June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-42


              ஜபம்-பதிவு-534
        (அறிய வேண்டியவை-42)

(வெற்றிக் களிப்புடன்
வெளியே வந்தான்
அஸ்வத்தாமன்

அவனை கிருபரும்
கிருதவர்மனும்
வரவேற்றனர்)

கிருபர் :
“நாம் வெற்றி
பெற்று விட்டோம்
அஸ்வத்தாமா - நீ
நினைத்ததை முடித்து
விட்டாய் - நீ
எண்ணியதை செய்து
காட்டி விட்டாய் “

“யாரும் நிகழ்த்த
முடியாததை நிகழ்த்தி
காட்டி  விட்டாய்”

கிருதவர்மன் ;
“கொல்ல முடியாத
பாண்டவர்களையே
கொன்று விட்டாய் ;
சரித்திரம்
படைத்து விட்டாய் ;
வீரன் என்று
நிரூபித்து விட்டாய் ;”

“பாண்டவர்கள் இறந்த
இந்த நற்செய்தியை
துரியோதனனிடம்
சொல்வோம் வா!”

(என்று
அஸ்வத்தாமனை
அழைத்துக் கொண்டு
கிருபர் கிருதவர்மன்
ஆகிய மூவரும்
துரியோதனன்
இருக்கும் இடம்
சென்றனர் ;
துரியோதனனை
நெருங்கிய போது
துரியோதனன்
கொஞ்சம்
கொஞ்சமாக இறந்து
கொண்டிருந்தான்
துரியோதனன்
அருகில் சென்றான்
அஸ்வத்தாமன்)

அஸ்வத்தாமன் :
“துரியோதனா
உனக்காக - நான் பழி
வாங்கி விட்டேன்  ;
என்னுடைய
தந்தையை சதி
செய்து கொன்ற
அந்தக் கோழைப்பயல்
திருஷ்டத்யும்னனை
கொன்றேன் “

“பீஷ்மரை சதி
செய்து கொன்ற
சிகண்டியைக்
கொன்றேன்”

“நல்லவர்கள் என்று
சொல்லிக் கொண்டு
திரிந்து
கொண்டிருக்கும்
அந்த
கோழைப்பயல்கள்
பாண்டவர்கள்
ஐவரையும் கொன்றேன் ;
பாஞ்சாலர்கள்
அனைவரையும்
கொன்றேன் ;”

“உனக்காகத் தான்
நான் இவைகள்
அனைத்தையும்
செய்தேன் ;
உன்னுடைய
நட்புக்காகத் தான்
இவைகள்
அனைத்தையும்
செய்தேன் ;
உனக்கு நான்
பட்ட நன்றிக்கடனை
அடைப்பதற்காகத் தான்
இவைகள்
அனைத்தையும்
செய்தேன் ;”

“தூங்கிக்
கொண்டிருந்தவர்களை
கொன்றது
கோழைத்தனம் தான்
தூங்கிக்
கொண்டிருந்தவர்களைக்
கொன்று மிகப்பெரிய
பாவத்தைச்
செய்து இருக்கிறேன் “

“அதற்கு நான்
பிராயச்சித்தம்
செய்ய வேண்டும்
என்னுடைய பாவத்தைப்
போக்குவதற்கு நான்
என்ன பிராயச்சித்தம்
செய்ய வேண்டும்
என்று வியாசரிடம்
கேட்க இருக்கிறேன் ;
அவர் வசிக்கும்
இடத்திற்கு செல்ல
இருக்கிறேன் ;
பிராயச்சித்தம்
செய்வதற்கு
என்ன வழி என்று
அவரை கேட்க
இருக்கிறேன் ;
அதனால் அவரைச்
சந்திக்க செல்ல
இருக்கிறேன் ;”

“அதற்கு முன் உனக்கு
இந்த செய்தியை
சொல்வதற்காகவே
வந்தேன் “

(இவைகள்
அனைத்தையும்
கேட்டுக் கொண்டிருந்த
துரியோதனன் மெதுவாக
பதில் அளிக்கத்
துவங்கினான்)

துரியோதனன் :
“பீஷ்மர் துரோணர்
கர்ணன் ஆகியோர்
மட்டுமல்லாது
மிகப்பெரிய
வீரர்களாலும்
செய்ய முடியாத
மிகப்பெரிய காரியத்தை
நீ செய்து விட்டாய்  ;
இப்போது தான்
என்னுடைய மனம்
அமைதி கொள்கிறது ;
நான் உங்களை விட்டு
விடை பெறுகிறேன் “

(இதைக் கூறிய பின்
துரியோதனனின் ஆத்மா
அவனை விட்டு
பிரிந்து சென்றது ;
போருக்கு
காரணமாக
இருந்தவன்
போரை
வழிநடத்தியவன்
போரில் முதலாவதாக
பங்கேற்றவன்
போரில் கடைசியாக
உயிர் நீத்தான்
யாராலும் வெல்ல
முடியாத அந்த
மாவீரனான
துரியோதனன்
இந்த உலகத்தை விட்டு
பிரிந்து சென்றான்
அஸ்வத்தாமன்
துரியோதனன் உடலுக்கு
செய்ய வேண்டிய
காரியங்களைச் செய்தான்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment