July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-81


               ஜபம்-பதிவு-573
          (அறிய வேண்டியவை-81)

திருதராஷ்டிரன் :
“முனிவரே என்னுடைய
மகன் அறியாமல்
செய்த தவறுக்கு
அவனை மன்னியுங்கள்
துரியோதனன் சார்பாக
நான் உங்களிடம்
மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறேன்
துரியோதனனுக்கு
கொடுத்த சாபத்தைத்
திரும்பப் பெற்றுக்
கொள்ளுங்கள்”

மைத்ரேயர் :
“கொடுத்த சாபம்
கொடுத்தது தான்
கொடுத்த சாபத்தை
திரும்பப் பெற
முடியாது”

திருதராஷ்டிரன் :
“நீங்கள் கொடுத்த
சாபம் துரியோதனனை
பாதிக்காமல் இருக்க
வேண்டுமானால்
என்ன செய்ய
வேண்டும் முனிவரே
அதற்குரிய வழியை
சொல்லுங்கள்”

மைத்ரேயர் :
“நான் கொடுத்த சாபம்
துரியோதனனை
பாதிக்காமல் இருக்க
வேண்டுமானால்
ஒரே ஒரு வழி
தான் இருக்கிறது”

“மன்னா உன்னுடைய
மகன் துரியோதனன்
பாண்டவர்களுடன்
போரிடும்
எண்ணத்தைக்
கைவிட வேண்டும்
பாண்டவர்களுடன்
உன்னுடைய மகன்
சமாதானம் செய்து
கொண்டு சமாதானமாகப்
போக வேண்டும் “

“நான் சொன்னவற்றை
மனதில் கொண்டு
உன்னுடைய மகன்
பின்பற்றி நடந்தான்
என்றால் உன்னுடைய
மகன் துரியோதனனை
நான் கொடுத்த சாபம்
ஒன்றும் செய்யாது”

“நான் சொன்னவற்றை
மனதில் கொண்டு
உன்னுடைய மகன்
பின்பற்றி
நடக்கவில்லை என்றால்
உன்னுடைய மகன்
துரியோதனனுக்கு
நான் கொடுத்த
சாபம் பலிக்கும் “

“இதைத் தவிர
வேறு வழி எதுவும்
கிடையாது மன்னா”

(என்று சொல்லி
விட்டு மைத்ரேயர்
அந்த இடத்தை
விட்டு அகன்று
சென்று விட்டார்)

///////////////////////////////////////////
(கௌரவர்கள்
அவையில் நடைபெற்ற
சூதாட்டத்தில்
பஞ்ச பாண்டவர்கள்
தோற்று தலை
குனிந்து தரையில்
உட்கார்ந்து
கொண்டிருந்தனர்

துச்சாதனன்
திரௌபதியின்
தலை முடியை
பிடித்து இழுத்துக்
கொண்டு வந்து
திரௌபதியை அவை
நடுவே விட்டான்

பலருடைய இழிவு
படுத்தும் சொற்களால்
தாக்கப்பட்டு திரௌபதி
அவமானத்தால்
துடித்துக்
கொண்டிருந்தாள்

இத்தகைய
விரும்பத்தகாத
நிகழ்வுகள்
நடைபெற்றுக்
கொண்டிருந்த
சமயத்தில்
துரியோதனன்
பேசத் தொடங்கினான்)

துரியோதனன் :
“தம்பி துச்சாதனா !

பஞ்ச பாண்டவர்கள்
எனக்கு அடிமைகள்
இவர்களுக்கு
மனைவியாக இருக்கும்
திரௌபதியும்
எனக்கு அடிமை தான்
அந்த அடிமை
திரௌபதியை
ஐவருக்கு மனைவியாக
இருக்கும் திரௌபதியை
என்னுடைய
தொடையின்
மீது உட்கார வை “

திரெளபதி :
“துரியோதனா நீ
எத்தகைய தவறான
வார்த்தைகளை பேசிக்
கொண்டிருக்கிறாய்
என்பது உனக்குத்
தெரியவில்லையா?”

“நீ பேசும்
உன்னுடைய வார்த்தைகள்
எத்தகைய விளைவுகளை
ஏற்படுத்தும் என்பது
உனக்குத்
தெரியவில்லையா ?”

“நான்கு சுவருக்குள்
மனைவியிடம் பேச
வேண்டிய வார்த்தையை
ஒரு குல மகளிடம்
பேசிக் கொண்டிருக்கிறாய்
என்பது உனக்குத்
தெரியவில்லையா?”

“மனைவி உட்கார
வேண்டிய தொடையில்
ஒரு பத்தினி
பெண்ணை உட்காரச்
சொல்லும்
தவறைச் செய்து
கொண்டிருக்கிறோம்
என்பது உனக்குத்
தெரியவில்லையா ?”

“எந்தத் தொடையில்
ஒரு பத்தினி பெண்ணை
உட்காரச் சொன்னாயோ
அந்தத் தொடை
உடைந்து
பறவைகள் கொத்த
அத்தொடை வழியே
உயிர் பிரிந்து
மாண்டு போவாய்
உன்னுடைய
தொடைகள் உடைந்து
அதன் மூலமாகத்
தான் நீ
மாண்டு போவாய்
துரியோதனா”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment