கொண்டு

எழுதப்பட்ட வரலாறு

எது உண்மை கொண்டு

எழுதப்பட்ட வரலாறு

என்று புரிந்து

கொள்பவர்களால்

மட்டுமே

உண்மையான

வரலாறு எது

பொய்யான

வரலாறு எது

என்பதைத் தெரிந்து

கொள்ள முடியும்

இல்லை என்றால்

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

பொய்யான

வரலாற்றைத் தான்

தெரிந்து

கொள்ள முடியும்

 

வரலாற்றில்

உண்மையான

வரலாறு மட்டும்

தான் தெரிய

வேண்டுமே ஒழிய

ஒருவருடைய அறிவு

தெரியக் கூடாது

அப்படி தெரிந்தால்

அது உண்மையற்ற

வரலாறாகத்

தான் இருக்கும்.

 

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

ஒருவரையோ

(அல்லது)

பல பேரையோ

(அல்லது)

ஒரு நாட்டையோ

வீழ்த்தி வெற்றி

பெற்றவர்கள் தான்

நல்லவர்களாக

சித்தரிக்கப்பட்டு

வந்திருக்கிறார்கள்

தோல்வியுற்றவர்கள்

கெட்டவர்களாகத் தான்

சித்தரிக்கப்பட்டு

வந்திருக்கிறார்கள்.

 

வெற்றி பெற்ற

காரணத்தினால்

மட்டுமே

வெற்றி பெற்றவர்களை

நல்லவர்கள் என்று

சொல்லி

விட முடியாது

அதே சமயத்தில்

தோல்வியுற்ற

காரணத்தினால்

மட்டுமே

தோல்வியுற்றவர்களை

கெட்டவர்கள் என்றும்

சொல்லி விட

முடியாது.

 

வெற்றி

பெற்றவர்களை

நல்லவர்களாகவும்

தோல்வியுற்றவர்களை

கெட்டவர்களாகவும்

சித்தரித்துக் காட்டுவது

என்பது

வரலாற்றை

அறிவு கொண்டு

எழுதுபவர்களால்

காலம் காலமாக

நடைமுறைப்

படுத்தப்பட்டு

வந்திருக்கிறது.

 

வரலாற்றின்

பக்கங்களைத் தன்

அறிவு கொண்டு

நிரப்புவர்களால்

தீட்டப்படும் வரலாறு

எழுதுபவரின்

அறிவால்

நிரப்பப்படுவதால்

வரலாறானது

எழுதுபவரின்

அறிவாகவே

இருக்கிறது

 

வரலாற்றை

அறிவு கொண்டு

எழுதுபவர்கள்

வெற்றி பெற்றவர்களை

நல்லவர்களாகவும்,

தோல்வியுற்றவர்களை

கெட்டவர்களாகவும்

தான் காட்டுகின்றனர்

 

வெற்றி பெற்றவர்களின்

திறமைகளை

எழுதுபவர்கள்

தோல்வியுற்றவர்களின்

திறமைகளைப் பற்றி

எழுதுவதே கிடையாது

 

அறிவைக்  கொண்டு

எழுதுபவர்கள்

வெற்றி பெற்றவர்களையும்

தோல்வியுற்றவர்களையும்

சம நிலையில் வைத்து

எழுதுவதே இல்லை.

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

No comments:

Post a Comment