July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-80


                ஜபம்-பதிவு-572
          (அறிய வேண்டியவை-80)

மைத்ரேயர் :
“துரியோதனா
பெரியவர்களை
மதிக்கத்
தெரியவில்லை
என்றாலும்
பரவாயில்லை
அவர்களை
இழிவுபடுத்தும் விதத்தில்
நடந்து கொள்ளாதே
பெரியவர்களை
அவமதிக்கும் விதத்தில்
நடந்து கொள்ளாதே”

“நான் பேசிய
பேச்சுக்கள் உனக்கு
பிடிக்கவில்லை
என்பது எனக்குப்
புரிகிறது-நான்
சொல்லிய
அறிவுரைகள் நீ
ஏற்றுக்
கொள்ளவில்லை
என்பது எனக்குத்
தெரிகிறது “

“நான் யாருக்கும்
அறிவுரை
சொல்வது இல்லை
யாரும் அறிவுரை
சொன்னால்
ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள் என்ற
காரணத்திற்காகத் தான்
நான் யாருக்கும்
அறிவுரை
சொல்வதில்லை
நான் அறிவுரை
சொல்கிறேன்
என்றால்
அது அனைவருக்கும்
முக்கியத்துவம்
நிரம்பியதாகத்
தான் இருக்கும்
அனைவருக்கும்
நன்மையைத் தரும்
செயலாகத்
தான் இருக்கும்
நான் அறிவுரை
சொல்வதாக இருந்தால்
அது நல்ல
விஷயத்திற்காகத்
தான் இருக்கும்
நன்மையைத் தராத
எதையும் நான்
அறிவுரையாக
யாருக்கும்
தருவதில்லை”

“யாரையும் நான்
பின்பற்ற
வேண்டும் என்று
அறிவுறுத்த மாட்டேன்
பிடித்திருந்தால்
ஏற்றுக் கொள்ளட்டும்
பிடிக்காவிட்டால்
ஏற்றுக் கொள்ள
தேவையில்லை என்று
விட்டு விடுவேன் “

“துரியோதனா
நான் அறிவுரை
சொல்லும் போது
நீ கேட்கவில்லை
என்பதற்காக நான்
கோபப்படவில்லை
அதற்காக நான்
கோபப்படவும்
மாட்டேன் - ஆனால்
நீ என்னை
அவமானப் படுத்தும்
வகையில்
நடந்து கொண்டாய்
நீ என்னை மட்டும்
அவமானப்
படுத்தவில்லை
இந்த உலகத்தில்
உள்ள அனைத்து
முனிவர்களையும்
அவமானப்படுத்தி
இருக்கிறாய் “

“உன்னுடைய
தொடையை
தட்டி விட்டு
விட்டு ஆணவத்துடன்
அலட்சியமாக
சிரித்துக் கொண்டு
உன்னுடைய கால்களை
தரையில் தேய்த்து
விட்டு ஒன்றும்
தெரியாதது போல்
தலையை தரையில்
தொங்கப் போட்டுக்
கொண்டு நின்று
விட்டாய் என்னை
இழிவு படுத்தும்
வகையில்
நடந்து கொண்ட
செயலுக்குரிய
தண்டனையை நீ
அனுபவித்தே
ஆக வேண்டும்”

(கோபத்தால் அவருடைய
கண்கள் சிவந்தன
துரியோதனனுக்கு
சாபம் கொடுக்க
முடிவு செய்து
தண்ணீரை கைகளில்
கொட்டி அதனை
துரியோதனன்
இருக்கும் இடம்
நோக்கி தெளித்து
கோபத்துடன்
பேசத் தொடங்கினார்)

மைத்ரேயர் :
“என்னை
அவமானப்படுத்தும்
வகையில்
நடந்து கொண்ட
காரணத்திற்காக
துரியோதனான
உனக்கு நான்
சாபம் இடுகிறேன்
மைத்ரேய முனிவனான
நான் துரியோதனான
உனக்கு
சாபம் இடுகிறேன்”

“உன்னுடைய
தவறுகளால்
நடக்கப் போகும்
மாபெரும் போரில்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே
நடக்கப் போகும்
பெரும் போரில்
உன்னுடைய தொடை
உடைக்கப்பட்டு
அதன் காரணமாகத்
தான் நீ இறப்பாய்
உன்னுடைய இறப்பு
இப்படித் தான் இருக்கும்
இப்படித் தான்
உன்னுடைய
மரணம் இருக்கும்”

(என்று மைத்ரேயர்
முனிவர் துரியோதனனை
சபித்தார்)

(அதனால் அதிர்ச்சியுற்ற
திருதராஷ்டிரன்
மைத்ரேயருடைய
கோபத்தை
தணிப்பதற்காகவும்
முனிவரை சமாதானப்
படுத்துவதற்காகவும்
முனிவர்
துரியோதனனுக்கு
கொடுத்த சாபத்திற்கு
சாபவிமோசனம்
அளிக்க வேண்டும்
என்பதற்காகவும்
முனிவரை
சமாதானப் படுத்த
திருதராஷ்டிரன்
முனிவரின்
அருகில் வந்தார்)

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment