July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-86


              ஜபம்-பதிவு-578
        (அறிய வேண்டியவை-86)

“என் உடல் இந்த
பூமியில் பிணமாக
விழுந்த பின்பு தான்
குருஷேத்திரப்
போர் முடியும்”

காந்தாரி :
“அதர்மச் செயல்
புரிந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்
காந்தாரியின் மகன்கள்
என்று தான்
இந்த உலகம்
சொல்கிறதே தவிர
ஒரு நாளும்
இந்த உலகம் காந்தாரி
கோழைகளைப்
பெற்றெடுத்திருக்கிறாள்
என்று சொன்னதில்லை”

“நான் கோழைகளை
என்னுடைய மகன்களாக
பெற்றெடுக்கவில்லை
மகனே - நான்
வீரம் மிக்க
மகன்களைத் தான்
பெற்றிருக்கிறேன்
எதற்கும் அஞ்சாத
துணிவு மிக்க
மகன்களைத் தான்
பெற்றிருக்கிறேன்
மன தைரியத்தை
இழக்காத
அச்சமில்லாதவர்களைத்
தான் மகன்களாகப்
பெற்றிருக்கிறேன்”

“மகனே இந்தத் தாய்
உன்னைக் காண
வந்தது - உனக்கு
ஒரு உதவியை
செய்யலாம் என்ற
காரணத்தால் தான்
இந்தத் தாயால்
முடிந்த சிறு உதவியை
உனக்கு செய்து விட்டு
போகலாம் என்ற
காரணத்தால் தான்
உன்னைப் பார்ப்பதற்காக
நானே நீ இருக்கும்
இடத்தைத் தேடி நேரில்
வந்தேன் என் மகனே”

“நான் சொல்வதை
எந்த விதமான
மறுப்பும் சொல்லாமல்
தாயின் சொல்லுக்கு
மரியாதை கொடுத்து
நான் சொல்கிற
அனைத்தையும்
பின்பற்றி நான்
சொல்வதைச் செய்”

“நீ அவ்வாறு
செய்தாயானால் நான்
என்னுடைய சக்தியை
உனக்கு பாய்ச்சி
உன்னுடைய உடலை
வஜ்ரமாக மாற்றுவேன்
என்னுடைய சக்தியால்
யாரும் வீழ்த்த முடியாத
வஜ்ர தேகத்தை
உடையவனாக
உன்னை மாற்றுவேன்”

“நான் சொல்வதைக்
கவனமாகக் கேட்பாயாக
என் மகனே - நான்
சொல்வதைச் சிறிதும்
பிழையில்லாமல்
செய்வாயாக
என் மகனே”

துரியோதனன் :
“நான் என்ன
செய்ய வேண்டும்
சொல்லுங்கள் தாயே
தங்களின் உத்தரவிற்காகக்
காத்துக்
கொண்டிருக்கிறேன்”

காந்தாரி :
“முதலில் நீ பக்கத்தில்
உள்ள ஒரு ஆற்றில்
பிறந்த மேனியாக
சுத்தமாகக்
குளித்து விட்டு
அப்படியே உடலில்
எந்த ஒரு ஆடையும்
உடுத்தாமல்
பிறந்த மேனியாக
என் முன்னால்
வந்து நில் - நான்
உனக்கு என்னுடைய
கண்களின் வழியாக
என்னுடைய
புண்ணியப் பதிவுகளை
எல்லாம் ஒரே
சக்தியாக்கி
அந்த சக்தியை
உனக்குப் பாய்ச்சுவேன்
பிறந்த மேனியாக
குளித்து விட்டு
பிறந்த மேனியாகவே
என் முன்னால்
வந்து நில் மகனே “

“நான் சொல்வதைக்
கவனமாகக்
கேட்டாயல்லவா
என் மகனே
நான் சொன்னதைப்
பின்பற்றி எந்தப்
பிழையும் இல்லாமல்
சொன்னதை மட்டுமே
எந்தவிதிமான
மாற்றமும் இல்லாமல்
செய் என் மகனே “

“நாம் இருவரும்
சேர்ந்து செய்யப் போகும்
இந்த செயலின்
ரகசியத்தை யார்
கேட்டாலும்
சொல்லக் கூடாது
ரகசியம் காக்கப்பட
வேண்டும்”

“செல் நான்
உனக்காகக் காத்துக்
கொண்டிருப்பேன்”

(தன்னுடைய தாய்
காந்தாரி
சொன்னவைகளைக்
கேட்டுக் கொண்டு
அதை மனதில்
நிறுத்திய
துரியோதனன்
அருகில் உள்ள
ஒரு குளத்திற்குச்
சென்றான்
பிறந்த மேனியாக
அந்தக் குளத்தில்
சுத்தமாகக் குளித்தான்
பிறந்த மேனியாக
அந்த ஆற்றை
விட்டு எழுந்து வந்து
தன்னுடைய தாயைக்
காண சென்று
கொண்டிருந்தான்
அப்போது அவர்
எதிரே கிருஷ்ணன்
வந்தார்
இந்த காட்சியைக்
காண்டார்)

கிருஷ்ணன் :
“என்ன துரியோதனா
தோல்விக்கு அருகில்
வந்து விட்டோமே
என்ற வேதனை
உன்னை வாட்டியதால்
உன்னுடைய புத்தி
பேதலித்து விட்டதா?”

“தோல்வி பயம்
உன்னை ஆட்
கொண்டு விட்டதால்
பைத்தியமாகி
இப்படி பிறந்த
மேனியாக
சுற்றித் திரிந்து
கொண்டிருக்கிறாயா ?”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////


No comments:

Post a Comment