June 26, 2022

ஜபம்-பதிவு-790 (சாவேயில்லாத சிகண்டி-124)

 ஜபம்-பதிவு-790

(சாவேயில்லாத

சிகண்டி-124)

 

கௌசவி :

அப்படி என்றால்

எது நடைமுறைக்கு

சாத்தியம்

 

சிகண்டினி :

யோசித்துப்

பார்த்தால்

இருவருக்குமே

தெரியும்

 

கௌசவி :

யோசித்துப்

பார்த்த

பிறகு தான்

பேசுகிறேன்

 

சிகண்டினி :

யோசித்துப் பார்த்து

இருந்தால் இவ்வாறு

பேசி இருக்க

மாட்டீர்கள்

 

துருபதன் :

நாங்கள்

சொல்வதை

நீ ஏன் புரிந்து

கொள்ள

மறுக்கிறாய்

 

சிகண்டினி :

நீங்கள்

சொல்வதை

நான் புரிந்து

கொண்டேன்

 

ஆனால் நான்

சொல்வதைத்

தான் நீங்கள்

புரிந்து கொள்ள

மறுக்கிறீர்கள்

 

துருபதன் :

சிகண்டினி

உனக்கு பெண்

கொடுப்பதற்காக

பேரரசர்கள் முதல்

சிற்றரசர்கள் வரை

ஏராளமான அரசர்கள்

வரிசையில் காத்துக்

கொண்டு

இருக்கிறார்கள்

 

பெரும்பாலான

இளவரசிகள்

உன்னைத் தான்

திருமணம் செய்து

கொள்ள விரும்புவதாக

தங்களுடைய

ஆசையை

வெளிப்படுத்திய

வண்ணம்

இருக்கின்றனர்

 

உன்னைத் திருமணம்

செய்து கொள்ளும்

விஷயத்தில்

இளவரசிகளிடையே

பெரும் போட்டியே

நடந்து

கொண்டிருக்கிறது

 

இருந்தாலும்

நாங்கள்

அனைத்து

விஷயங்களையும்

ஆராய்ந்து

பார்த்த பிறகே

உன்னுடைய

அறிவுக்கும்

திறமைக்கும்

வீரத்திற்கும்

பொருத்தமாக

தசார்ண தேசத்து

அரசன்

ஹிரண்யவர்மன்

மகளை உனக்கு

திருமணம் செய்து

வைக்க தேர்வு

செய்திருக்கிறோம்

 

அவளைத் தான்

உன்னுடைய

மனைவியாக்க

முடிவு

செய்திருக்கிறோம்

 

அவளுடன்

தான் நீ உன்

குடும்ப

வாழ்க்கையைத்

தொடங்க

வேண்டும் என்று

விரும்புகிறோம்

 

சிகண்டினி :

எனக்கு பெண்

கொடுக்க விரும்பும்

அரசர்களுக்கும்

என்னைத் திருமணம்

செய்து கொள்ள

விரும்பும்

இளவரசிகளுக்கும்

நான் பெண்

என்பது தெரியுமா

 

துருபதன் :

தெரியாது

 

சிகண்டினி :

தெரிந்தால்

உங்களை

மட்டுமல்ல

என்னையும்

கேவலமாகப்

பேசுவார்கள்

 

துருபதன் :

சிகண்டினி

முதலில்

நாங்கள்

சொல்லும்

பெண்ணைத்

திருமணம்

செய்து கொள்

 

திருமணம்

முடிந்தவுடன்

உன்னுடைய

மனைவியிடம்

தனிமையில் பேசு

 

கடவுளிடம்

எனக்கு ஒரு

வேண்டுதல்

இருக்கிறது

அது நிறைவேற

வேண்டும்

என்பதற்காக

கடவுளை

நோக்கி தவம்

செய்கிறேன்

 

தவத்தின் பலன்

முழுமையாகக்

கிடைக்க

வேண்டும்

என்பதற்காக

விரதம்

மேற்கொள்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----26-06-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment