March 23, 2025

தென்காசி சரித்திரம்-(29)-ராமநதி, தத்துவசாரா நதி, தசரதன், இராமர், கடையம்-23-03-2025

 

தென்காசி சரித்திரம்-(29)-ராமநதி, தத்துவசாரா நதி, தசரதன், இராமர், கடையம்-23-03-2025

 

அன்பிற்கினியவர்களே,

 

தென்காசி மாவட்டம்,

கடையம் அருகே

உள்ள ராமநதி

சிறப்பைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 23-03-2025

------- ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////////////




March 16, 2025

மரணத்தோடு மோதி கேரளா எஸ்டேட்டில் ஒரு பயணம்

 

சுற்றுலா(1) - மரணத்தோடு மோதி கேரளா எஸ்டேட்டில் ஒரு பயணம்-16-03-2025

 

அன்பிற்கினியவர்களே

 

மரணத்தோடு மோதிப்பார்த்து

கேரளா எஸ்டேட்டில்

ஒரு பயணம்

 

அடர்ந்த காடுகள்,

மலைகள்,

ஆறுகள்,

பள்ளத்தாக்குகள்,

ஆகியவற்றைக்

கடந்து ஒரு பயணம்

 

வாகனத்தை ஓட்டி

கேரளாவின்

எழிலை நமக்கு

காட்டிய

திரு.பொன்ராஜ்

கண்மணியாபுரம்

அவர்களுக்கு

 

நன்றி

 

------16-03-2025

-----ஞாயிற்றுக்கிழமை

 

///////////////////////////////////////





March 11, 2025

ஜபம்-பதிவு-1039 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-17

 ஜபம்-பதிவு-1039

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-17


துணைத் தளபதி : யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?


அர்ஜுனன் : உலகத்திலேயே பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் தான் திறமைசாலிகள்   அவர்களுடைய திறமைக்கு இணையான ஒற்றர்கள்  இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். 


அப்படிப்பட்டவர்களால் கூட

நான் யார்? எங்கிருந்து வருகிறேன் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லையா?


துணைத் தளபதி :  பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை

நீ விசாரிக்கப்படும் போது தெரிந்து கொள்வாய்


அர்ஜுனன் : நான் எதற்காக விசாரிக்கப்பட வேண்டும்?


துணைத் தளபதி : ஏனென்றால், இப்போது நீ கைது செய்யப்பட்டு இருக்கிறாய்!


அர்ஜுனன் : நீங்கள் கைது செய்யும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்.


துணைத் தளபதி : இளவரசியின் விருப்பம் இல்லாமல் அவரை துரத்திச் சென்று இருக்கிறாய் அதற்காக?


அர்ஜுனன் : இளவரசி சொன்னாரா?


துணைத் தளபதி : நாங்களே பார்த்தோம்.


அர்ஜுனன் : நீதிக்காக உயிர் கொடுத்த பாண்டியர்கள் வாழும் பாண்டிய நாட்டில்

எந்தக் குற்றமும் செய்யாதவனை கைது செய்கிறீர்கள்.


துணைத் தளபதி : நீ குற்றவாளியா இல்லையா என்பது விசாரணையின் முடிவில் தெரியும்.


அர்ஜுனன் : இளவரசியை விசாரிப்பீர்களா?


துணைத் தளபதி : விசாரணையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.


பாண்டிய நாட்டின் நீதிக்கு முன்னால் அரசன், அரசி, இளவரசன், இளவரசி, மக்கள் எல்லோரும் ஒன்று தான். நீதிக்கு முன் அனைவரும் சமமாகத் தான் நடத்தப்படுவார்கள்.


பெண்களை விருப்பம் இல்லாமல் அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கு பாண்டிய நாட்டில் ஒரே தண்டனை தான் அவர்கள் தலை அவர்கள் உடம்பில் இருக்காது என்பதைத் தெரிந்து கொள்.


இவனை விசாரணைக்கு அழைத்து வாருங்கள்.


(என்று சொல்லி விட்டு குதிரையில் ஏறி துணைத் தளபதி சென்று விட்டார் காவலாளிகள் அர்ஜுனனைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.


அர்ஜுனன் கைதியாக பாண்டிய நாட்டிற்குள் அழைத்துச் செல்லப்படுகிறான்.)


-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1038 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-16

 ஜபம்-பதிவு-1038

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-16


காதல் என்பது உணர்வு மட்டும் கிடையாது. 

உணர்வில் மட்டும் கலந்து இருப்பதற்கு.


காதல் என்பது உயிர். 

அது உயிருடன் கலந்தும் இருக்கும். 

உடலில் உயிர் இருக்கும் வரை காதலும் இருக்கும் 


காதல் என்பது கடவுள். 

காதல் கடவுளாகவும் இருக்கும். 

இந்த உலகத்தில் கடவுள் இருக்கும் வரை காதலும் இருக்கும்


காதல் என்பது புனிதமானது. புனிதத்துடன் தொடர்பு கொண்டது. 

புனிதமாகவே வாழ்ந்து கொண்டிருப்பது.


காதல் என்பது தைரியத்துடன் தொடர்பு கொண்டது


தைரியம் என்பது சுயமாகவும் வெளிப்படும், சூழ்நிலையைப் பொறுத்தும் வெளிப்படும். 

அது எதைப் பொறுத்து வெளிப்படுகிறது என்பது தான் முக்கியம்


தைரியம் என்பது எல்லா சூழ்நிலைகளிலும் வெளிப்படாது


நாம் எதன் மேல் அதிக அன்பாக இருக்கிறோமோ 

அதற்கு பாதிப்பு ஏற்படும் போது தைரியம் என்பது வெளிப்படும்.


எந்த ஒன்றை அடைய விரும்புகிறோமோ 

அதை அடைவதற்கு தைரியம் என்பது வெளிப்படும்

எந்த ஒன்றை இழக்கக் கூடாது என்று நினைக்கிறோமா 

அந்த ஒன்றை இழக்கக் கூடாது என்பதற்காக போராடும் போது 

தைரியம் என்பது வெளிப்படும்.


ஆனால், காதல் மட்டும் தான் இதிலிருந்து வேறுபட்டு நிற்கும்


காதல் நமக்குள் பிறக்கும் போதே தைரியம் வந்து விடும்

காதலை வெளிப்படுத்தும் போதும் தைரியம் வந்து விடும்

காதல் செய்யும் போதும் தைரியம் வந்து விடும்

காதலை இழக்கக் கூடிய நிலை வரும் போது  தைரியம் வந்து விடும்

காதலை தடுப்பவர்களை எதிர்க்கும் போதும் தைரியம் வந்து விடும்

காதலுக்கு தடையாக யார் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு தைரியம் வந்து விடும்

காதலில் வென்று காட்ட வேண்டும் என்று போராடும் போதும் தைரியம் வந்து விடும்

காதலுக்காக உயிரைக் கொடுக்கக் கூடிய நிலை வரும் போதும் தைரியம் வந்து விடும்


ஆகவே, காதலைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணத்தைக் கைவிடுங்கள்

காதல் என்று வந்து விட்டால்

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள்

ஒரே மாதிரி தான் செயல்படுவார்கள்


உங்களுக்கும் காதல் என்பது வந்து விட்டது

ஆனால், அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்கள்


வெளிப்படுத்த இடம், காலம், நேரம், சூழ்நிலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்


காதல் என்பது வந்து விட்டால் அதை உடனே வெளிப்படுத்தி விடுங்கள்

ஏனென்றால், காதல் என்பது உயிர்த் தன்மையுள்ளது


உயிர்த்தன்மையுள்ள காதலை வெளிப்படுத்த தாமதம் செய்தால் 

அது தன் உயிர்த் தன்மையை இழந்து விடும்


காதல் தன் உயிர்த் தன்மையை இழப்பதற்கு முன் 

உங்கள் காதலை சொல்லி விடுங்கள்


சித்திராங்கதை :  உடலிலிருந்து உயிர் பிரிந்தால் உடல் தான் அழியுமே தவிர, உயிர் அழியாது.


அப்படி இருக்கும் போது, உயிருடன் இரண்டறக் கலந்து இருக்கும் காதல் மட்டும் எப்படி அழியும். தன் உயிர்த்தன்மையை எப்படி இழக்கும். காதல் எப்போதுமே அழியாது. காதலர்கள் தான் அழிவார்கள்.


உங்கள் பேச்சைக் கேட்டால் காதல் செய்யாதவனும் காதல் செய்வான்

காதல் வேண்டாம் என்பவனும் காதல் வேண்டும் என்பான்


காதலை வெறுப்பவனும் காதல் மேல் காதல் கொள்வான்


ஒரு இளவரசியின் காதல் 

எளிதாக வெளிப்படுத்தக் கூடியதும் அல்ல

எல்லா இடத்திலும் வெளிப்படுத்தக் கூடியதுமல்ல.


நான் என்னுடைய காதலை எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த காலத்தில்,

எந்த சூழ்நிலையில் வெளிப்படுத்த வேண்டுமோ 

அப்போது கண்டிப்பாக வெளிப்படுத்துவேன்


அப்போது நான் சொல்லும் காதல் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கும்


(என்று சொல்லி விட்டு சித்திராங்கதை குதிரையில் ஏறி செல்கிறார்

அவரை அர்ஜுனன் துரத்திக் கொண்டு செல்கிறான்

அதைப் பார்த்த துணைத் தளபதி மற்றும் காவலர்கள் 

அர்ஜுனனை வளைத்துக் கொள்கின்றனர்

குதிரையிலிருந்து இறங்கும் துணைத் தளபதி அர்ஜுனனை நோக்கி வருகிறார். 

அவர் பேசுகிறார்)



-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1037 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-15

 ஜபம்-பதிவு-1037

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-15


சித்திராங்கதை :  ஆண்கள் காதலை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள். 


அவர்களுக்கு சமூக கட்டுப்பாடுகளும் கிடையாது. 

சமூகத்தைப் பார்த்து பயமும் கிடையாது. 


எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதும் கிடையாது.

பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதும் கிடையாது.


அவர்களுக்கு குடும்பத்தைப் பற்றிய அக்கறையும் கிடையாது

மானம்  மரியாதைப் பற்றிய கவலையும் கிடையாது.


அவர்களுக்கு அவர்கள் காதல் தான் முக்கியம்

காதல் செய்வது தான் முக்கியம்


அதற்காக அவர்கள் எந்த ஒரு எல்லைக்கும் போவார்கள்.


ஆனால் பெண்கள் அப்படி இல்லை.


பெண்கள் தங்கள் காதலை சீக்கிரத்தில் வெளிப்படுத்த மாட்டார்கள்.

உடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் கிடையாது.


பெண்களுக்கு சமூகக் கட்டுப்பாடும் உண்டு. 

சமூகத்தைப் பற்றிய பயமும் உண்டு.


எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் உண்டு.

பின்விளைவுகளைப் பற்றிய கவலையும் உண்டு


பெண்கள் காதலா குடும்பமா என்ற நிலை வரும் போதும்

காதலா மானமா என்று நிலை வரும் போதும்

காதலா மரியாதையா என்ற நிலை வரும் போதும்

பெண்கள் காதலைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்

குடும்பம் மானம் மரியாதையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்


அர்ஜுனன் : ஆண்களுக்கு காதல் தான் முக்கியம். குடும்பம், மானம், மரியாதை முக்கியமில்லை என்று சொல்ல வருகிறீர்களா


சித்திராங்கதை : அதை நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது. இலக்கியங்கள் சொல்கிறது.


அர்ஜுனன் : நீங்கள் இன்னும் காதலைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. 


காதலைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் காதலிக்கும் ஆண்களைப்பற்றித் தவறாகப் பேசுகிறீர்கள். காதலில் இருந்து ஆண்களைத் தனியாகப் பிரித்து பேசுகிறீர்கள் 


காதலுக்குள் பிளவை ஏற்படுத்தி பார்க்கிறீர்கள்

காதல் செய்யும் ஆணையும், பெண்ணையும் வேறுபடுத்தி பார்க்கிறீர்கள்.


ஆண் செய்யும் காதலை தவறு என்றும்,

பெண் செய்யும் காதலை சரி என்றும் பார்க்கிறீர்கள்


காதல் செய்யும் ஆண்களே தவறானவர்கள் என்ற சிந்தனையில் பார்க்கிறீர்கள் 


காதலில் உங்கள் கண்ணோட்டம் தவறாக இருக்கிறது

காதலை  தவறான கண்ணோட்டத்தில் சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.


ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்வது தான் காதல். 

ஆண் மட்டும் தனியாகவோ பெண் மட்டும் தனியாகவோ செய்வது காதல் கிடையாது.


இரண்டு பேர் சேர்ந்து செய்யும் போது உண்டாவது தான் காதல்.

ஒருவர் மட்டும் தனியாகச் செய்தால் அதற்கு பெயர் காதல் கிடையாது


காதல் செய்யும் போது உண்டாகும் உணர்வுகள் என்பது

இரண்டு பேருக்கும் பொதுவானது.


காதல் என்பது உண்டாகி விட்டால்

உண்டாகும் இன்பங்களும், துன்பங்களும் இரண்டு பேருக்கும் பொதுவானது


காதல் என்பது உண்டாகி விட்டால்

எடுக்கும் எந்த ஒரு முடிவும் இரண்டு பேருக்கும் பொதுவானது


காதல் என்பது உண்டாகி விட்டால்

உண்டாகும் எண்ணமும் இரண்டு பேருக்கும் பொதுவானது.


காதலை நேசிப்பவர்கள்,

காதலை சுவாசிப்பவர்கள்,

காதலை கடவுளாய் வணங்குபவர்கள்,

காதலின் புனிதத் தன்மையை உணர்ந்தவர்கள்,

காதலாகவே வாழ்பவர்கள்

அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி 

இரண்டு விதமான எண்ணங்களைக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

ஒரே விதமான எண்ணங்களைக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள்.


காதல் சாதி பார்க்காது

காதல் மதம் பார்க்காது

காதல் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு பார்க்காது

காதல் உயர்வு தாழ்வு என்ற மனப்பான்மை பார்க்காது


காதல் ஒன்றே ஒன்றைத் தான் பார்க்கும்

காதல் காதலைத் தான் பார்க்கும்.



-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1036 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-14

 ஜபம்-பதிவு-1036

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-14


பெண் பார்க்கும் போது கூட

வெள்ளை நிறத்தில் அழகாக இருக்கக் கூடிய பெண் தான் வேண்டும் 

என்று வெள்ளை நிறத்தை அழகுடன் சம்பத்துப் படுத்துவதிலிருந்து

வெள்ளை நிறத்தை அழகான நிறமாகவும்,

கறுப்பு நிறத்தை அழகற்ற நிறமாகவும் கருதுகிறார்கள்


வெள்ளை நிறம் என்பது உயர்வானது என்றும்

கறுப்பு நிறம் என்பது தாழ்வானது என்றும்,


வெள்ளை நிறம் என்பது அழகானது என்றும்

கறுப்பு நிறம் என்பது அழகானது இல்லை என்றும்

மக்கள் நினைத்துக் கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.


இந்த தவறான கருத்தே மக்களை மக்களாக

இருக்க விடாமல் விலங்கு நிலையில் ஆக்கி வைத்திருக்கிறது


நிறத்தின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டுவதும்

அழகானது மற்றும் அழகானது இல்லை என்ற 

வேறுபாட்டைக் கொண்டு இருப்பதும் மனித இனம் மட்டும் தான்


தாழ்வான ஒன்றை உயர்வானதாகவும்,

உயர்வான ஒன்றை தாழ்வானதாகவும்

இந்த சமுதாயத்தில் உண்டாக்கி வைத்ததிலிருந்து

ஆதிக்க சமுதாயம் எப்படி ஆதிக்க மனப்பான்மையுடன் 

நடந்து கொண்டிருக்கிறது என்பதையும்

ஆதிக்க சமுதாயம் நினைத்தால் 

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கெட்ட விஷயமாகவும்,

எந்த ஒரு கெட்ட விஷத்தையும் நல்ல விஷயமாகவும் மாற்றி 

இந்த சமுதாயத்தில் மக்களைப் பின்பற்ற வைக்க முடியும்

என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                        


சித்திராங்கதை : நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்?


அர்ஜுனன் : நான் சாதாரணமானவன். வட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். 

பிழைப்பு தேடி வந்திருக்கிறேன்.


சித்திராங்கதை : நீங்கள் சொல்வது பொய். 

நீங்கள் சாதாரணமானவரக இருக்க முடியாது.


நீங்கள் பேசிய பேச்சுக்கள், பேசும் போது வெளிப்பட்ட கருத்துக்கள், கருத்துக்களில் உள்ள ஆழமான சிந்தனைத் திறன் ஆகியவற்றைப் பார்க்கும் போது நீங்கள் சாதாரணமானவராக இருக்க முடியாது. 


நான் பேசிய பேச்சு, செய்த செயல், ஆகியவற்றை வைத்து என்னை முழுமையாக அலசி ஆராய்ந்து நான் இளவரசி என்று தெரிந்து கொண்டு சொன்னீர்கள். 


நான் இளவரசி என்று தெரிந்தும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், என்னை வர்ணித்தீர்கள், என் அழகைப் போற்றினீர்கள், காதல் வார்த்தைகளைப் பேசினீர்கள், என்னைப் பற்றி கவிதையாக்கி கொட்டினீர்கள், உங்கள் காதலை வெளிப்படுத்தினீர்கள். 


இதையெல்லாம் செய்வதற்கு தைரியமும், எதிர்ப்பு வந்தால் எதையும் சமாளிக்கும் வீரமும் வேண்டும். அந்த தைரியம் வீரமும் சாதாரண மக்களுக்கு வராது.  

எனவே, நீங்கள் கண்டிப்பாக சாதரணமானவராகவே இருக்க முடியாது. 


அரச குலத்தில் பிறந்தவராகத் தான் இருக்க முடியும். 

நீங்கள் ஒரு இளவரசராகத் தான் இருக்க முடியும்.


உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் யார்.


(அர்ஜுனன் சிரிக்கிறான்)


நீங்கள் சிரிப்பதைப் பார்த்தால் 

நீங்கள் அரச குலத்தில் பிறந்தவர் தான் என்பதையும்,

நீங்கள் ஒரு நாட்டின் இளவரசர் தான் என்பதையும்,

நான் கண்டு பிடித்து விட்டேன் என்பதற்காகத் தானே சிரிக்கிறீர்கள்

உங்கள் சிரிப்புக்கு இது தானே அர்த்தம்


அர்ஜுனன் : சிரிப்புக்கும் அர்த்தம் இருக்கிறதா என்ன?


சித்திராங்கதை :  ஆமாம் இந்த உலகத்தில் மனிதன் சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்புக்கும் அர்த்தம் இருக்கிறது


ஏழையின் சிரிப்பு பசியின் குமுறல்

பணக்காரனின் சிரிப்பு இன்பத்தின் வெளிப்யாடு

அரசனின் சிரிப்பு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது

மக்களின் சிரிப்பு அரசன் நல்லாட்சி நடத்தும் போது

அறிஞனின் சிரிப்பு தத்துவத்தின் ஆரம்பம்

கண்டுபிடிப்பாளரின் சிரிப்பு கண்டுபிடிப்பின் முடிவில்

கவிஞனின் சிரிப்பு கவிதை பிறந்து விட்டதில்

ஓவியனின் சிரிப்பு ஓவியம் முடிந்து விட்டதில்

சிற்பியின் சிரிப்பு சிலை உயிர் பெற்று விட்டதில்

வேலை இல்லாதவனின் சிரிப்பு வேலை கிடைத்து விட்டதில்

திருடனின் சிரிப்பு விலையுள்ள பொருளை திருடி விட்டதில்

மருத்துவரின் சிரிப்பு நோயாளி பிழைத்து விட்டதில்,

தந்தையின் சிரிப்பு சுற்றத்தார் வாழ்த்தும் போது

தாயின் சிரிப்பு தான் பெற்ற மழலையைக் காணும் போது

மழலையின் சிரிப்பு புதிய பொருளைக் காணும் போது

கணவனின் சிரிப்பு மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் போது

மனைவியின் சிரிப்பு கணவன் மகிழ்ச்சியாக இருக்கும் போது

ஆணின் சிரிப்பு பெண்ணை மயக்குவதில்

பெண்ணின் சிரிப்பு ஆணை மயக்கி விட்டதில்

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சிரிக்கிறார்கள்

அவர்கள் சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்புக்கும் அர்த்தம் இருக்கிறது


என் சிரிப்பின் அர்த்தம் தெரிந்த நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை சொல்லாமல் மறைக்கிறீர்கள்


(சித்திராங்கதை சிரிக்கிறாள்)


நீங்கள் சிரிக்கும் இந்த சிரிப்புக்கு நீங்கள் என்னை காதலிக்கிறீர்கள் என்ற அர்த்தத்தை எடுத்துக் கொள்ளலாமா?


-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1035 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-13

 ஜபம்-பதிவு-1035

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-13


காதலும், காமமும் பிரிக்க முடியாதவை என்பதைப் புரிந்து கொண்டால்

வாழ்க்கை சிறப்பாக இருக்கும்


காதலையும், காமத்தையும் புரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையை வாழ்க்கையாக வாழுங்கள்


வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் கிடையாது போராடிப் பார்ப்பதற்கு

வாழ்க்கை என்பது ஒரு பூந்தோட்டம் அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்


வாழ்க்கை உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது

நீங்கள் தான் அதை எடுக்க முயற்சி செய்யவில்லை


வாழ்க்கை கொடுக்கக் காத்திருக்கும் இன்பங்களை 

வாங்க முயற்சி செய்யுங்கள் அதை ஒதுக்கி விடாதீர்கள்


வாழ்க்கை தரும் இன்பங்களை விட்டு விட்டு

வாழ்க்கை தரும் இன்பம் சுவையா 

போர்க்களம் தரும் இன்பம் சுவையா என்பதை 

ஆராய்ச்சி செய்வதை விட்டு விடுங்கள்


போர்க்களத்தில் வீரம் இன்பம் என்றால் 

வாழ்க்கையில் காதலும், காமமும் இன்பம்

போர்க்களத்தை கண்ட நீங்கள் 

வாழ்க்கையைக் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள் 


வாழ்க்கையின் இன்பத்தின் கதவைத் தட்டுங்கள்

அது உங்களுக்கு இன்பத்தை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது


சித்திராங்கதை :  வெள்ளை நிறத்தில் இருந்தால் மட்டும் தான் ஒரு பெண் அழகு என்று ஏற்றுக் கொள்வீர்களா?


கருப்பு நிறத்தில் இருந்தால் ஒரு பெண் அழகு என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?


அர்ஜுனன் : நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று தான் சொன்னேனே தவிர, நீங்கள் வெள்ளை நிறமாக இருக்கின்ற காரணத்தினால் தான் அழகாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்லவேயில்லையே.


அழகுக்கும் நிறத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

சம்பந்தம் இல்லாத ஒன்றை சம்பந்தப்படுத்தி வைத்து விட்டது இந்த சமுதாயம்


எதை சம்பந்தப்படுத்தி வைக்க வேண்டுமோ அதை சம்பந்தப்படுத்தி வைக்காமல்

எதை சம்பந்தப்படுத்தி வைக்கக் கூடாதோ அதை சம்பந்தப்படுத்தி வைத்து விட்டனர்.


பணம் பதவி அதிகாரம் படைத்த ஆதிக்க சமுதாய மனப்பான்மை கொண்டவர்கள் 

வெள்ளை நிறம் அழகு, கறுப்பு நிறம் அழகு இல்லை என்ற 

விஷக் கருத்தை உருவாக்கி 

அந்த விஷத்தை மக்கள் மனதில் விதைத்து 

மக்களை கொடிய விஷயமாகவே மாற்றி விட்டனர். 


இதனால், வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்றும்

கறுப்பு நிறத்தில் இருப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும்

மக்கள் மத்தியில் பிரிவினை என்பது ஏற்பட்டு விட்டது


இதனால், வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் கறுப்பு நிறத்தில் இருப்பவர்களை

அடிமைகளாக நடத்தும் நிலையும் இந்த சமுதாயத்தில் உருவாகி விட்டது


இதனால், வெள்ளை நிறத்தில் இருப்பவர்களுக்கு 

தாங்கள் அழகாக இருக்கிறோம் என்ற ஆணவமும்,

கறுப்பு நிறத்தில் இருப்பவர்களுக்கு 

தாங்கள் அழகு இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் 

ஏற்பட்டு விட்டது.


சமாதானத்திற்கு வெள்ளை நிறத்தையும்

துக்க நிகழ்வுகளுக்கு கறுப்பு நிறத்தையும் பயன்படுத்துவதிலிருந்து

கறுப்பு நிறத்தை தாழ்வானதாகவும்,

வெள்ளை நிறத்தை உயர்வானதாகவும்,

இந்த சமுதாயம் அங்கீகரித்து வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்


உடலில் உள்ள ஒரு சுரப்பியிலிருந்து சுரக்கும் ஒரு வகை திரவத்தைப் பொறுத்தே

மனிதர்களுக்கு வெள்ளை நிறமும், கறுப்பு நிறமும் ஏற்படுகிறது


இந்த சுரப்பி குறைவாக திரவத்தை சுரந்தால் வெள்ளை நிறத்தில் இருப்பார்கள்

இந்த சுரப்பி அதிகமாக திரவத்தை சுரந்தால் கறுப்பு நிறத்தில் இருப்பார்கள்


சுரப்பியிலிருந்து திரவம் அதிகமாக சுரப்பதால் கறுப்பு நிறத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்

சுரப்பியிலிருந்து திரவம் குறைவாக சுரப்பதால் வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க மாட்டார்கள்


அதனால் ஆரோக்கியத்தின் நிறம் கறுப்பு தான் என்பதை உறுதியாக சொல்லலாம் 


வெள்ளை நிறத்தில் உள்ள குதிரை, பூனை, சிறுத்தை, நாய் ஆகியவற்றை விட

கறுப்பு குதிரை, கறுப்பு பூனை, கருஞ்சிறுத்தை, கறுப்பு நாய் ஆகியவை 

வலிமையானதாகவும், அழகாகவும் இருக்கும் 


பல்வேறு நிலைகளில் இருந்து ஆராய்ந்து பார்த்தால்

வெள்ளை நிறம் தாழ்வானது கறுப்பு நிறம் உயர்வானது

ஆனால்,

தாழ்வான வெள்ளை நிறத்தை உயர்வான நிறமாக வைத்து விட்டனர்

உயர்வான கறுப்பு நிறத்தை தாழ்வான நிறமாக வைத்து விட்டனர்


வெள்ளை நிறம் உயர்ந்தது கறுப்பு நிறம் தாழ்ந்தது 

என்ற கருத்து சமுதாயத்தில் நிலவுவதால்

வெள்ளை நிறத்தில் உள்ளவர்கள் மனதில் 

அதிக அளவு தன்னம்பிக்கையும்,

கறுப்பு நிறத்தில் உள்ளவர்கள் மனதில்

தன்னம்பிக்கை இல்லாத ஒரு நிலையையும் ஏற்படுத்தி விட்டது.


வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணை ஒரு ஆண் காதலித்தால் 

நீ காதலிக்கும் பெண் அழகாக இருக்கிறாள் என்றும்,

கறுப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணை ஒரு ஆண் காதலித்தால்

இந்த பெண்ணையா காதலித்தாய்

காதலிக்க வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என்று

சொல்லும் நிலை தான் இந்த சமுதாயத்தில் உள்ளது


-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1034 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-12

 ஜபம்-பதிவு-1034

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-12


உங்கள் பார்வையில் காதல் இருக்கிறது

ஆனால் காமத்தை அதற்குள் மறைத்து வைத்திருக்கிறீர்கள்


வெளிப்படுத்த முடியாத காமத்தை

கட்டுப்பாடுகள் என்ற விலங்கால் பூட்டி வைத்திருக்கிறீர்கள்


தான் எதிர்ப்பார்த்தவர் கிடைத்தும் 

தன் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கிறீர்கள்


உங்களுக்குரியவரை விடை தேட முடியாத கேள்வியுடன் 

தேடிக் கொண்டே இருக்கிறீர்கள்.


வீரத்தை வெளிப்படுத்த தெரிந்தும்

காதலை வெளிப்படுத்தத் தெரியாத நிலையில் இருக்கிறீர்கள்.


இளவரசி என்பதால் மனதில் உள்ளதை

உள்ளவாறு வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக் கைதியாக இருக்கிறீரகள்.


சமுதாயத்திற்கு பயந்து ஆசைகளை கொன்ற மனதுடன் 

முடிவு தெரியாத பயணத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள்.


பணம், அதிகாரம், பதவி ஆகியவற்றால்

உங்களைச் சுற்றி நீங்களே கட்டி வைத்திருக்கும் மாயவலை

உங்கள் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறது.


எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் 

உங்கள் சிந்தனையைத் தூண்டி 

உங்களைச் செயல்ளைச் செய்ய வைத்துக் கொண்டே இருக்கிறது 


எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் 

உங்கள் திறமையை நீங்கள் வெளிப்படுத்தும்  நிலையிலேயே இருக்கிறீர்கள்.


தன்னலத்தை பெரிதெனக் கருதாமல்,

பொதுநலமே உயர்வெனக் கருதி

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்

உங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறீர்கள்


பாண்டிய நாட்டுக்காகவும்,

பாண்டிய நாட்டு மக்களுக்காகவும் 

வாழ்ந்து கொண்டு இருக்கும் நீங்கள் 

தியாகத்துக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

மிகப் பெரிய தியாகச் செம்மலாகத் திகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்,


இந்தக் காரணங்கள் போதாதா நீங்கள் ஒரு இளவரசி என்பதைத் தெரிவிக்க.

நீங்கள் இளவரசி தான் பாண்டிய நாட்டு மன்னன் சித்திரவாகனன் மகள் 

சித்திராங்கதை தான் 


சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

 

காதலும், காமமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

அவைகளை ஏன் பிரிக்க முயற்சி செய்கிறீர்கள்

அவைகளிலிருந்து விலகி ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்

ஏன் உங்களையே  தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள்


ஆசைகளை அடக்கக் கூடாது அறிய வேண்டும்

ஆசைகளை அறிந்தால் மட்டுமே காமத்தை அறிய முடியும்

காமத்தை அறிய வேண்டுமானால் ஆசையை அறிந்து தான் ஆக வேண்டும்


ஆசைகளை முறைப்படுத்தும் போது தான் காமத்தை முறைப்படுத்த முடியும்

ஆசைகளை முறைப்படுத்தாமல் காமத்தை முறைப்படுத்த முடியாது


ஆசைக்கும், காமத்துக்கும் உள்ள தொடர்பை உணர்ந்து கொண்டால் மட்டுமே

காதலுக்கும் காமத்துக்கும் உள்ள தொடர்பை உணர்ந்து கொள்ள முடியும்


ஆசை, காதல், காமம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது

என்பதை உணர்ந்து கொண்டால்

ஆசையிலிருந்து பிறக்கும் காதலையும்,

காதலுக்குள் இருக்கும் காமத்தையும்

காமத்துக்குள் இருக்கும் காதலையும் உணர்ந்து கொள்ள முடியும்


அதனால் முதலில் ஆசையை அறிந்து கொள்ள வேண்டும்

ஆசையை அறிந்து கொண்டால் காதலையும், காமத்தையும் அறிய முடியும்

ஆசையை அறிய முடியாதவனால் காதலையும், காமத்தையும் அறிய முடியாது


காதலையும், காமத்தையும் பிரிக்க முடியாது

ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து இருப்பதை

பிரிக்க முடியாமல் ஒன்று பட்டு இருப்பதை எப்படி பிரிக்க முடியும்


உண்மையான காதல் கொண்டவர்களால் மட்டுமே 

காதலுக்குள் காமம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்


தூய்மையான காமம் கொண்டவர்களால் மட்டுமே

காமத்திற்குள் காதல் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்


காதலுக்கு வெளியிலும், காமத்துக்கு வெளியிலும் இருந்து கொண்டு 

காதலையும், காமத்தையும் விமர்சிப்பவர்களால் 

காதலையும், காமத்தையும் புரிந்து கொள்ள முடியாது


ஒன்றை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டுமானால் 

அதுவாகவே மாற வேண்டும்

காதலாக மாறினால் மட்டுமே காமத்தையும்,

காமமாக மாறினால் மட்டுமே காதலையும் புரிந்து கொள்ள முடியும்


-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1033 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-11

 ஜபம்-பதிவு-1033

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-11


(அர்ஜுனன் பாண்டிய நாட்டிற்குள் நடந்து சென்று கொண்டிருக்கிறான். ஒரு புலி அவனைத் தாக்க வருகிறது. வரிசையாக வந்த அம்பு அந்த புலியின் மேல் பாய, புலி பலத்த காயங்களுடன் கீழே விழுகிறது. காயங்களுடன் விழுந்த புலி மீண்டும் அர்ஜுனனைத் தாக்க அவன் மேல் பாய்கிறது. சித்திராங்கதை அந்த புலியுடன் சண்டையிட்டு தன்னுடைய வாளால் அந்த புலியைக் கொன்று விடுகிறாள்.)

சித்திராங்கதை : பாதுகாப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு வர வேண்டாமா ?

அர்ஜுனன் : தெரிந்து கொண்டு தான் வந்தேன்.


நல்லோர்கள் என்று சொல்லப்படக்கூடிய 

பாண்டியர்கள் ஆட்சி செய்யும் பாண்டிய நாட்டில்

இரவிலும் பெண்கள் தனியாக, சுதந்திரமாக,

எந்த ஒரு துணையும் இன்றி,

யாருடைய பாதுகாப்பும் இன்றி,

பயமின்றி செல்லலாம் என்று 

பாண்டிய நாட்டின் சிறப்பைப் பற்றி

வரலாறு சொல்கிறது


இத்தகைய சிறப்புகளைப் பெற்ற பாண்டிய நாட்டில்

பெண்களுக்கே இவ்வளவு பாதுகாப்பு இருக்கும் என்றால்,

முதியவர்கள், சிறியவர்கள், வணிகர்கள், வழிப்போக்கர்கள்

ஆகிய அனைவருக்கும் பாதுகாப்பு நிச்சயமாக இருக்கும் என்ற காரணத்தால் தான்

நான் காலம், நேரம் பார்க்காமல் பாண்டிய நாட்டிற்குள் வந்தேன்.


சித்திராங்கதை : அனைத்தும் சரிதான். ஆனால், அடர்ந்த காட்டிற்குள் பிரவேசிக்கும் போது கொடிய விலங்குகள் தாக்கினால் என்ன செய்வது என்பதை யோசிக்காமல் வந்து விட்டீர்களே?


அர்ஜுனன் : அதனால் தான் பாண்டியர்கள் ஆட்சி செய்யும் பாண்டிய நாட்டில் 

புள்ளிமான் கூட புலியை வேட்டையாடும் என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.


சித்திராங்கதை : யாரிடம் பேசுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்.


அர்ஜுனன் : தெரிந்து தான் பேசுகிறேன்.

நீங்கள் இளவரசி என்பதைத் தெரிந்து கொண்டு தான் பேசுகிறேன். 

பாண்டிய நாட்டின் மன்னன் சித்திரவாகனன் மகள் சித்திராங்கதை என்பதைத் தெரிந்து கொண்டு தான் பேசுகிறேன். 


சித்திராங்கதை : எப்படி தெரிந்து கொண்டீர்கள்.


அர்ஜுனன் : புலியின் மீது அம்பை செலுத்திய போது

உங்கள் வேகம் தெரிந்தது.


புலியுடன் சண்டையிட்ட போது 

உங்கள் வீரம் தெரிந்தது


உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த புலியை தடவிக் கொடுத்த போது

உங்கள் அன்பு தெரிந்தது


இறந்த புலியைக் கண்டு நீங்கள் கண்ணீர் சிந்திய போது

உங்கள் கருணை தெரிந்தது


நீங்கள் நடந்து சென்ற போது 

உங்கள் கம்பீரம் தெரிந்தது.


நீங்கள் பேசும் போது தான் உலகத்திலேயே 

இனிமையான மொழி தமிழ் மொழி என்று தெரிந்தது


வெண்ணிலவில் ஒளியெடுத்து,

விண்மீனில் துளியெடுத்து,

பொன்குழம்பை வார்த்தெடுத்து,

வைரத்தில் தோய்த்தெடுத்து,

நவரத்தினங்களால் செதுக்கியெடுத்து,

உருவாக்கப்பட்ட சிலையில்

மல்லிகை மணமெடுத்து,

ரோஜா அழகெடுத்து,

மா, பலா, வாழை முக்கனி சுவை சேர்த்தெடுத்து,

சந்தனத்தின் மணத்தைக் குழைத்தெடுத்து

கரும்பின் வாசனையையும்,

ஜவ்வாதின் வாசனையையும் கலந்தெடுத்து,

அகிற்புகையை அதில் செலுத்தி,

உண்டான கலவையை 

அதில் இழைத்து 

படைக்கப்பட்ட பிரம்மனின் அதிசய படைப்பாக,

அதிசயமே ஆச்சரியப்படும் அதிசயமாக,

வெள்ளை நிறம் கொண்ட சிலையென,

யாராலும் தீட்ட முடியாத ஓவியமென,

காலத்தைக் கடந்து நிற்கும் கவிதையென

தீர்க்கமான பார்வை

தெளிவான சிந்தனை

எதையும் தாங்கும் இதயம்

எது வந்தாலும் சமாளிக்கும் திறமை

யாருக்கும் எதற்கும் அஞ்சாத தைரியம்

கொண்ட தனித்துவம் கொண்ட பெண்ணாக

அழகு மங்கையாக காட்சியளித்துக் கொண்டு இருக்கிறீர்கள்



-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

March 05, 2025

சார்லஸ் டார்வின்

 குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை

குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு உயிரினம் இருக்கிறது
அதாவது விலங்குக்கும், மனிதனுக்கும் இடையில் ஒரு உயிரினம் இருக்கிறது
அதனால் தான் சொல்கிறோம் சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் பரிணாமக் கோட்பாடு தவறு