June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-39


              ஜபம்-பதிவு-531
         (அறிய வேண்டியவை-39)

அஸ்வத்தாமன் :
“நீங்கள் சொல்லும்
எந்த ஒரு வார்த்தையும்
என்னுடைய காதில்
விழவில்லை ;
நீங்கள் சொல்வதை
கேட்கும் நிலையில்
நானும் இல்லை ;
வஞ்சனை சூழ்ச்சி
நயவஞ்சகம்
ஆகியவற்றை
கண்டு என்னுடைய
இதயம் வேதனையால்
துடித்துக்
கொண்டிருக்கிறது ;
அமைதி இழந்து
தவிக்கிறேன் ;
நிம்மதி இல்லாததால்
வாடுகிறேன் ;
கோபமும் பழி
வாங்கும் எண்ணமும்
என்னுடைய மனதில்
குடிகொண்டிருக்கும்
போது நிம்மதி என்பது
எனக்கு எப்படி ஏற்படும் ;
நிம்மதி என்பது மனதில்
இருந்தால் தானே
எனக்கு தூக்கம் வரும் ;
தூக்கம் இழந்து
தவிக்கிறேன் ;
துயரத்தால் வாடுகிறேன் ;”

“பாண்டவர்களை
அழிக்க வேண்டும் என்ற
எண்ணம் மட்டுமே
என்னுடைய மனதில்
இருக்கிறது ;
அவர்களை அழித்தால்
தான் எனக்கு
உறக்கம் வரும் ;”

“அதனால்
பாண்டவர்களை
அழிப்பதற்காக
செல்கிறேன்
நீங்கள் விருப்பப்பட்டால்
நான் செய்வது சரி
என்று நீங்கள்
நினைத்தால் என்னைப்
பின் தொடருங்கள் “

(அஸ்வத்தாமன் ரகத்தில்
ஏறி கிளம்பத்
தயாரானான்)

கிருபர் :
“அஸ்வத்தாமா
தனியே செல்லாதே
நாங்களும்
உன்னுடன் வருகிறோம் “

அஸ்வத்தாமன் :
“வந்து
என்னுடைய
தேரில் ஏறுங்கள்”

(என்று
சொல்லிக் கொண்டே
அஸ்வத்தாமன் தேரை
ஓட்டினான் - கிருபர்
கிருதவர்மன் ஆகியோர்
தேரில் ஏறி
வந்து நின்று
கொண்டனர் மூவரும்
பாண்டவர்களின் பாசறை
நோக்கிச் சென்றனர்)

அஸ்வத்தாமன் :
“நீங்கள் இருவரும்
வெளியில் நில்லுங்கள்  ;
நான் உள்ளே சென்று
கலகத்தை
உண்டாக்குகிறேன் ;
பயத்தை
ஏற்படுத்துகிறேன் ;
பீதியை
அனைவருடைய
மனதிலும்
விதைக்கிறேன் ;”

(என்று சொல்லி
விட்டு அஸ்வத்தாமன்
பாண்டவர்களின்
பாசறையின்
தலைவாசலில்
வந்து நின்றான் ;
தலைவாசலை
மறைத்துக் கொண்டு
ஒரு ராட்சத உருவம்
கொண்ட பூதம் ஒன்று
நின்று கொண்டிருந்தது ;
பாம்புப் பூணூலும் ;
புலித்தோலுடையும் ;
ஆயுதம்
ஏந்திய கரங்களும் ;
கூரிய பற்களை
உடைய வாயும் ;
நெருப்பு மழை
பொழிகின்ற கண்களும் ;
உடைய அந்த பூதம்
தலைவாசலை வழி
மறித்து நின்று
கொண்டிருந்தது)

அஸ்வத்தாமன் :
“யார் நீ ஏன்
இங்கு நிற்கிறாய் “

பூதம் :
“நான் காவலுக்கு
நிற்கிறேன் “

அஸ்வத்தாமன் :
“உன்னை காவலுக்கு
வைத்து விட்டு
தூங்கப் போய்
விட்டனரா அந்தக்
கோழை பாண்டவர்கள் “

பூதம் ;
“அனைவரும் தூங்கும்
வேளையில் கவசத்தை
எல்லாம் கழற்றி
வைத்து விட்டு
தூங்கும் வேளையில்
ஆயுதம்
ஏதும் இல்லாமல்
தூங்கும் வேளையில்
வந்து தாக்குகிறாயே
நீ கோழை இல்லையா?”

அஸ்வத்தாமன் :
“கோழைகளை
கோழைத்தனமாகத் தான்
கொல்ல வேண்டும் ;
வீரத்தைப் பயன்படுத்தி
கோழைகளைக்
கொல்லக்கூடாது ;”

பூதம் :
“பாண்டவர்களை ஏன்
கோழைகள் என்கிறாய்”

அஸ்வத்தாமன் :
“பீஷ்மரையும்
என்னுடைய
தந்தையான
துரோணரையும்
கோழைத்தனமாகத்
தானே கொன்றார்கள்
பாண்டவர்கள்”

“அவர்களை
கோழைகள்
என்று சொல்லாமல்
வேறு எப்படி
சொல்ல முடியும்?’

“பாண்டவர்களாகிய
கோழைகளுக்கு
கோழைகளுக்குரிய
மரணத்தைத் தான்
தர வேண்டும்
அவர்களுக்கு வீர
மரணத்தைத்
தரக்கூடாது
என்னை தடுக்காதே
என்னை உள்ளே
செல்ல அனுமதி”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment