July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-77


               ஜபம்-பதிவு-569
        (அறிய வேண்டியவை-77)

“அவர் சொல்லும்
அறிவுரையில் உள்ள
உண்மைகளைப்
புரிந்து கொண்டு
அதனை
ஏற்றுக் கொண்டு
வாழ்க்கையில்
பின்பற்றிக் கொண்டு
நடக்கிறேன் என்று
உன்னுடைய மகன்
மைத்ரேயர்
முனிவருக்கு வாக்கு
அளிக்க வேண்டும்”

“அவர் சொல்லும்
அறிவுரையில் உள்ள
உண்மைகளைப்
புரிந்து கொள்ளாமல்
ஏற்றுக் கொள்ளாமல்
வாழ்க்கையில்
பின்பற்றி
நடக்க மாட்டேன்
என்று உன்னுடைய
மகன் சொன்னான்
என்றால் முனிவர்
மிகக் கோபப்படுவார் “

“அவர் சொன்ன
உண்மைகளை
ஏற்றுக் கொண்டு
அதனைப் பின்பற்றி
நடக்கிறோம் என்று
அவருக்கு நீங்கள்
வாக்களிக்காவிட்டால்
அவர் கோபத்தின்
உச்சிக்குச் சென்று
உன்னுடைய
மகனுக்கு
சாபம் கொடுப்பார் “

“அவர் கொடுக்கும்
சாபத்தில் இருந்து
தப்பிக்க வேண்டும்
என்றால்
மைத்ரேயர் முனிவர்
சொல்லும்
அறிவுரைகளைக்
கேட்டுக் கொண்டு
ஏற்று நடக்க
வேண்டும்”

“நான்
சொன்னவைகளை
மனதில் நிறுத்தி
செயல்படுங்கள்
அப்படி
செயல்பட்டால்
அனைவருக்கும்
நன்மை பயக்கும்”

“ஒரு சிலர் செய்யும்
செயல்கள்
செய்பவருக்கு
மட்டுமல்ல
அவருக்கும் அவரைச்
சார்ந்தவர்களுக்கும்
நன்மைகளை
உண்டாக்கும் - ஆனால்
ஒரு சிலர்
செய்யும் செயல்கள்
செய்பவருக்கு
மட்டுமல்ல
செய்பவருக்கும்
அவரைச்
சார்ந்தவர்களுக்கும்
நன்மைகளை
உண்டாக்காது
என்பதை மனதில்
கொண்டு
செயல்படுங்கள் “

“தவறான முடிவை
எடுத்து விட்டீர்கள்
என்றால் தவறுக்கான
தண்டனையை
அனுபவிக்கத் தான்
வேண்டும்
தண்டனை பெறாமல்
இருக்க வேண்டுமானால்
தவறு செய்யாமல்
இருக்க வேண்டும்”

“இந்த முக்கியம்
நிறைந்த
விஷயங்களைச்
சொல்வதற்காகவே
நான் இங்கு
வந்தேன்”

“நான் என்னுடைய
கடமையை சரியாக
முடித்து விட்டேன்
நீங்கள் உங்களுடைய
கடமையை சரியாக
செய்வீர்கள் என்று
நினைக்கிறேன்”

“விடை பெறுகிறேன்”

(என்று சொல்லி
விட்டு வியாசர்
அங்கிருந்து அகன்றார்)

//////////////////////////////////////////////
(மைத்ரேயர்
திருதராஷ்டிரனையும்
துரியோதனனையும்
காண்பதற்காக
வருகிறார்
திருதராஷ்டிரன்
தனது மகன்
துரியோதனனுடன்
ஒன்றாகச் சேர்ந்து
முனிவரை
மரியாதையுடன்
வரவேற்றான்)

திருதராஷ்டிரன் :
“முனிவரே
உங்களுடைய வரவால்
என்னுடைய மனம்
குளிர்ந்தது
உங்களுடைய வரவால்
அஸ்தினாபுரம்
பெருமை பெற்றது
எங்களை
ஆசிர்வதியுங்கள் “

மைத்ரேயர்  :
“வளமுடன் வாழ்க “

(முனிவருக்கு
வழங்க வேண்டிய
அனைத்து விதமான
மரியாதைகளையும்
திருதராஷ்டிரனும்
அவருடைய மகனான
துரியோதனனும்
ஒன்றாகச் சேர்ந்து
செய்தார்கள்
அவரை ஒரு
ஆசனத்தில்
அமரச் செய்து
திருதராஷ்டிரன் பேசத்
தொடங்குகிறார்)

திருதராஷ்டிரன் :
“தாங்கள்
எங்கள் நாட்டில்
எழுந்தருளியதும்
எங்களுடைய
அரண்மனையில்
பிரவேசித்ததும்
எங்களுக்கு கிடைத்த
மிகப்பெரிய
பாக்கியமாகவே
கருதுகிறோம்
முனிவரே ! “

“புனிதமானவரே!
குருஜாங்காலத்திலிருந்து
உங்களது பயணம்
இனிமையாக இருந்ததா
பாண்டவர்கள்
ஐவரையும்
சந்தித்தீர்களா
அவர்கள் அனைவரும்
நலமாக
இருக்கிறார்களா ?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment