March 11, 2025

ஜபம்-பதிவு-1036 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-14

 ஜபம்-பதிவு-1036

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-14


பெண் பார்க்கும் போது கூட

வெள்ளை நிறத்தில் அழகாக இருக்கக் கூடிய பெண் தான் வேண்டும் 

என்று வெள்ளை நிறத்தை அழகுடன் சம்பத்துப் படுத்துவதிலிருந்து

வெள்ளை நிறத்தை அழகான நிறமாகவும்,

கறுப்பு நிறத்தை அழகற்ற நிறமாகவும் கருதுகிறார்கள்


வெள்ளை நிறம் என்பது உயர்வானது என்றும்

கறுப்பு நிறம் என்பது தாழ்வானது என்றும்,


வெள்ளை நிறம் என்பது அழகானது என்றும்

கறுப்பு நிறம் என்பது அழகானது இல்லை என்றும்

மக்கள் நினைத்துக் கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.


இந்த தவறான கருத்தே மக்களை மக்களாக

இருக்க விடாமல் விலங்கு நிலையில் ஆக்கி வைத்திருக்கிறது


நிறத்தின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டுவதும்

அழகானது மற்றும் அழகானது இல்லை என்ற 

வேறுபாட்டைக் கொண்டு இருப்பதும் மனித இனம் மட்டும் தான்


தாழ்வான ஒன்றை உயர்வானதாகவும்,

உயர்வான ஒன்றை தாழ்வானதாகவும்

இந்த சமுதாயத்தில் உண்டாக்கி வைத்ததிலிருந்து

ஆதிக்க சமுதாயம் எப்படி ஆதிக்க மனப்பான்மையுடன் 

நடந்து கொண்டிருக்கிறது என்பதையும்

ஆதிக்க சமுதாயம் நினைத்தால் 

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கெட்ட விஷயமாகவும்,

எந்த ஒரு கெட்ட விஷத்தையும் நல்ல விஷயமாகவும் மாற்றி 

இந்த சமுதாயத்தில் மக்களைப் பின்பற்ற வைக்க முடியும்

என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                        


சித்திராங்கதை : நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்?


அர்ஜுனன் : நான் சாதாரணமானவன். வட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். 

பிழைப்பு தேடி வந்திருக்கிறேன்.


சித்திராங்கதை : நீங்கள் சொல்வது பொய். 

நீங்கள் சாதாரணமானவரக இருக்க முடியாது.


நீங்கள் பேசிய பேச்சுக்கள், பேசும் போது வெளிப்பட்ட கருத்துக்கள், கருத்துக்களில் உள்ள ஆழமான சிந்தனைத் திறன் ஆகியவற்றைப் பார்க்கும் போது நீங்கள் சாதாரணமானவராக இருக்க முடியாது. 


நான் பேசிய பேச்சு, செய்த செயல், ஆகியவற்றை வைத்து என்னை முழுமையாக அலசி ஆராய்ந்து நான் இளவரசி என்று தெரிந்து கொண்டு சொன்னீர்கள். 


நான் இளவரசி என்று தெரிந்தும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், என்னை வர்ணித்தீர்கள், என் அழகைப் போற்றினீர்கள், காதல் வார்த்தைகளைப் பேசினீர்கள், என்னைப் பற்றி கவிதையாக்கி கொட்டினீர்கள், உங்கள் காதலை வெளிப்படுத்தினீர்கள். 


இதையெல்லாம் செய்வதற்கு தைரியமும், எதிர்ப்பு வந்தால் எதையும் சமாளிக்கும் வீரமும் வேண்டும். அந்த தைரியம் வீரமும் சாதாரண மக்களுக்கு வராது.  

எனவே, நீங்கள் கண்டிப்பாக சாதரணமானவராகவே இருக்க முடியாது. 


அரச குலத்தில் பிறந்தவராகத் தான் இருக்க முடியும். 

நீங்கள் ஒரு இளவரசராகத் தான் இருக்க முடியும்.


உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் யார்.


(அர்ஜுனன் சிரிக்கிறான்)


நீங்கள் சிரிப்பதைப் பார்த்தால் 

நீங்கள் அரச குலத்தில் பிறந்தவர் தான் என்பதையும்,

நீங்கள் ஒரு நாட்டின் இளவரசர் தான் என்பதையும்,

நான் கண்டு பிடித்து விட்டேன் என்பதற்காகத் தானே சிரிக்கிறீர்கள்

உங்கள் சிரிப்புக்கு இது தானே அர்த்தம்


அர்ஜுனன் : சிரிப்புக்கும் அர்த்தம் இருக்கிறதா என்ன?


சித்திராங்கதை :  ஆமாம் இந்த உலகத்தில் மனிதன் சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்புக்கும் அர்த்தம் இருக்கிறது


ஏழையின் சிரிப்பு பசியின் குமுறல்

பணக்காரனின் சிரிப்பு இன்பத்தின் வெளிப்யாடு

அரசனின் சிரிப்பு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது

மக்களின் சிரிப்பு அரசன் நல்லாட்சி நடத்தும் போது

அறிஞனின் சிரிப்பு தத்துவத்தின் ஆரம்பம்

கண்டுபிடிப்பாளரின் சிரிப்பு கண்டுபிடிப்பின் முடிவில்

கவிஞனின் சிரிப்பு கவிதை பிறந்து விட்டதில்

ஓவியனின் சிரிப்பு ஓவியம் முடிந்து விட்டதில்

சிற்பியின் சிரிப்பு சிலை உயிர் பெற்று விட்டதில்

வேலை இல்லாதவனின் சிரிப்பு வேலை கிடைத்து விட்டதில்

திருடனின் சிரிப்பு விலையுள்ள பொருளை திருடி விட்டதில்

மருத்துவரின் சிரிப்பு நோயாளி பிழைத்து விட்டதில்,

தந்தையின் சிரிப்பு சுற்றத்தார் வாழ்த்தும் போது

தாயின் சிரிப்பு தான் பெற்ற மழலையைக் காணும் போது

மழலையின் சிரிப்பு புதிய பொருளைக் காணும் போது

கணவனின் சிரிப்பு மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் போது

மனைவியின் சிரிப்பு கணவன் மகிழ்ச்சியாக இருக்கும் போது

ஆணின் சிரிப்பு பெண்ணை மயக்குவதில்

பெண்ணின் சிரிப்பு ஆணை மயக்கி விட்டதில்

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சிரிக்கிறார்கள்

அவர்கள் சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்புக்கும் அர்த்தம் இருக்கிறது


என் சிரிப்பின் அர்த்தம் தெரிந்த நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை சொல்லாமல் மறைக்கிறீர்கள்


(சித்திராங்கதை சிரிக்கிறாள்)


நீங்கள் சிரிக்கும் இந்த சிரிப்புக்கு நீங்கள் என்னை காதலிக்கிறீர்கள் என்ற அர்த்தத்தை எடுத்துக் கொள்ளலாமா?


-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

No comments:

Post a Comment