March 11, 2025

ஜபம்-பதிவு-1034 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-12

 ஜபம்-பதிவு-1034

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-12


உங்கள் பார்வையில் காதல் இருக்கிறது

ஆனால் காமத்தை அதற்குள் மறைத்து வைத்திருக்கிறீர்கள்


வெளிப்படுத்த முடியாத காமத்தை

கட்டுப்பாடுகள் என்ற விலங்கால் பூட்டி வைத்திருக்கிறீர்கள்


தான் எதிர்ப்பார்த்தவர் கிடைத்தும் 

தன் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாத நிலைமையில் இருக்கிறீர்கள்


உங்களுக்குரியவரை விடை தேட முடியாத கேள்வியுடன் 

தேடிக் கொண்டே இருக்கிறீர்கள்.


வீரத்தை வெளிப்படுத்த தெரிந்தும்

காதலை வெளிப்படுத்தத் தெரியாத நிலையில் இருக்கிறீர்கள்.


இளவரசி என்பதால் மனதில் உள்ளதை

உள்ளவாறு வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக் கைதியாக இருக்கிறீரகள்.


சமுதாயத்திற்கு பயந்து ஆசைகளை கொன்ற மனதுடன் 

முடிவு தெரியாத பயணத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள்.


பணம், அதிகாரம், பதவி ஆகியவற்றால்

உங்களைச் சுற்றி நீங்களே கட்டி வைத்திருக்கும் மாயவலை

உங்கள் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் தடுத்து வைத்திருக்கிறது.


எதையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் 

உங்கள் சிந்தனையைத் தூண்டி 

உங்களைச் செயல்ளைச் செய்ய வைத்துக் கொண்டே இருக்கிறது 


எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் 

உங்கள் திறமையை நீங்கள் வெளிப்படுத்தும்  நிலையிலேயே இருக்கிறீர்கள்.


தன்னலத்தை பெரிதெனக் கருதாமல்,

பொதுநலமே உயர்வெனக் கருதி

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்

உங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறீர்கள்


பாண்டிய நாட்டுக்காகவும்,

பாண்டிய நாட்டு மக்களுக்காகவும் 

வாழ்ந்து கொண்டு இருக்கும் நீங்கள் 

தியாகத்துக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.

மிகப் பெரிய தியாகச் செம்மலாகத் திகழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்,


இந்தக் காரணங்கள் போதாதா நீங்கள் ஒரு இளவரசி என்பதைத் தெரிவிக்க.

நீங்கள் இளவரசி தான் பாண்டிய நாட்டு மன்னன் சித்திரவாகனன் மகள் 

சித்திராங்கதை தான் 


சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

 

காதலும், காமமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

அவைகளை ஏன் பிரிக்க முயற்சி செய்கிறீர்கள்

அவைகளிலிருந்து விலகி ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்

ஏன் உங்களையே  தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள்


ஆசைகளை அடக்கக் கூடாது அறிய வேண்டும்

ஆசைகளை அறிந்தால் மட்டுமே காமத்தை அறிய முடியும்

காமத்தை அறிய வேண்டுமானால் ஆசையை அறிந்து தான் ஆக வேண்டும்


ஆசைகளை முறைப்படுத்தும் போது தான் காமத்தை முறைப்படுத்த முடியும்

ஆசைகளை முறைப்படுத்தாமல் காமத்தை முறைப்படுத்த முடியாது


ஆசைக்கும், காமத்துக்கும் உள்ள தொடர்பை உணர்ந்து கொண்டால் மட்டுமே

காதலுக்கும் காமத்துக்கும் உள்ள தொடர்பை உணர்ந்து கொள்ள முடியும்


ஆசை, காதல், காமம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது

என்பதை உணர்ந்து கொண்டால்

ஆசையிலிருந்து பிறக்கும் காதலையும்,

காதலுக்குள் இருக்கும் காமத்தையும்

காமத்துக்குள் இருக்கும் காதலையும் உணர்ந்து கொள்ள முடியும்


அதனால் முதலில் ஆசையை அறிந்து கொள்ள வேண்டும்

ஆசையை அறிந்து கொண்டால் காதலையும், காமத்தையும் அறிய முடியும்

ஆசையை அறிய முடியாதவனால் காதலையும், காமத்தையும் அறிய முடியாது


காதலையும், காமத்தையும் பிரிக்க முடியாது

ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து இருப்பதை

பிரிக்க முடியாமல் ஒன்று பட்டு இருப்பதை எப்படி பிரிக்க முடியும்


உண்மையான காதல் கொண்டவர்களால் மட்டுமே 

காதலுக்குள் காமம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்


தூய்மையான காமம் கொண்டவர்களால் மட்டுமே

காமத்திற்குள் காதல் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்


காதலுக்கு வெளியிலும், காமத்துக்கு வெளியிலும் இருந்து கொண்டு 

காதலையும், காமத்தையும் விமர்சிப்பவர்களால் 

காதலையும், காமத்தையும் புரிந்து கொள்ள முடியாது


ஒன்றை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டுமானால் 

அதுவாகவே மாற வேண்டும்

காதலாக மாறினால் மட்டுமே காமத்தையும்,

காமமாக மாறினால் மட்டுமே காதலையும் புரிந்து கொள்ள முடியும்


-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

No comments:

Post a Comment