June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-48


              ஜபம்-பதிவு-540
        (அறிய வேண்டியவை-48)

“நீ செய்த
கர்மாக்களின்
பலனை
எப்படி
அனுபவிப்பாய்
என்று சொன்னேன்”

“செய்த வினை
செய்தவனை சும்மா
விடாது என்பது
உனக்குத் தெரியாதா?”

“உலகத்தின் எந்த
மூலைக்குச்
சென்றாலும்
நீ செய்த
கர்மாவின்
விளைவிலிருந்து
தப்பிக்க முடியாது
என்பது
உனக்குத்
தெரியாதா?”

“மனித குலத்திற்கு
எதிராக நீ செய்த
மிகப்பெரிய பாவம்
கர்மாவாக
உருவெடுத்து  
உன்னை
அலைக்கழிக்கக்
காத்துக்
கொண்டிருக்கிறது”

“உன்னை நிம்மதி
இல்லாமல் அலைய
வைக்கக் காத்துக்
கொண்டிருக்கிறது”

“செய்த வினையின்
விளைவை
அனுபவிக்கக்
காத்துக் கொண்டிரு”

அஸ்வத்தாமன் :
“என்னை
காப்பாற்றுவதற்கு
யாரும் இல்லையா
முனிவரே யாராலும்
என்னைக்
காப்பாற்ற
முடியாதா
நீங்களாவது
என்னைக்
காப்பாற்றுங்கள்
முனிவரே”

வியாசர்:
கிருஷ்ணன்
சொல்லியவை
அனைத்தும் சத்தியம்
அவர்
சொல்லியவைகள்
அனைத்தையும் நீ
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்
செய்த வினையின்
விளைவை
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் “

கிருஷ்ணன் :
“பெரியண்ணா
அந்த ரத்தினத்தை
எடுத்துக்
கொள்ளுங்கள்
நமக்கு ஒரு
முக்கியமான
வேலை
காத்துக்
கொண்டிருக்கிறது ;
அதை செயல்படுத்த
நேரம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது ;
கால தாமதம்
செய்ய வேண்டாம் ;
உடனே செல்லலாம்
வாருங்கள் “

தர்மர் :
“எங்கே?”

கிருஷ்ணன் :
“உத்தரையிடம்”

(உத்தரை
கூடாரத்தில்
அமர்ந்து கொண்டு
இருக்கிறாள்
அப்பொழுது ஒரு
புல் வந்து
விழுகிறது
உத்தரை துடிக்க
ஆரம்பிக்கிறாள்
ஐயோ வலி
உயிர் போகிறதே
சுபத்திரை
திரௌபதி
ஆகியோர்
ஓடி வருகிறார்கள்
வைத்தியர் ஓடி
வருகிறார்)
 
வைத்தியர் :
“வயிற்றிலேயே
குழந்தை இறந்து
விட்டது - இறந்த
குழந்தை தாயின்
வயிற்றிலிருந்து
பிரிந்து வர
வேண்டும்
அவ்வாறு
வரவில்லையெனில்
இறந்த குழந்தையை
தாயின்
வயிற்றிலிருந்து
பிரித்து எடுக்க
வேண்டும்
குழந்தையை
எடுக்காவிட்டால்
தாயின் உயிருக்கு
ஆபத்து “

திரௌபதி :
“உடனே செய்யுங்கள்”

(வைத்தியர்  
உத்தரையிடமிருந்து
இறந்த
குழந்தையை
பிரித்து எடுத்து
உத்தரையின்
அருகில்
வைக்கிறார்)

(திரௌபதி
சுபத்திரை
உத்திரை மற்றும்
அங்குள்ள
அனைவரும்
துக்கத்தின்
மிகுதியால்
அழுது
கொண்டிருந்தனர்
அந்த நேரம்
பார்த்து கிருஷ்ணன்
உள்ளே வருகிறார்)

உத்தரை :
“பார்த்தீர்களா மாமா
அவர்களே எனக்கு
இருந்த ஒரே
நம்பிக்கையும்
என்னை விட்டுப்
போய் விட்டது
நான் யாருக்காக
வாழ வேண்டும்
என்று நினைத்தேனோ
அந்த குழந்தையும்
இறந்து விட்டது
இனி இந்த
உலகத்தில் நான்
யாருக்காக
வாழ வேண்டும்
நான் வாழ்வதால்
யாருக்கும்
எந்த பயனும்
இல்லை - என்
வாழ்க்கை இருளால்
சூழப்பட்டு விட்டது
என்ன செய்வேன்
சொல்லுங்கள்
மாமா அவர்களே”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment