July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-88


               ஜபம்-பதிவு-580
         (அறிய வேண்டியவை-88)

“வளர்ச்சியடைந்த
எந்த ஒரு
ஆண்மகனும்
ஒரு பெண்
முன்னால்
ஆடைகளின்றி
செல்வது
பாவம் ஆகும்
வளர்ச்சியடைந்த
ஆண் மகனான
நீ - உனக்கு
தாயாக இருக்கும்
பெண் முன்னால்
ஆடைகளின்றி
செல்வது
பாவம் ஆகும்” 

“இந்த பாவத்தைத்
தரக்கூடிய செயலை
நீ செய்தால்  
பாவத்தில்
வீழ்ந்து நரக
வேதனையைத்
தான் அனுபவிப்பாய்”

“இப்போது நீ
அடையும்
துயரங்களை
விட அதிக
அளவில்
துன்பங்களை
அடையக்கூடிய
சூழ்நிலைகள்
உருவாகுவதற்கும்
வாய்ப்பு இருக்கிறது”

“நீ இப்போது
செய்யப் போகும்
செயல் உனக்கு
பாவத்தை
உண்டு பண்ணும்”

(கிருஷ்ணனுடைய
வார்த்தைகளைக்
கேட்டுக்
கொண்டிருந்த
துரியோதனன்
கொஞ்சம்
கொஞ்சமாக
மனம் மாற்றம்
அடைந்தான்
தன் தாய்
சொன்னாலும் தான்
எப்படி பிறந்த
மேனியாக
தன்னுடைய
தாயின் முன்னால்
சென்று எப்படி
நிற்க முடியும்
அது தவறான
செயல் அல்லவா
அது பாவமான
செயல் அல்லவா
கிருஷ்ணன்
சொன்னது போல
இது பாவத்தை
உண்டாக்கும் செயல்
என்பதை
நினைத்துக் கொண்டு
கிருஷ்ணனிடம்
கேட்டான்)

துரியோதனன் :
“இந்த பாவத்திலிருந்து
நான் தப்பிக்க
என்ன செய்ய
வேண்டும் என்று
சொல்லுங்கள்”

கிருஷ்ணன் :
“பாவம் உன்னை
அணுகாமல் இருக்க
வேண்டுமானால்
நான் சொல்பவைகளை
செய் துரியோதனா”

“இந்த தவறான
செயலை நீ
செய்யாமல் இருக்க
வேண்டுமானால் - நான்
சொல்பவைகளை
செய் துரியோதனா”

“உன்னுடைய
தாயின் முன்னால் நீ
பிறந்த மேனியாக
செல்லாமல்
இடுப்பிற்குக் கீழ்
உன் தொடையை
மறைக்கும் வண்ணம்
வாழை இலையை
கட்டிக் கொண்டு
உன்னுடைய தாயின்
முன்னால் போய்
நில் துரியோதனா “

“நீ அவ்வாறு
செய்தால் மட்டுமே
உன்னால்
பாவத்திலிருந்து
தப்பிக்க முடியும்”

“உன்னுடைய தாய்
சொன்னது போல்
பிறந்த
மேனியுடன் சென்று
உன்னுடைய தாயின்
முன்னால் நின்றால்
பாவத்திலிருந்து நீ
தப்பிக்க முடியாது”

“ஆகவே
வாழை இலையை
உன்னுடைய
இடுப்பிற்குக்
கீழ் தொடையை
மறைக்கும்
வகையில்
வாழை
இலையால்
மறைத்துக் கொண்டு
உன்னுடைய
தாயின் முன்னால்
சென்று நில்”

(கிருஷ்ணன் பேசிய
பேச்சைக் கேட்டு
மனம்
குழப்பமடைந்த
துரியோதனன்
அதில் உண்மை
இருக்கிறது என்று
நினைத்து விட்டு
வாழை இலையை
தன்னுடைய
இடுப்பிற்குக் கீ‘ழே
தொடையை
மறைக்கும் வகையில்
வாழை இலையைக்
கட்டிக் கொண்டு
சென்றான்
தன்னுடைய தாய்
காந்தாரி முன்னால்
போய் நின்றான்)

காந்தாரி :
“வந்து விட்டாயா
என் மகனே
என் முன்னால்
வந்து நில்”

(துரியோதனன்
காந்தாரியின் முன்னால்
வந்து நிற்கிறான்)

காந்தாரி :
“நான் என்னுடைய
கண்களை கட்டி
வைத்திருக்கும்
கட்டுக்களை
அவிழ்க்கப் போகிறேன்
என் மகனே”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment