ஜபம்-பதிவு-1039
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-17
துணைத் தளபதி : யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?
அர்ஜுனன் : உலகத்திலேயே பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் தான் திறமைசாலிகள் அவர்களுடைய திறமைக்கு இணையான ஒற்றர்கள் இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அப்படிப்பட்டவர்களால் கூட
நான் யார்? எங்கிருந்து வருகிறேன் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லையா?
துணைத் தளபதி : பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை
நீ விசாரிக்கப்படும் போது தெரிந்து கொள்வாய்
அர்ஜுனன் : நான் எதற்காக விசாரிக்கப்பட வேண்டும்?
துணைத் தளபதி : ஏனென்றால், இப்போது நீ கைது செய்யப்பட்டு இருக்கிறாய்!
அர்ஜுனன் : நீங்கள் கைது செய்யும் அளவுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்.
துணைத் தளபதி : இளவரசியின் விருப்பம் இல்லாமல் அவரை துரத்திச் சென்று இருக்கிறாய் அதற்காக?
அர்ஜுனன் : இளவரசி சொன்னாரா?
துணைத் தளபதி : நாங்களே பார்த்தோம்.
அர்ஜுனன் : நீதிக்காக உயிர் கொடுத்த பாண்டியர்கள் வாழும் பாண்டிய நாட்டில்
எந்தக் குற்றமும் செய்யாதவனை கைது செய்கிறீர்கள்.
துணைத் தளபதி : நீ குற்றவாளியா இல்லையா என்பது விசாரணையின் முடிவில் தெரியும்.
அர்ஜுனன் : இளவரசியை விசாரிப்பீர்களா?
துணைத் தளபதி : விசாரணையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.
பாண்டிய நாட்டின் நீதிக்கு முன்னால் அரசன், அரசி, இளவரசன், இளவரசி, மக்கள் எல்லோரும் ஒன்று தான். நீதிக்கு முன் அனைவரும் சமமாகத் தான் நடத்தப்படுவார்கள்.
பெண்களை விருப்பம் இல்லாமல் அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கு பாண்டிய நாட்டில் ஒரே தண்டனை தான் அவர்கள் தலை அவர்கள் உடம்பில் இருக்காது என்பதைத் தெரிந்து கொள்.
இவனை விசாரணைக்கு அழைத்து வாருங்கள்.
(என்று சொல்லி விட்டு குதிரையில் ஏறி துணைத் தளபதி சென்று விட்டார் காவலாளிகள் அர்ஜுனனைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.
அர்ஜுனன் கைதியாக பாண்டிய நாட்டிற்குள் அழைத்துச் செல்லப்படுகிறான்.)
-----ஜபம் இன்னும் வரும்
----11-03-2025
////////////////////////////////
No comments:
Post a Comment