July 07, 2020

அறிய வேண்டியவை-பதிவு-87


               ஜபம்-பதிவு-579
          (அறிய வேண்டியவை-87)

துரியோதனன் :
“மரணத்தைப் பார்த்தே
பயப்படாதவன்
இந்தத் துரியோதனன்
வரும் தோல்வியைப்
பார்த்தா பயந்து
விடுவான்”

“எனக்கு ஆதரவாக
இருந்தவர்கள்
அனைவரும் என்னை
விட்டு விட்டு
சென்றாலும்
நான் யாருடைய
ஆதரவும் இல்லாமல்
தனியாக நின்றாலும்
எனக்கு உதவி
செய்வதற்கு ஒருவர்
கூட இல்லை
என்றாலும்
நான் துவண்டு
போக மாட்டேன்
மன வேதனையால்
பித்தனாக மாட்டேன்
பைத்தியமாக சுற்றித்
திரிய மாட்டேன்”

“ஒன்று நான் இந்த
உலகத்தில் உயிரோடு
இருக்க வேண்டும்
அல்லது பாண்டவர்கள்
இந்த உலகத்தில்
உயிரோடு
இருக்க வேண்டும்”

கிருஷ்ணன் :
“இவ்வளவு தெளிவாக
பேசும் நீ ஏன்
பிறந்த மேனியாக
சுற்றிக் கொண்டு
இருக்கிறாய்”

துரியோதனன் :
“ஒரு விஷயமாக
போய்க்
கொண்டிருக்கிறேன்”

கிருஷ்ணன் :
“என்ன விஷயமாகப்
போய்க்
கொண்டிருக்கிறாய்?”

துரியோதனன் :
“என்னுடைய தாயைக்
காண சென்று
கொண்டிருக்கிறேன்”

கிருஷ்ணன் :
“தாயைப் பார்க்க
இப்படியா ஒரு
மகன் பிறந்த
மேனியாக செல்வது “

துரியோதனன் :
“என்னுடைய தாயின்
கட்டளையை
ஏற்றுத் தான்
இப்படி சென்று
கொண்டிருக்கிறேன்”

கிருஷ்ணன்  :
“உன்னுடைய தாய்
தான் உன்னை
இப்படி பிறந்த
மேனியாக
தன் முன்னால்
வரச் சொன்னார்களா?”

“கதாயுத போரில்
உன்னை வெல்வதற்கு
இந்த அவனியில்
யாரும் இல்லை
என்று சொல்லத்
தக்கவிதத்தில்
சிறப்புப் பெற்றவன் நீ!”

“இந்த உலகத்தில்
உள்ள மாபெரும்
வீரர்களில் ஒருவனாக
திகழ்பவன் நீ!”

“அஞ்சாத நெஞ்சுரம்
கொண்டவனாக
இருப்பவன் நீ!”

“எதையும்
சிந்தித்துப் பார்த்து
முடிவெப்பவன் நீ”

“அப்படிப்பட்ட நீயா
இப்படி சிந்திக்காமல்
முடிவு எடுப்பாய்”

துரியோதனன் :
“எதை நான்
சிந்திக்கவில்லை
என்கிறீர்கள்”

கிருஷ்ணன் :
“உன்னுடைய தாயின்
முன்னால் நீ
பிறந்த மேனியாக
செல்வதைத் தான்
நீ சிந்திக்காமல்
எடுத்த முடிவு
என்கிறேன் “

துரியோதனன் :
“தாய் ஒரு செயலைச்
செய்யச் சொல்லி விட்டு
நான் அதைச்
செய்யாமல் விட்டால்
தாய் சொல்லைத்
தட்டியவன்
ஆக மாட்டேனா?”

கிருஷ்ணன் :
“தாய் மகனுக்கு
இடும் கட்டளைகள்
அனைத்தையும் மகன்
செய்ய வேண்டும்
என்ற அவசியம் இல்லை”

“எதை செய்ய வேண்டும்
எதைச் செய்யக் கூடாது
என்ற ஒரு
நியதி இருக்கிறது “

“உன்னுடைய தாய்
உன்னுடைய
நிலையைக் கண்டு
மன வேதனையுற்று
ஏதோ சொல்ல
நினைத்து ஏதோ
சொல்லி இருக்கலாம்”

“மனக் குழப்பத்தில்
வார்த்தையில்
தடுமாற்றம்
ஏற்பட்டு இவ்வாறு
சொல்லி இருக்கலாம்”

“உன்னுடைய தாயின்
மன வேதனையில்
வெளிப்பட்ட
வார்த்தையின்
தடுமாற்றங்களாகக் கூட
இந்த வார்த்தைகள்
இருக்கலாம் “

“உன்னுடைய தாய்
அறியாமல் சொன்ன
வார்த்தைகளாகக் கூட
இந்த வார்த்தைகள்
இருக்கலாம் “

“உன்னுடைய தாய்
சொன்னதை நீ
அப்படியே செய்தால்
உனக்கு பாவம்
பிடிக்காதா?”

துரியோதனன் :
“எனக்கு பாவம்
பிடிக்குமா – எப்படி
பிடிக்கும்”

கிருஷ்ணன் :
“ஆமாம் உனக்கு
பாவம் தான் பிடிக்கும்
பாவம் தரக்கூடிய
செயலைத் தான் நீ
செய்யச் செல்கிறாய்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 07-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment