March 11, 2025

ஜபம்-பதிவு-1038 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-16

 ஜபம்-பதிவு-1038

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-16


காதல் என்பது உணர்வு மட்டும் கிடையாது. 

உணர்வில் மட்டும் கலந்து இருப்பதற்கு.


காதல் என்பது உயிர். 

அது உயிருடன் கலந்தும் இருக்கும். 

உடலில் உயிர் இருக்கும் வரை காதலும் இருக்கும் 


காதல் என்பது கடவுள். 

காதல் கடவுளாகவும் இருக்கும். 

இந்த உலகத்தில் கடவுள் இருக்கும் வரை காதலும் இருக்கும்


காதல் என்பது புனிதமானது. புனிதத்துடன் தொடர்பு கொண்டது. 

புனிதமாகவே வாழ்ந்து கொண்டிருப்பது.


காதல் என்பது தைரியத்துடன் தொடர்பு கொண்டது


தைரியம் என்பது சுயமாகவும் வெளிப்படும், சூழ்நிலையைப் பொறுத்தும் வெளிப்படும். 

அது எதைப் பொறுத்து வெளிப்படுகிறது என்பது தான் முக்கியம்


தைரியம் என்பது எல்லா சூழ்நிலைகளிலும் வெளிப்படாது


நாம் எதன் மேல் அதிக அன்பாக இருக்கிறோமோ 

அதற்கு பாதிப்பு ஏற்படும் போது தைரியம் என்பது வெளிப்படும்.


எந்த ஒன்றை அடைய விரும்புகிறோமோ 

அதை அடைவதற்கு தைரியம் என்பது வெளிப்படும்

எந்த ஒன்றை இழக்கக் கூடாது என்று நினைக்கிறோமா 

அந்த ஒன்றை இழக்கக் கூடாது என்பதற்காக போராடும் போது 

தைரியம் என்பது வெளிப்படும்.


ஆனால், காதல் மட்டும் தான் இதிலிருந்து வேறுபட்டு நிற்கும்


காதல் நமக்குள் பிறக்கும் போதே தைரியம் வந்து விடும்

காதலை வெளிப்படுத்தும் போதும் தைரியம் வந்து விடும்

காதல் செய்யும் போதும் தைரியம் வந்து விடும்

காதலை இழக்கக் கூடிய நிலை வரும் போது  தைரியம் வந்து விடும்

காதலை தடுப்பவர்களை எதிர்க்கும் போதும் தைரியம் வந்து விடும்

காதலுக்கு தடையாக யார் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு தைரியம் வந்து விடும்

காதலில் வென்று காட்ட வேண்டும் என்று போராடும் போதும் தைரியம் வந்து விடும்

காதலுக்காக உயிரைக் கொடுக்கக் கூடிய நிலை வரும் போதும் தைரியம் வந்து விடும்


ஆகவே, காதலைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணத்தைக் கைவிடுங்கள்

காதல் என்று வந்து விட்டால்

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள்

ஒரே மாதிரி தான் செயல்படுவார்கள்


உங்களுக்கும் காதல் என்பது வந்து விட்டது

ஆனால், அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறீர்கள்


வெளிப்படுத்த இடம், காலம், நேரம், சூழ்நிலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

காலத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்


காதல் என்பது வந்து விட்டால் அதை உடனே வெளிப்படுத்தி விடுங்கள்

ஏனென்றால், காதல் என்பது உயிர்த் தன்மையுள்ளது


உயிர்த்தன்மையுள்ள காதலை வெளிப்படுத்த தாமதம் செய்தால் 

அது தன் உயிர்த் தன்மையை இழந்து விடும்


காதல் தன் உயிர்த் தன்மையை இழப்பதற்கு முன் 

உங்கள் காதலை சொல்லி விடுங்கள்


சித்திராங்கதை :  உடலிலிருந்து உயிர் பிரிந்தால் உடல் தான் அழியுமே தவிர, உயிர் அழியாது.


அப்படி இருக்கும் போது, உயிருடன் இரண்டறக் கலந்து இருக்கும் காதல் மட்டும் எப்படி அழியும். தன் உயிர்த்தன்மையை எப்படி இழக்கும். காதல் எப்போதுமே அழியாது. காதலர்கள் தான் அழிவார்கள்.


உங்கள் பேச்சைக் கேட்டால் காதல் செய்யாதவனும் காதல் செய்வான்

காதல் வேண்டாம் என்பவனும் காதல் வேண்டும் என்பான்


காதலை வெறுப்பவனும் காதல் மேல் காதல் கொள்வான்


ஒரு இளவரசியின் காதல் 

எளிதாக வெளிப்படுத்தக் கூடியதும் அல்ல

எல்லா இடத்திலும் வெளிப்படுத்தக் கூடியதுமல்ல.


நான் என்னுடைய காதலை எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த காலத்தில்,

எந்த சூழ்நிலையில் வெளிப்படுத்த வேண்டுமோ 

அப்போது கண்டிப்பாக வெளிப்படுத்துவேன்


அப்போது நான் சொல்லும் காதல் உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கும்


(என்று சொல்லி விட்டு சித்திராங்கதை குதிரையில் ஏறி செல்கிறார்

அவரை அர்ஜுனன் துரத்திக் கொண்டு செல்கிறான்

அதைப் பார்த்த துணைத் தளபதி மற்றும் காவலர்கள் 

அர்ஜுனனை வளைத்துக் கொள்கின்றனர்

குதிரையிலிருந்து இறங்கும் துணைத் தளபதி அர்ஜுனனை நோக்கி வருகிறார். 

அவர் பேசுகிறார்)



-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

No comments:

Post a Comment