ஜபம்-பதிவு-1037
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-15
சித்திராங்கதை : ஆண்கள் காதலை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.
அவர்களுக்கு சமூக கட்டுப்பாடுகளும் கிடையாது.
சமூகத்தைப் பார்த்து பயமும் கிடையாது.
எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதும் கிடையாது.
பின் விளைவுகளைப் பற்றி சிந்திப்பதும் கிடையாது.
அவர்களுக்கு குடும்பத்தைப் பற்றிய அக்கறையும் கிடையாது
மானம் மரியாதைப் பற்றிய கவலையும் கிடையாது.
அவர்களுக்கு அவர்கள் காதல் தான் முக்கியம்
காதல் செய்வது தான் முக்கியம்
அதற்காக அவர்கள் எந்த ஒரு எல்லைக்கும் போவார்கள்.
ஆனால் பெண்கள் அப்படி இல்லை.
பெண்கள் தங்கள் காதலை சீக்கிரத்தில் வெளிப்படுத்த மாட்டார்கள்.
உடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் கிடையாது.
பெண்களுக்கு சமூகக் கட்டுப்பாடும் உண்டு.
சமூகத்தைப் பற்றிய பயமும் உண்டு.
எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையும் உண்டு.
பின்விளைவுகளைப் பற்றிய கவலையும் உண்டு
பெண்கள் காதலா குடும்பமா என்ற நிலை வரும் போதும்
காதலா மானமா என்று நிலை வரும் போதும்
காதலா மரியாதையா என்ற நிலை வரும் போதும்
பெண்கள் காதலைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள்
குடும்பம் மானம் மரியாதையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள்
அர்ஜுனன் : ஆண்களுக்கு காதல் தான் முக்கியம். குடும்பம், மானம், மரியாதை முக்கியமில்லை என்று சொல்ல வருகிறீர்களா
சித்திராங்கதை : அதை நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது. இலக்கியங்கள் சொல்கிறது.
அர்ஜுனன் : நீங்கள் இன்னும் காதலைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை.
காதலைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் தான் காதலிக்கும் ஆண்களைப்பற்றித் தவறாகப் பேசுகிறீர்கள். காதலில் இருந்து ஆண்களைத் தனியாகப் பிரித்து பேசுகிறீர்கள்
காதலுக்குள் பிளவை ஏற்படுத்தி பார்க்கிறீர்கள்
காதல் செய்யும் ஆணையும், பெண்ணையும் வேறுபடுத்தி பார்க்கிறீர்கள்.
ஆண் செய்யும் காதலை தவறு என்றும்,
பெண் செய்யும் காதலை சரி என்றும் பார்க்கிறீர்கள்
காதல் செய்யும் ஆண்களே தவறானவர்கள் என்ற சிந்தனையில் பார்க்கிறீர்கள்
காதலில் உங்கள் கண்ணோட்டம் தவறாக இருக்கிறது
காதலை தவறான கண்ணோட்டத்தில் சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்வது தான் காதல்.
ஆண் மட்டும் தனியாகவோ பெண் மட்டும் தனியாகவோ செய்வது காதல் கிடையாது.
இரண்டு பேர் சேர்ந்து செய்யும் போது உண்டாவது தான் காதல்.
ஒருவர் மட்டும் தனியாகச் செய்தால் அதற்கு பெயர் காதல் கிடையாது
காதல் செய்யும் போது உண்டாகும் உணர்வுகள் என்பது
இரண்டு பேருக்கும் பொதுவானது.
காதல் என்பது உண்டாகி விட்டால்
உண்டாகும் இன்பங்களும், துன்பங்களும் இரண்டு பேருக்கும் பொதுவானது
காதல் என்பது உண்டாகி விட்டால்
எடுக்கும் எந்த ஒரு முடிவும் இரண்டு பேருக்கும் பொதுவானது
காதல் என்பது உண்டாகி விட்டால்
உண்டாகும் எண்ணமும் இரண்டு பேருக்கும் பொதுவானது.
காதலை நேசிப்பவர்கள்,
காதலை சுவாசிப்பவர்கள்,
காதலை கடவுளாய் வணங்குபவர்கள்,
காதலின் புனிதத் தன்மையை உணர்ந்தவர்கள்,
காதலாகவே வாழ்பவர்கள்
அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி
இரண்டு விதமான எண்ணங்களைக் கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
ஒரே விதமான எண்ணங்களைக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள்.
காதல் சாதி பார்க்காது
காதல் மதம் பார்க்காது
காதல் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு பார்க்காது
காதல் உயர்வு தாழ்வு என்ற மனப்பான்மை பார்க்காது
காதல் ஒன்றே ஒன்றைத் தான் பார்க்கும்
காதல் காதலைத் தான் பார்க்கும்.
-----ஜபம் இன்னும் வரும்
----11-03-2025
////////////////////////////////
No comments:
Post a Comment