June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-44


               ஜபம்-பதிவு-536
        (அறிய வேண்டியவை-44)

“துரோணர் அதை
முதலில்
அர்ஜுனனுக்குத்
தான் கற்றுக்
கொடுத்தார்
அஸ்வத்தாமன் அதை
தனக்கும்
அளிக்கும் படி
வற்புறுத்திப் பெற்றான் “

“அஸ்வத்தாமன்
தந்திரக் காரன்
தான் செய்ய நினைக்கும்
காரியத்திற்காக
எத்தகைய எல்லைக்கும்
செல்லக் கூடியவன்
தவறு என்று
தெரிந்தாலும்
தன்னுடைய காரியத்தை
முடிப்பதற்காக
எத்தகைய செயலையும்
செய்யக் கூடியவன் “

“ஒருமுறை என்னைப்
புகழ்ந்து என்னுடைய
சக்ராயுதத்தைத்
தரும்படி கேட்டவன்”

“ஆகவே
அஸ்வத்தாமனிடம்
இருந்து பீமனைக்
காப்பாற்ற வேண்டும்
என்றால் அர்ஜுனன்
அங்கு உடனே
செல்ல வேண்டும்”

(கிருஷ்ணன்
தன்னுடைய ரதத்தில்
ஏறி அமர அர்ஜுனனும்
யுதிஷ்டிரரும்
அவரோடு கிளம்பினர்)

(வியாசரின் ஆசிரமம்)

வியாசர் :
“தூங்கிக்
கொண்டிருந்தவர்களைக்
கொன்றது பாவம் தான்
நீ உன்னுடைய
குலத்திற்கு மிகப்பெரிய
அவமானத்தைத்
தேடித் தந்திருக்கிறாய் ;
நீக்க முடியாத
களங்கத்தை
ஏற்படுத்தி இருக்கிறாய் ;
நீ செய்த இந்த
காரியத்திற்கு
நீ கண்டிப்பாக
பிராயச்சித்தம் செய்து
தான் ஆக வேண்டும் ;
ஆனால் நீ
நினைப்பது போல்
பாண்டவர்கள்
ஐவரையும்
நீ கொல்லவில்லை
உன்னால்
பாண்டவர்களை
கொல்ல முடியாது
பாண்டவர்கள்
உன்னுடைய கையால்
சாகவும் மாட்டார்கள்
நீ கொன்றது
திரௌபதியின்
ஐந்து புதல்வர்களை
திரௌபதியின் ஐந்து
புதல்வர்களைத் தான்
நீ கொன்றிருக்கிறாய் “

(அதிர்ச்சியுற்றான்
அஸ்வத்தாமன்)

அஸ்வத்தாமன் :
“நான் செல்கிறேன்
என்னுடைய கடமை
இன்னும்
முடியவில்லை ;
நான் செய்ய
வேண்டிய
கடமை இன்னும்
பாக்கியிருக்கிறது ;
என்னுடைய கடமை
பாதியில் நின்று
கொண்டிருக்கிறது ;
கடமை பாதியில் நின்று
கொண்டிருக்கும்போது
என்னால் பிராயச்சித்தம்
செய்ய முடியாது ;
பாண்டவர்களைக்
கொல்லும் போது தான்
என்னுடைய கடமை
முழுமை பெறும் ;
பாண்டவர்களைக்
கொன்று என்னுடைய
கடமையை முடித்த
பிறகு நான்
வந்து பிராயச்சித்தம்
செய்து கொள்கிறேன்
பாண்டவர்கள்
ஐவரையும்
கொல்வதற்காகச்
செல்கிறேன்
அவர்களைக்
கொன்று விட்டு வந்து
உங்களைச்
சந்திக்கிறேன்
பிறகு நீங்கள்
பிராயச்சித்தம் எப்படி
செய்வது என்று
சொன்னால் போதும் “

(அங்கு பீமன்
வருகிறான்)

பீமன் :
“அஸ்வத்தாமா!
கோழைத்தனமான
வேலையைச் செய்து
கோழை போல்
ஏன் ஒளிந்து
கொள்கிறாய் ;
கோழை போல்
ஏன் பதுங்கிக்
கொள்கிறாய் ;
இரவில் இருளில்
மறைந்து இருந்து
தாக்குவது தான்
உன்னுடைய வீரமா?
கோழை போல்
ஒளிந்து இருந்து
தாக்குவதைத் தான்
உன்னுடைய
தந்தையிடமிருந்து
கற்றாயா?
உன்னுடைய தந்தை
ஒளிந்து இருந்து தான்
தாக்க வேண்டும்
என்பதை - உனக்குக்
கற்றுக் கொடுத்தாரா ?”

“கோழையே
வெளியே வா - பீமன்
வந்திருக்கிறேன்
நேருக்கு நேராக மோத
வந்திருக்கிறேன்
முனிவரின் பின்னால்
ஒளிந்து
கொண்டிருக்கும் கோழையே
வெளியே வா”

அஸ்வத்தாமன் :
“என்னுடைய
தந்தையைப்
பற்றி பேசுவதற்கு
பாண்டவர்களாகிய
உங்களுக்கு
அருகதை இல்லை”

“சதி செய்து
என்னுடைய தந்தையை
கோழை போல்
கொன்றவர்கள்
என்னை கோழை
என்று சொல்வதற்கு
அருகதை இல்லை ;
என்னுடைய தந்தையுடன்
நேருக்கு நேராக
நின்று போரிட
முடியாமல் தான்
அவரை சூழ்ச்சி செய்து
கோழை போல்
கொன்றீர்கள் ;
கோழை என்பதற்கு
இலக்கணம் வகுத்ததே
பாண்டவர்கள் தானே “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment