June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-47


             ஜபம்-பதிவு-539
       (அறிய வேண்டியவை-47)

அஸ்வத்தாமன் :
“நான் விட்ட
பிரம்மாஸ்திரத்தின்
பாதையை என்னால்
மாற்ற முடியும் ;
என்னுடைய
பிரம்மாஸ்திரம்
பாண்டவர்களை
அழிக்கத் தான்
செலுத்தினேன்
என்னுடைய
பிரம்மாஸ்திரம்
பாண்டவர்களை
அழிக்கக்கூடாது
என்றால்
அவர்களுடைய
வழிதோன்றல்களை
அழிக்கட்டும் ;
என்னுடைய
பிரம்மாஸ்திரம்
பாண்டவர்களுடைய
குலத்தின் வித்துக்களை
அழிக்கட்டும் “

கிருஷ்ணன் :
“அஸ்வத்தாமா
உன்னைப்போல்
அறிவு கெட்டவனை
நான் என்னுடைய
வாழ்க்கையில்
கண்டதேயில்லை  ;
எவ்வளவு
தவறானவனாக
இருக்கிறாய்
எத்தகைய
தவறான எண்ணம்
கொண்டவனாக
இருக்கிறாய்
கீழ்த்தரமான
எண்ணத்தை
மனதில் கொண்டு
வெளியில் நல்லவன்
மாதிரி திரிந்து
கொண்டிருக்கிறாயே”

“பாண்டவர்களை
அழிக்க முடியவில்லை
என்பதற்காக
அவர்களுடைய
குலத்தை
அழிக்கலாம் என்று
நினைத்துவிட்டாயா?”

“அபிமன்யுவின்
மனைவி உத்தரையின்
வயிற்றில் இருக்கும்
குழந்தையை
கொல்வதற்கான
செயலைச் செய்து
இருக்கிறாய்”

“உத்தரையின்
வயிற்றில் இருக்கும்
குழந்தையை - உன்னால்
கொல்ல முடிந்தால்
என்னால் உயிர்ப்பிக்க
முடியும் என்பதை
மறந்து விட்டாயா?”

“கிருஷ்ணனாகிய நான்
பரமாத்மாவாகிய நான்
பரம்பொருளாகிய நான்
இந்த அண்ட
சராசரங்களை கட்டி
காப்பாற்றிக்
கொண்டிருக்கும் நான்
உத்தரையின் வயிற்றில்
இருக்கும் குழந்தை
இறந்து பிறந்தால்
நான் உயிர்
கொடுக்காமல்
விட்டு விடுவேனா “

“நீ செய்த இந்த
கொடுமையான
செயலுக்கு
இந்த அண்ட
சராசரத்தின்
கடைசி நாள் வரை
நீ இந்த உலகத்தில்
தனியாக அலைந்து
திரிந்து கொண்டிருப்பாய்”

“இந்த உலகத்தில்
உள்ள மக்களின்
இரக்கத்திற்காக
ஏங்குவாய் - யாரும்
உன் மேல் இரக்கம்
காட்ட மாட்டார்கள்”

“யாரும் உன்னைப்
பார்த்து வருத்தப்
பட மாட்டார்கள்”

“பாவத்தின் சுமை
உன்னை அழுத்த
மன நிம்மதி
இல்லாமல்
இந்த உலகத்தில்
அலைந்து திரிந்து
கொண்டிருப்பாய்”

“உனக்கு நிம்மதி
என்பது கிடைக்கவே
கிடைக்காது”

“உன்னுடைய
நெற்றியில்
இருக்கும் ரத்தினம்
இனி உன்னுடைய
நெற்றியில் இருக்கும்
அருகதை அற்றவன் நீ
இனி அந்த ரத்தினம்
உன்னுடைய நெற்றியில்
இருக்கக் கூடாது
அந்த ரத்தினம்
பிடுங்கி எறியப்பட
வேண்டும் - அங்கு
உனக்கு ஒரு
காயம் மட்டுமே
மிஞ்சி இருக்கும் “

கிருஷ்ணன் ;
(கிருஷ்ணன்
தர்மரை நோக்கி )

“பெரியண்ணா
அஸ்வத்தாமனின்
நெற்றியில் இருக்கும்
ரத்தினத்தைப் பிடுங்கி
விடுங்கள் - அதை
வைத்திருக்கும் தகுதி
அற்றவன் அவன்
அவனிடமிருந்து அந்த
ரத்தினத்தைப்
பறித்து விடுங்கள் “

அஸ்வத்தாமன் :
“நீங்கள் யாரும்
பறிக்க வேண்டாம்
நானே தந்து
விடுகிறேன்  

(அஸ்வத்தாமன்
வாளால் அறுத்து
அதை கிருஷ்ணனிடம்
கொடுத்து விடுகிறான்)

(இதைப் பெற்றுக்
கொள்ளுங்கள்
வாசுதேவரே
இதை ஏற்றுக் கொண்டு
என்னுடைய
சாபத்தை நீக்குங்கள்
எனக்கு அளிக்கப்பட்ட
சாபத்திலிந்து
விமோசனம் தாருங்கள்)

கிருஷ்ணன் :
“நான் உனக்கு
அளித்தது
சாபம் கிடையாது
அதனால் நான் உனக்கு
சாப விமோசனம்
அளிக்க முடியாது”

“கர்மாவை செய்து
விட்டு அதன்
விளைவிலிருந்து
யாராலும்
தப்ப முடியாது;
நீ மட்டும் கர்மாவின்
விளைவிலிருந்து
தப்பிக்கலாம்
என்று நினைத்தாயா?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment